அக்சென்ச்சர் நிறுவனத்திலிருந்து 11,000+ ஊழியர்கள் நீக்கம்!

சர்வதேச முன்னணி பெரு நிறுவனங்களில் ஒன்றான அக்சென்ச்சர், உலகம் முழுவதும் உள்ள தன்னுடைய நிறுவனங்களில் பணியாற்றி வந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கடந்த மூன்று மாதங்களில் பணிநீக்கம் செய்திருக்கிறது. செய்யறிவு துறையின் அதிகவேக வளர்ச்சி, பெருநிறுவன தேவைகள் குறைவு போன்றவை இந்த பணி நீக்கத்துக்குக் காரணமாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அதிமுக பாஜக சந்தர்ப்பவாத கூட்டணி -விஜய் தாக்கு

நாமக்கல் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறியதாவது:-அதிமுக பாஜக இடையே ஏற்பட்டு இருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி அதேசமயம் திமுக குடும்பமும் பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது எனவே தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி அதை பார்த்துவிடலாம் என்று விஜய் கூறினார்

கரூரில் விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு அனுமதி மறுப்பு

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு தேர்வு செய்த 2 இடங்களுக்கும் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது பரிந்துரைத்த இடத்திற்கு மாறாக வேலுச்சாமிபுரத்தை தேர்வு செய்ய கரூர் மாவட்ட போலீசார் அறிவுறுத்தினர்

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

2026 தமிழகசட்டப்பேரவை தேர்தல் – பொறுப்பாளராக பாஜக எம்பி பைஜெயந்த் பாண்டா நியமனம் செய்யப்பட்டார் தேர்தல் இணை பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் நியமிக்கப்பட்டார் பீகார் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமனம் செய்யப்பட்டார்

அக்டோபர் 3-ந் தேதியை விடுமுறையாக அறிவிக்க அரசு ஊழியர்கள் கோரிக்கை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- வரும் அக்டோபர் 1-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையாகவும், 2- ந் தேதி விஜய தசமி, அரசு விடுமுறையாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறை நாட்கள் முறையே புதன் மற்றும் வியாழக்கிழமையில் வருகின்றன. அடுத்து வரும் 3-ந் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக உள்ளது. அதைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறை நாட்களாக உள்ளன. எனவே 3-ந் […]

காங்கிரஸ் கட்சி தவெக.,வுடன் கூட்டணி அமைக்கும் திட்டம்!

சக்சஸ் எனவும் தகவல்? திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற இருப்பதாகவும் தவெக.,வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்து இருப்பதாகவும் கதர் சட்டைகள் மூலம் தகவல் பரவி வருகிறது. விரைவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்காவை சந்திக்க விஜய் திட்டமிட்ட இருப்பதாக கூறப்படுகிறது

திண்டுக்கல் சீனிவாசனுக்காக ஓரங்கட்டப்படுகிறாரா நத்தம் விசுவநாதன்..?

கட்சியை விட்டுப் போனவர்களுக்கு மீண்டும் கழகத்தில் இடமில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆணித்தரமாக சொல்லி வரும் நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான நத்தம் விசுவநாதனையும் பழனிசாமி ஓரங்கட்ட நினைப்பதாக விசுவநாதனின் விசுவாச வட்டம் விசும்புகிறது. ​திண்​டுக்​கல் மாவட்ட அதி​முக-​வில் நத்​தம் விசுவ​நாதனும், திண்​டுக்​கல் சீனி​வாசனும் இருதுருவ அரசி​யல் நடத்​துபவர்​கள். இதைப் புரிந்​து​கொண்டு சீனி​வாசனுக்கு பொருளாளர் பதவியை​யும், விசுவ​நாதனுக்கு துணைப் பொதுச்​செய​லா​ளர் பதவியை​யும் கொடுத்து இரு​வரை​யும் சரிசம​மாக பாவித்து வந்​தார் பழனி​சாமி.

தமிழ்நாடு காங்கிரஸில் உச்சக்கட்ட குழப்பம் – உடைகிறதா திமுக–காங்கிரஸ் கூட்டணி?

ஈபிஎஸ் விமர்சனங்கள் தீவிரமடைந்து, 2026 தேர்தலுக்கு முன் அரசியல் புயல் கிளப்புகின்றன! தமிழக காங்கிரஸில் உச்சபட்ச குழப்பம் ! சச்சரவுகள் வெளிப்படையாக அதிகரித்துள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக முன்வைக்கும் விமர்சனங்கள், TNCC தலைவர் செல்வப் பெருந்தகையின் தலைமையை சந்தேகத்திற்கு உட்படுத்தியுள்ளன.ஏற்கனவே தூய்மை பணியாளர் திட்டங்களை கோடிக்கணக்கில் கபலிகரம் செய்து வழக்கு நீதிமன்றங்களில் சந்தித்து வரும் செல்வப் பெருந்தகை தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆளாக போகிறாரா? கைது செய்யப் போகிறதா […]

தாம்பரத்தில் அதிக உறுப்பினர்களை சேர்த்த திமுகவினருக்கு வெள்ளி நாணயம் பரிசு.

தாம்பரத்தில் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்த்த 26 திமுக நிர்வாகிகளுக்கு 20 கிராம் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது