விஜய் கட்சியில் மகளிர் அணி நிர்வாகிகள் நியமனம்

தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளன முதல்கட்டமாக கட்சி ரீதியிலான 65 மாவட்டங்களுக்கு அமைப்பாளர்கள் ஒரு மாவட்டத்துக்கு ஒரு அமைப்பாளர் பத்து துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

ஜாக்டோ -ஜியோ நம்பர் 18 இல் போராட்டம்

அரசு ஊழியர் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நிர்வாக குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது அப்போது.18ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்தனர்

தமிழகத்தை மீட்போம் -விஜய்

இன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுவது எட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார் அதேபோல தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யும் வெளியிட்டுள்ள செய்தியில் மக்கள் துணையோடு தமிழகத்தை மீட்போம் என்று குறிப்பிட்டுள்ளார்

எடப்பாடி மீது செங்கோட்டையன் சரமாரி குற்றச்சாட்டு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பரபரப்புப் பேட்டி அளித்திருக்கிறார். ‘’எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கு பரிந்துரை கடிதத்தை கொடுத்தவன் நான். கொடநாடு கொலை வழக்கில், A1-ல் இருக்கிறார் இபிஎஸ். பழனிசாமி எடுத்த முடிவுகளால் அதிமுக தொடந்து தோல்வியைத் தழுவியது. எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்கலாம்’’ என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.

9 சட்டங்களுக்கு கவர்னர் ஒப்புதல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல். அளித்தார் 2 முறை நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதாவுக்கும் ஆளுநர் ரவி ஒப்புதல். அளித்து உள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ ஓய்வூதியத்தை உயர்த்துவது சிறு குற்றங்களுக்கு சிறைத் தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உள்பட 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார்

கரூர் சம்பவம். அஜித்பர பரப்பு பேட்டி

கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல; நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு. கூட்டம் திரட்டுவதை பெரிய விஷயமாக்குவதை நிறுத்த வேண்டும். கிரிக்கெட்டில் கூட்டம் கூடினாலும் இப்படி நடப்பதில்லை.தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி,பிரபலங்கள் கலந்துகொள்ளும்நிகழ்வுகளில் மட்டும் ஏன் இப்படி? இது நம் திரையுலகை உலகளவில் தவறாகக் காட்டுகிறது. ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம். […]

முத்துராமலிங்க தேவருக்கு பிரதமர் மோடி புகழாரம்!*

இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்குப் புனிதமான குரு பூஜையின் போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன். நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவை செய்வதற்குக் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தை இணைத்தார்.

டிடிவி – ஓ.பி.எஸ் – செங்கோட்டையன் ஒரே காரில் பயணம்

மதுரையிலிருந்து பசும்பொன்னுக்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம் செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக இருவரும் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர். மேலும் அவர்களுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அதே காரில் பயணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்மணிகளை தமிழக அரசு பாதுகாக்கவில்லை – விஜய்.

தொடர் மழையால் நெல்மணிகள் முதல்முறை வீணானபோதே தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா? நெல்லை கொள்முதல் செய்யாமல் அவற்றை மழையில் நனையவிட்டு அரசு வீணாக்கியுள்ளது. இந்த ஆண்டு மட்டுமில்லை, ஒவ்வோர் ஆண்டுமே இதுதான் நிலை எனும்போது வேதனையாக உள்ளது. நெல் மணிகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வீணாக்கியது ஏன்? பருவமழையால் விவசாயப் பயிர்கள், விளைநிலங்கள் சேதமடையாமல் இருக்க எடுத்த நடவடிக்கை என்ன?-தவெக தலைவர் விஜய்.

விக்கிபீடியா-வுக்கு போட்டியாக க்ரோக்கிபீடியா அறிமுகம்!

நாம் இணையத்தில் ஏதேனும் தேடுவதற்கு பெரும் உதவியாக இருந்து வரும் விக்கிபீடியா-வுக்கு போட்டியாக க்ரோக்கிபீடியா என்ற தளத்தை எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.