சார் பேசினால் சினிமா வசனம் இல்லையாம், சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்ததாம்… தவெக தலைவர் விஜய்.
“அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் அவர்கள் பேசும்போது, “என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே” எனக் கூறினார். நான் பேசினால் மட்டும் சினிமா வசனமாம், சார் பேசினால் சினிமா வசனம் இல்லையாம்… சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்ததாம்!” – தவெக தலைவர் விஜய்
125 நாள் வேலை திட்டம் – எடப்பாடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மத்திய அரசு மூடுவிழா நடத்துவதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவிப்பது மன்னிக்க முடியாத பச்சை துரோகம் என்று மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது ஒன்றிய பா.ஜ.க.; அதற்கு ஒத்து ஊதுகிறார் திருவாளர் பழனிசாமி!
திமுக தீய சக்தி , த.வெ.க தூய சக்தி -விஜய் பேச்சு
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது-24 மணி நேரமும் விஜயை எப்படி மடக்கலாம்; தவெகவை எப்படி முடக்கலாம் என்றுதான் நினைக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அசிங்கமாக பேசுவது தான் அரசியல் என்றால் அது எனக்கு வராது. நான் எத்தனை நிமிஷம் பேசினால் என்ன? எப்படி பேசினால் என்ன? விஷயம் என்ன என்று பாருங்கள். நாங்கள் வாயிலேயே வடை சுட திமுகவா… தவெக. திமுக ஒரு தீயசக்தி. தவெக ஒரு தூயசக்தி” இவ்வாறு […]
எம்ஜிஆர் வடிவத்தில் விஜய் – செங்கோட்டையன் பேச்சு
ஈரோட்டில் இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரம்மாண்ட கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசும்போது எம்ஜிஆர் வடிவத்தில் விஜயை பார்க்கிறேன் என்று தெரிவித்தார்
கிராம வேலை வாய்ப்பு திட்ட புதிய மசோதா நிறைவேற்றம்
கிராம மக்களுக்காக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்தனர் இதற்கு மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டம் என்று பெயரிடப்பட்டு இருந்தது. தற்போது 125 நாள் வேலை நாளாக மாற்றி மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.இதில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டுள்ளது இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது .அப்போது கடும் அமளி ஏற்பட்டது
ஈரோடு கூட்டம் விஜய் வெளியீட்ட வீடியோ
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் நடந்த பிரம்மாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் கூட்டம் முடிந்த போது அவர் செல்பி வீடியோ எடுத்தார் அதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ வைரலாகி வருகிறது
நாடு முழுவதும் ரூ.10, ரூ.20, ரூ.50 ரூபாய் நோட்டுகளுக்கு பற்றாக்குறை
இந்தியா உடன் ராணுவ உறவை வலுப்படுத்திய ரஷ்யா!
இந்தியா – ரஷ்யா இடையே ராணுவப் படைகளை பரிமாறிக்கொள்ளும் RELOS ஒப்பந்தத்தை அங்கீகரித்து ரஷ்ய நாடாளுமன்றம் நிறைவேற்றிய கூட்டாட்சி சட்டத்தில் கையெழுத்திட்டார் ரஷ்ய அதிபர் புதின்! இதன் மூலம் ரஷ்யாவின் வீரர்கள், போர்க்கப்பல்கள், போர் விமானங்களை இந்தியாவிற்கு அனுப்புவதற்கும், அதேபோல் இந்தியாவின் படைகள் ரஷ்யா செல்வதற்கும் வழிவகை செய்கிறது. ராணுவப் பயிற்சி, பேரிடர் பணிகள் மற்றும் பிற சந்தர்ப்பங்களிலும் இந்த ஒப்பந்தம் பயன்படுத்தப்படும் என அறிவிப்பு.
அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கும் தொகுதிகள் எவை? – பரபரப்பான தகவல்கள்…
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. தமிழகத்தில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விவரங்களை பட்டியலிட்டு வைத்து உள்ளது. சென்னை முதல் குமரி வரை 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. கட்சி அடையாளம் கண்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. சோளிங்கர், எழும்பூர், துறைமுகம், ஆயிரம்விளக்கு, கொளத்தூர், மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகள் முதன்மையானவையாக இடம் பெற்றுள்ளன. கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டன்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர், பாலக்கோடு, ஒட்டன்சத்திரம், […]
SIR பணிகள் – 58 லட்சம் வாக்காளர் பெயர்கள் நீக்கம்!
மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது இறந்தவர்கள் 24 லட்சம், இடம்பெயர்ந்தவர்கள் 19 லட்சம் மற்றும் போலி வாக்காளர்கள் 1.38 லட்சம் உள்பட 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாக அறிவிப்பு