சென்னையில் விஜய்யுடன் காங்கிரஸ் பிரமுகர் ரகசிய சந்திப்பு
காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தவெகவில் இணைவதாக கூறப்படுகிறது.அவர் விஜயை ரகசியமாக சந்தித்து உள்ளார் மயிலாப்பூர் தொகுதி கேட்கிறார் இதனால் காங்கிரசார் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்
அணில் அம்பானியின் 1120 கோடி சொத்து முடக்கம்
கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களில் யெஸ் வங்கி ரூ.2,965 கோடி முதலீடு செய்தது. பின்னர் இந்த முதலீடு வாராக் கடன்களாக மாறின. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.11,000 கோடி பொது நிதி, யெஸ் வங்கி மூலமாக அனில் அம்பானி குழுமத்தின் நிதி நிறுவனங்களுக்கு வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அனில் அம்பானியின் 18 சொத்துக்களை அமலாக்கத் துறை தற்போது முடக்கியது. இவற்றின் மதிப்பு ரூ.1,120 கோடி ஆகும். கடந்த […]
எடப்பாடிக்கு கோவணம் கூடமிஞ்சாது நாஞ்சில் சம்பத் தாக்கு
செங்கோட்டையன் த.வெ.க வில் இணைவது குறித்து மூத்த அரசியல் விமர்சகரும் அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத் தனது கடுமையான கருத்தை எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், “கோட்டைக்குப் போக வேண்டும் என்று திட்டமிட்டு மூத்தவர்களையும் காத்தவர்களையும் கட்சியைவிட்டு வெளியேற்றிய எடப்பாடிக்கு, போகிற போக்கை பார்த்தால் கோவணம் கூட மிஞ்சாது போல் தெரிகிறது.” என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது” – அதிமுக தலைவர் செம்மலை
அதிமுக தலைவர் செம்மலை கூறியதாவது. ஊர் ஊராக சென்று கொடியேற்றி ஆட்சியை பிடிப்பேன் என்பதெல்லாம் கற்பனைக்கு எட்டாத விஷயம். செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை முடிந்து போன ஒன்றாகி விட்டது” இவ்வாறு செம்மலை தெரிவித்தார்.
தவெக வில் இணைந்தார் செங்கோட்டையன்
இன்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் வருகை தந்தார். அவரை தவெக கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் தவெகதலைவர் விஜயை சந்தித்த செங்கோட்டையன், கட்சியில் இணைந்தார். அவருக்கு உறுப்பினர் அட்டையை நடிகர் விஜய் வழங்கினார். செங்கோட்டையனுடன், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இணைந்தனர். தவெகவில் செங்கோட்டையனுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது., மேலும் 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது செங்கோட்டையன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் இணைந்து செயல்படுவார் எனவும் […]
பீகாரில் காங்கிரஸை ‘கை’ கழுவி, பாஜகவுக்கு கைகொடுத்த பெண்கள் ஓட்டு!
பீகார் சட்டசபை தேர்தலில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக ஓட்டளித்தனர். மொத்த ஓட்டுப்பதிவு 66.91% ஆக இருந்த நிலையில், பெண்களின் ஓட்டுப்பதிவு 71.6% ஆக உயர்ந்தது; இது ஆண்களைவிட (62.8%) 8.8 சதவீதம் அதிகம்; பீகாரின் தேர்தல் வரலாற்றில் இது மிகப்பெரிய வித்தியாசமாகும். வாக்களித்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையிலும் பெண்கள் ஆண்களை மிஞ்சியிருப்பது இதுவே முதல் முறையாகும். இது என்டிஏ கூட்டணி தற்போது முன்னிலை வகிக்க முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
வெற்றிகோப்பை சின்னம் கேட்டு த.வெ.க மனு
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவுள்ள தவெக கட்சிக்கு சின்னம் ஒதுக்கக்கோரி, அக்கட்சியின் நிர்வாகிகள் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு அளித்தனர். தவெக கொடுத்துள்ள பொதுவான 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலில் வெற்றி கோப்பை ,ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில் சின்னம் இடம் பெற்றுள்ளது.
தோட்டா தரணிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது
சினிமா கலை இயக்குனர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான சிவாலய விருது வழங்கப்பட்டுள்ளது அவருக்கு சென்னையில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகத்தில் இந்த விருது வழங்கப்படும்.ஏற்கனவே தமிழகத்தில் நடிகர் சிவாஜி கணேசன் இந்த விருதை பெற்றுள்ளார்
பிகார் காங்கிரஸ் தலைவர் ராஜிநாமா..
பிகார் தேர்தல் முடிந்த அன்றே காங்கிரஸில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஷகீல் அகமது விலகுவதாக தெரிவித்துள்ளார்
8தேர்தல் கணிப்பினும் பாஜக கூட்டணி வெற்றி
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன .இந்த நிலையில் நேற்று இரண்டாவது கட்ட தேர்தல் முடிந்ததும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. எட்டு முக்கிய நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தல் கணிப்புகளில் அனைத்திலும் பாஜக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது