மோந்தா புயலால்ரயில்களின் நேரம் மாற்றம்

மோந்தா புயல் காரணமாக ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை சென்ட்ரல் – ஹவுரா, சென்ட்ரல் – விசாகப்பட்டினம், விழுப்புரம் – காரக்பூர், திருச்சி – ஹவுரா உட்பட 11 ரயில்களின் நேரம் மாற்றம் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது

கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்ட விஜய்

கரூர் நெரிசல் சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்தினர்நேற்று இரண்டு பஸ்களில் பனையூர் வரவழைக்கப்பட்டனர் அவர்களின் தனித்தனியாக 5 நிமிடம் விஜய் சந்தித்து பேசினார் பின்னர் அவர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டார்கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அனைவரிடமும் விஜய் கண்ணீர்மல்க மன்னிப்பு கோரி உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக விஜய் கூறியதாகவும் தெரிகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு […]

திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் – ஓபிஎஸ்

மருது சகோதரர்கள் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி செலுத்தினார் அப்போது அவர் கூறியதாவது:-யாருடைய அரசியல் வாழ்க்கையும் பிரகாசமாக அமைவது என்பது மக்களின் கைகளில்தான் உள்ளது. தமிழக மக்களின் நலனை எண்ணியே கூட்டணி அமைப்போம். இந்த தேர்தலுக்குள் பல புயல், சூறாவளி வீசக் கூடும். அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிதறி கிடப்பதால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக மக்கள் பேசி வருகின்றனர்.என்று தெரிவித்தார்

தமிழ்நாட்டில் சார்(SIR) கணக்கெடுப்பு எப்போது?

தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் கணக்கெடுப்பு (SIR) நடத்த உள்ளது இதற்கான அட்டவணை வருமாறு படிவங்கள் அச்சடிப்பு/அதிகாரிகளுக்கு பயிற்சி அக்.28 நவ.3 வீடு வீடாக கணக்கெடுப்பு – நவம்பர் 4 டிசம்பர் 4 வரைவு வாக்காளர் பட்டியல் – டிசம்பர் 9 ஆட்சேபனை தெரிவிக்க /திருத்தங்கள் கோர -டிச.9 ஜன 8 புகார்கள் சரிபார்ப்பு – டிச.9 .31 2026 இறுதி வாக்காளர் பட்டியல் 7 பிப்ரவரி 2026என அறிவித்து உள்ளது.

விஜய் வழங்கிய ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிய பெண்

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம்தொடர்பாக அனைத்து குடும்பத்தினருக்கும் நடிகர் விஜய் தல ரூ 20 லட்சம் வழங்கி உள்ளார். இதனை அவர்களது வங்கி கணக்கில் போடுவதற்காக அனுப்பி இருக்கிறார். ஆனால்உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி விஜய் நேரில் வராத காரணத்தினால் பணத்தை திருப்பி அனுப்பியதாக தெரிவித்தார்.ஏற்கனவே மூன்று குடும்பத்தினர் தவிர மற்ற அனைத்து குடும்பத்தினரும் நேற்று பஸ்ஸில் வந்து பனையூரில் விஜய் சந்தித்து பின்னர் வீடு திரும்பினர்

கரூர் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்தில் சந்திக்கும் விஜய்

தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் கரூர் நெரிசல் சம்பவத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை .ஒரு சில நாட்கள் மட்டும் பனையூர் அலுவலகத்திற்கு வந்து போனார். 40 நாட்களுக்கும் மேலாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார் கரூருக்கு சென்று நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது தற்போது 50 குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து அவர்களை தனித்தனியாக சந்திக்க இருப்பதாக தெரியவந்துள்ளது இதற்காக அங்குள்ள பிரபல ஓட்டலில் 50 […]

கரூர் சம்பவம் பிரபல யூ டூபர் கைது.

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடர்பாக திமுக அரசு மீது அவதூறு பரப்பி காணொளி வெளியிட்ட பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் 25 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் இது தவிர பாஜக தமிழக வெட்டிக்கழக நிர்வாகிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் தற்போது பிரபல யு டுபேர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார் இவர் ஏற்கனவே ஒருமுறை சவுக்கு சங்கருடன் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆயுத பூஜை விடுமுறை – சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

ஆயுத பூஜை விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு இன்று மாலை 4.15 மணிக்கும், எழும்பூரில் இருந்து மதுரைக்கு இரவு 11.45 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

லண்டனில் காந்தி சிலைக்குஅவமதிப்பு

லண்டனின் டேவிஸ்டாக் சதுக்கத்தில் ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காந்தி சிலை .அவமதிக்கப்பட்டுள்ளது காந்தி சிலையில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

கரூர் நெரிசல் சம்பவம். கைதானவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட த.வெ.சு. செயலா ளர் மதியழகன், த.வெ.க. பொதுச்செயலாளர் பொதுச் செயலாளர் புஸ்சி. டி.நிர்மல்குமார் மற்றும் சிலர் என குறிப்பிட்டு, அவர்கள் மீது கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவுசெய்யப்பட்டுள்ளது மத்திய அரசு புதிதாக அமலுக்கு கொண்டு வந்த பி.என்.எஸ். சட்ட பிரிவுக ளான 105 (கொலைக்கு சம மான கொலைக்கான தண்ட […]