மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள இரவு நேர காப்பகம்:
மெரினா கடற்கரையில் இரவு நேரங்களில் தூங்கும் வீடு இல்லாதவர்களின் நலனை கருத்தில் கொண்டு அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம் பின்புறத்திலேயே இரவு நேர காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காப்பகத்தில் 80 பேர் வரையில் தங்க முடியும். இவர்களுக்கு பாய், தலையணை, போர்வை உள்ளிட்டவைகள் வழங்கப்படும். கழிவறை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது
ஜோர்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி.
3 நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து ஜோர்டான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று(டிச.15) முதல் டிச.18 வரை ஓமன், ஜோர்டான், எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி.
இலங்கைக்கு கப்பலில் நிவாரணப் பொருள்கள்! கொடியசைத்து அனுப்பி வைத்த மு.க. ஸ்டாலின்!!
எங்கள் ஆட்சியில் தீபம் ஏற்றுவோம் – அதிமுக
2026-ல் அதிமுக ஆட்சி மலர்ந்ததும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என்று அதிமுக அமைப்புச் செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்எல்ஏவுமான வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மதுரைக்கு திமுக அரசு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. தற்போது முதல்வர் திடீரென மதுரையின் வளர்ச்சி பற்றி பேசுவது வியப்பளிக்கிறது. திருப்பரங்குன்றத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். என்றார்
நாஞ்சில் சம்பத் விஜய் முன்னிலையில் த.வெ.க இணைந்தார்.
தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. கட்சிகளில் இருந்த மேடைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், விஜய் முன்னிலையில்தமிழக வெற்றிக் கழகத்தில்இணைந்தார். என்னைப் பார்த்ததும், “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?” என்றார் விஜய். நான் மெய்சிலிர்த்து போனேன். விஜயை சந்தித்த நேரத்தில் இருந்து புதிதாகப் பிறந்ததைப் போல எண்ணுகிறேன்; என்னுடைய பாதையை விஜய் தீர்மானித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் அமைதியாக இருப்பது அவருக்கு நல்லது.
தமிழகம் மீது புடின் அக்கறை!
இந்தியா, ரஷ்யா இடையிலான இருதரப்பு விஷயங்கள் முழு அளவில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவுக்கு காஸ், எண்ணெய், நிலக்கரி சப்ளை செய்வதில் ரஷ்யா முக்கிய நாடாக உள்ளது’. ‘தமிழகத்தில் முக்கிய திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயல்படுத்துகிறோம். கூடன்குளம் அணுமின் நிலையம் மேலும் மேம்படுத்தப்படும். இதன் மூலம் இந்தியர்கள் மிக மலிவான விலையில் மின்சக்தியை பயன்படுத்தலாம்- டில்லியில் ரஷ்ய அதிபர் புடின் பேட்டி கூடன்குளத்தில் உள்ள 6 உலைகளில் தற்போது இரண்டில் மின் உற்பத்தி நடக்கிறது. 3வது உலைக்கான யுரேனியம் […]
ரஷ்யா எங்கள் நண்பன். நரேந்திர மோடி.
இந்தியா, ரஷ்யா இரு நாட்டு உறவு பலமானது. இந்த நட்பு உறவுக்கு புடின் 25 ஆண்டுகளுக்கு முன்னேரே நமக்கு உதவியாக இருந்தார். பொருளாதார முன்னேற்றம், யூரியா தயாரிப்பு, அணு தயாரிப்பு விஷயத்தில் இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செல்லும். ரஷ்யர்களுக்கு விரைவில் 30 நாள் இலவச சுற்றுலா விசா வழங்க ஏற்பாடு நடக்கிறது. உலகில் அமைதிக்காக ரஷ்யாவுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும். உலகில் பயங்கரவாத ஒழிப்பில் முழு கவனத்துடன் செயல்படுவோம்.
புதுவையில் விஜய் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி.
புதுவையில் டிசம்பர் 9இல் நடைபெறும் தவெக பொதுக் கூட்டத்துக்கு அனுமதி அளித்தார் முதல்வர் ரங்கசாமி தலைமைச் செயலகத்தில் முதல்வர் என். ரங்கசாமியை நேரில் சந்தித்த தவெக பொதுச்செயலர் ஆனந்த் பொதுக் கூட்ட அனுமதி கடிதத்தைப் பெற்றுச் சென்றார்.
ஸ்டாலின் சக்கர வியூகம் – சேகர்பாபு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் எடுத்த நடவடிக்கைக்கு சங்கிகளை தவிர்த்து ஒட்டுமொத்தமாக ஆன்மிகவாதிகள், இறையன்பர்கள் முழு ஆதரவு தந்திருக்கிறார்கள்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது: அதிமுகவை பொறுத்தவரை , ஜெயலலிதா இருந்தபோது அக்கட்சி எடுக்கும் நிலைப்பாடுகள் அனைத்தும் சுயசிந்தனையோடு எடுக்கப்பட்டவை. ஆனால் தற்போது அக்கட்சியின் நிலைப்பாடு அனைத்தும் டெல்லியில் அமித் ஷா சொல்வதைப் பொறுத்து நடக்கிறது. அதிமுகவினர் தாங்கள் கொண்ட கொள்கைகள், லட்சியங்கள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டனர். திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில் […]
ரஷ்ய அதிபர் புதன் விருந்தில் முருங்கை இலை சூப்
குடியரசுத் தலைவர் மாளிகையில், ரஷிய அதிபருக்கு சிறப்பான விருந்து வழங்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பாரம்பரியமிக்க உயர்ந்த சுவையுடைய சைவ உணவுகள் பரிமாறப்பட்டன. அதில், முருங்கை இலை சாறு, சுவையான ரசம், காஷ்மீரி வால்நட் குச்சி டூன் செடின், கார சட்னி – ஜோல் மோமோ என காஷ்மீர் முதல் தமிழகம் வரை மிகவும் பாரம்பரியமான உணவுகள் தேர்வு செய்யப்பட்டு மிகுந்த ருசியுடன் தயாரிக்கப்பட்டு பரிமாற்றப்பட்டுள்ளது. முக்கிய உணவுகளின் பட்டியலில் ஸஃப்ரானி பனீர் ரோல், பாலக் மேதி மட்டர் […]