“காரில் வரும்போது கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தேன்” எடப்பாடி
முகத்தை துடைப்பதில் என்ன அரசியல் இருக்கிறது?” முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை கடிதத்தை அமித்ஷாவிடம் கொடுத்தேன்.. அதிமுக உள் கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று அமித்ஷா கூறினார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்
.அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு
தமிழக பாராளுமன்ற கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது அப்போது தேர்தலை சந்திக்க 5 புதிய குழுக்களை தேசிய பொதுச்செயலாளர் சந்தோசம் அமைத்தார் இதில் ஒரு குழு தமிழக அரசியல் நடப்பு சூழலை மக்களிடம் கொண்டு செல்வது குறித்த குழுவாகும் இதற்கு அண்ணாமலை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதுபோல தமிழிசை, வானதி சீனிவாசன், எச் ராஜா போன்றவர்களுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது
வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் வைஷாலியின் ஆர்வமும் அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவைஎதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி. கூறி னார்.
பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த டிரம்ப்
பிரதமர் மோடிக்கு முதல் ஆளாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடினேன். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி ஒரு மகத்தான பணியைச் செய்து வருகிறார். ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்
அமித்ஷாவிடம் பேசியது என்ன? எடப்பாடி விளக்கம்
கடந்த வாரம், செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோரும் உடன் சென்றார். பின்னர் அமித் ஷாவும், பழனிசாமியும் தனியே கலந்துரையாடினர்.பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு […]
காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது காரில் இருந்த கட்சிக் கொடியை அகற்றிவிட்டு, வன்னியர் சங்கத்தின் கொடியை மாற்றியுள்ளார். வன்னியர் இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகள் தினத்தை முன்னிட்டு, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வன்னியர் சங்க கொடியை காரில் பொருத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், கட்சி நிர்வாகிகள் இரண்டாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே, பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் […]
துணை ஜனாதிபதியுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு
அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் தற்போது புதிய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.. இந்தியாவின் துணை ஜனாதிபதியாக கொங்கு மண்டலத்தை சார்ந்த தமிழர் ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தமிழகம் பெற்றுள்ள பெருமை என்று எடப்பாடி பழனிசாமி அவரிடம் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியுடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, பாராளுமன்ற கட்சித் தலைவர் மு. தம்பிதுரை, எம்.பிக்கள் சி.வி.சண்முகம், இன்பதுரை, […]
நேபாள இளைஞர்களை ஒன்று சேர்த்த புதிய செயலி
நேபாளத்தில் அரசு எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினார்கள் அந்த போராட்டத்தின் போது அவர்களுக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும் புதிய செயலி மூலம் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொண்டனர்ட்விட்டர் சமூக வலைதளத்தின் இணை நிறுவனரான ஜாக் டோர்ஸி, கடந்த ஜூலை மாதம் பிட்-சாட் மெசேஜிங் செயலி குறித்து அறிவித்தார். இதை அவரது பிளாக் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த மெசேஜிங் செயலி மூலம் இணையதள இணைப்பின்றியும், செல்லுலார் நெட்வொர்க் சேவையின்றியும், எந்தவித பயனர் கணக்கு இன்றியும், சர்வர்கள் இன்றியும் தகவல் […]
2026-ல் எடப்பாடி தோற்பது உறுதி – தினகரன் பேட்டி
டிடிவி தினகரன் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்எல்ஏக்கள் தானே தவிர பாஜக அல்ல. சசிகலா கூறியதால்தான் 122 பேரும் இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர். நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறியவர்தான் இபிஎஸ் .அவருக்கு நன்றி என்பதே கிடையாது அவர் 2026 தேர்தலில் தோற்பது உறுதி என்று- டிடிவி தினகரன். கூறினார்
பா.ம.க தலைவர் அன்புமணி தான்தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
“தேர்தல் ஆணையத்தில் இருந்து அன்புமணிக்குஅங்கீகார கடிதம் வந்துள்ளது பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்துதேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது பாமகவின் மாம்பழம் சின்னமும் அன்புமணிக்குவழங்கபட்டுள்ளது” என – வழக்கறிஞர் பாலு தகவல்தெரிவித்தார்