பா.ம.க தலைவர் அன்புமணி தான்தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
“தேர்தல் ஆணையத்தில் இருந்து அன்புமணிக்குஅங்கீகார கடிதம் வந்துள்ளது பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்துதேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது பாமகவின் மாம்பழம் சின்னமும் அன்புமணிக்குவழங்கபட்டுள்ளது” என – வழக்கறிஞர் பாலு தகவல்தெரிவித்தார்
வக்பு வாரிய சட்ட திருத்தம் :முழுவதுமாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
மத்திய அரசு வக்பு வாரிய திருத்த சட்டத்தை கொண்டு வந்தது இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை வழக்கு தொடரப்பட்டது உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பு அந்தச் சட்டத்தை முழுமையாக தடை செய்ய மறுத்துவிட்டது ஆனால் முக்கியமான சில அம்சங்களை தடை செய்துள்ளது இந்த தீர்ப்பை காங்கிரஸ் திமுக மற்றும் பல்வேறு கட்சிகள் வரவேற்றுள்ளன முஸ்லிம் அமைப்புகளும் வரவேற்றுள்ளன
விஜய் பேச்சுக்கு கம்யூனிஸ்ட் பதிலடி
பெரிய தியாகம் செய்வதை போல் பேசுகிறார் விஜய்.தியாகத்தை பற்றி அறிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள் மிஸ்டர்.விஜய்” என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர் அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என விஜய் பேசியதற்கு மா.கம்யூ கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்
புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு பொங்கல் முதல் 1000 கிடைக்கும்
தமிழ்நாடு அரசு பெண்களுக்கு உரிமை தொகையை வழங்கி மூன்றாவது ஆண்டு தொடங்குகிறது தற்போது கூடுதலாக சிலருக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர் இதற்காக 18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ஜனவரி முதல் உரிமை தொகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
உடல்நிலையில் முன்னேற்றம்: விரைவில் ‘டிஸ்சார்ஜ்’ ஆகிறார் நல்லகண்ணு
நல்லகண்ணு உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவர் செயற்கை சுவாசம் இல்லாமல் இயற்கையாக சுவாசித்து வருகிறார். வயதுமூப்பு காரணமாக தேவைப்படும் நேரத்தில் மட்டும் அவ்வப்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கிறோம். நல்லகண்ணு இயல்பு நிலைக்கு திரும்பியதும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்றார்கள்.
தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்’ – மு.க.ஸ்டாலின்
தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட அண்ணாவின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழன்னை தந்திட்ட தலைமகன்! திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா. தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!” என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரு 2000 திட்டம் தொடக்கம்
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 18 வயது நிறைவடையும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படுவதோடு, அவர்களது உயர்கல்விக்கும் அரசு உதவி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
செங்கோட்டையன் கெடு முடிந்தது
ஹரித்துவார் செல்வதாக டெல்லி சென்று விட்டு வந்த செங்கோட்டையன் அதன்பிறகு மௌனமாகி விட்டார். எடப்பாடிக்கு விதித்திருந்த 10 நாள் கெடு முடிந்து விட்ட நிலையில் இன்று ஏதாவது ஒரு முடிவை அறிவிப்பார் என்று தொண்டர்கள் ஏராளமான அவர் வீட்டு முன் குவிந்திருந்தனர் . அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தொண்டர்களின் கருத்துக்களை புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கட்சி வலிமை பெறுவதற்கும் 2026 ல் வெற்றி பெறுவதற்கு எல்லோரும் இருக்க வேண்டும் என்று வேண்டுகோளை விடுக்கிறேன். பிரிந்தவர்கள் […]
திருப்பு முனை தரும் திருச்சி -விஜய் பேச்சு
திருச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது: அந்தக் காலத்தில் குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டுதான் போருக்கு செல்வார்கள். அதுபோலதான் அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலுக்கு திருச்சியில், இங்கே இப்போது பணியை தொடங்குகிறேன். எம்ஜிஆர் முதல் மாநில மாநாடு நடத்திய இடம் திருச்சி, அறிஞர் அண்ணர் அரசியலில் களமாட விரும்பிய இடம் திருச்சி, பெரியாரும், அண்ணாவும், எம்ஜிஆரும் நேசித்த இடம் திருச்சி. மதச்சார்பின்மைக்கு பெயர்பெற்றது திருச்சி மண்.திருச்சி திருப்புமுனை தரும் என்று கூறினார்.
விஜய் பிரச்சாரத்தில் மைக் கோளாறு.
திருச்சியில் விஜய் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மைக் வேலை செய்யவில்லை. ஸ்பீக்கர்களும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் அவர் பேச்சு தொலைக்காட்சி நேரலைகளில் சரிவர கேட்கவில்லை. மேலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை சுருக்கமாக 20 நிமிடத்தில் முடித்துக் கொண்டார்.