டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
டிசம்பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான திட்டத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், அறிவித்தார்.
முன் ஜாமீன் கேட்கும் த வெ க நிர்வாகிகள்
கரூர் உயிர்பலி தொடர்பாக தமிழக வெற்றிக்கான நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் ,நிர்மல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக அவர்கள் உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் கேட்டு மனு செய்துள்ளனர்
கரூர் துயர சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது.
கரூரில் விஜய் பிரச்சாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவர் கைது.* கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தவர் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல் வந்துள்ளது. தற்போது இருவரையும் கரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்
அக்டோபர் 3ஆம் தேதி விடுமுறை
ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை என்று அரசு அறிவித்துள்ளது என்னால் அரசு ஊழியர்களுக்கு ஐந்து நாள் தொடர் விடுமுறை கிடைக்கிறது
வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி – டிரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது வர்த்தக போர் மூலம் பல்வேறு நாடுகளுக்கு 100% வரியை விதித்து வருகிறார் அவர் தற்போது வெளிநாட்டில் தயாராகி அமெரிக்காவில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு 100 % வரி விதித்துள்ளார்.குழந்தையிடம் இருந்து மிட்டாயை திருடுவது போல் அமெரிக்காவின் திரைப்பட வடிவத்தை திருடுகிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்
புரட்சி வெடிக்கும் என பதிவை போட்டு நீக்கிய ஆதவ் அர்ஜுனா
நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து அவரது கட்சியினர் திமுக அரசை தாக்கி சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.தற்போது உண்மைக்கு மாறாக இவ்வாறு பதிவிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் பலர் தங்களை பதிவை அழித்து வருகிறார்கள். .இந்த நிலையில் கட்சியின் முக்கிய பிரமுகரான ஆதல் அர்ஜுனா நேபாளத்தில் நடப்பது போல் புரட்சி நடக்கும் என்று எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார் .அது பெரும் பரபரப்பை […]
அமெரிக்க வெள்ளை மாளிகை அருகில் திடீர் தீ
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரை இஸ்ரேல் பிரதமர் நேதன் யாகு சந்திப்பதற்கு முன்பு வெள்ளை மாளிகை வெளியே நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க உளவுப் படையின் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது.
“திமுக இட்லியும் அதிமுக தோசையும்
திமுக-வில் இருந்து 2 இட்லியையும் அதிமுக-வில் இருந்து 2 தோசையும் பிச்சுப்போட்டு, உப்மா தயார் செய்து சனிக்கிழமை ஊர் ஊராக செல்கிறார் விஜய்” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார்
பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
ஐநா சபையில் பாகிஸ்தான் பிரதமர் பேச்சுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததுஅமைதியை பாகிஸ்தான் விரும்புகிறது என்றால் தீவிரவாதத்தை முற்றிலும் கைவிட வேண்டும். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் அனைத்தையும் அழித்து ஒழிக்க வேண்டும். இந்தியாவிடம் முக்கிய தீவிரவாதிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இந்தியாவுடன் அமைதியை விரும்புவதாக பேசிய பாகிஸ்தான் பிரதமருக்கு, அமெரிக்காவில் நடக்கும் ஐநா கூட்டத்தில் இந்திய பிரதிநிதி பதில் அளித்தார்.
மதப் பிரச்சாரம் செய்ய வந்தவர்கள் மீது திருநீறு பூசிய வழக்கில் நைனார் உதவியாளர் மீது வழக்கு
நெல்லை அருகே ஜெபம் செய்யச் சென்றவர்கள் மீது குங்குமம் பூசியதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் அலுவலக உதவியாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கீழக்கல்லூர், நடுக்கல்லூர் கிராமங்களுக்கு கடந்த 22-ம் தேதி வந்துள்ளனர். அவர்கள் கீழக்கல்லூர் பகுதியில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி, இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மகாதேவன், பாஜகவைச் சேர்ந்த அங்குராஜ் உட்பட 3 பேர் வழிமறித்து, […]