மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின் மோடிக்கு…

ஓமன் நாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு நாட்டின் உயரிய விருதான ‘ஓமனின் முதல்தர விருது (The First Class of the Order of Oman – தி ஃப்ர்ஸ்ட் கிளாஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஓமன்) வழங்கி மன்னர் சுல்தான் ஹைதம் பின் தாரிக் கௌரவப்படுத்தினார். இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 29 ஆவது வெளிநாடுகளின் உயரிய விருதாகும். மேலும், ராணி எலிசபெத், நெதர்லாந்து ராணி மாக்ஸிமா, நெல்சன் மண்டேலா, பேரரசர் […]

தீய சக்தியை ஒழிக்கவே இயேசு வந்தார்: இபிஎஸ்.

தீயசக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் தமிழகம் இருளில் சிக்கிவிடும்; தீய சக்தியை ஒழிக்கவே இயேசு வந்தார். சிறுபான்மை மக்களின் காவலன் அதிமுக கிறிஸ்தவர்களை எம்ஜிஆர் மிகவும் நேசித்தார்; ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு உழைக்கும் இயக்கம் அதிமுக” – சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

விவசாய சங்க தலைவர் 13 ஆண்டு சிறைக்கு தடை

பொது சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது இதனை எதிர்த்து அவர் அப்பீல் செய்தார் இதைத் தொடர்ந்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

அரசு ஊழியர் போராட்டம் – அமைச்சர் பேச்சு வார்த்தை

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22.12.2025 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.”

ஸ்பீக்கர் டவரில் ஏறி விஜயிடம் பறக்கும் முத்தம் கேட்ட தொண்டர்

ஈரோட்டில் நடந்த விஜய் பொதுக்கூட்டத்தில் ஒரு தொண்டர் ஸ்பீக்கர் டவரில் ஏறி உட்கார்ந்து கொண்டு பறக்க முத்தம் கேட்டார் நீ பார்த்த விஜய் நீங்கள் கீழே இறங்கினால் தான் முத்தம் தருவேன் என்று கூறினார். பலமுறை விஜய் இவ்வாறு கூறிய பிறகு அந்த தொண்டர் கீழே இறங்கினார்

சார் பேசினால் சினிமா வசனம் இல்லையாம், சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்ததாம்… தவெக தலைவர் விஜய்.

“அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் அவர்கள் பேசும்போது, “என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே” எனக் கூறினார். நான் பேசினால் மட்டும் சினிமா வசனமாம், சார் பேசினால் சினிமா வசனம் இல்லையாம்… சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்ததாம்!” – தவெக தலைவர் விஜய்

125 நாள் வேலை திட்டம் – எடப்பாடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மத்திய அரசு மூடுவிழா நடத்துவதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவிப்பது மன்னிக்க முடியாத பச்சை துரோகம் என்று மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது ஒன்றிய பா.ஜ.க.; அதற்கு ஒத்து ஊதுகிறார் திருவாளர் பழனிசாமி!

திமுக தீய சக்தி , த.வெ.க தூய சக்தி -விஜய் பேச்சு

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது-24 மணி நேரமும் விஜயை எப்படி மடக்கலாம்; தவெகவை எப்படி முடக்கலாம் என்றுதான் நினைக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அசிங்கமாக பேசுவது தான் அரசியல் என்றால் அது எனக்கு வராது. நான் எத்தனை நிமிஷம் பேசினால் என்ன? எப்படி பேசினால் என்ன? விஷயம் என்ன என்று பாருங்கள். நாங்கள் வாயிலேயே வடை சுட திமுகவா… தவெக. திமுக ஒரு தீயசக்தி. தவெக ஒரு தூயசக்தி” இவ்வாறு […]

எம்ஜிஆர் வடிவத்தில் விஜய் – செங்கோட்டையன் பேச்சு

ஈரோட்டில் இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரம்மாண்ட கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசும்போது எம்ஜிஆர் வடிவத்தில் விஜயை பார்க்கிறேன் என்று தெரிவித்தார்

கிராம வேலை வாய்ப்பு திட்ட புதிய மசோதா நிறைவேற்றம்

கிராம மக்களுக்காக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்தனர் இதற்கு மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டம் என்று பெயரிடப்பட்டு இருந்தது. தற்போது 125 நாள் வேலை நாளாக மாற்றி மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.இதில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டுள்ளது இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது .அப்போது கடும் அமளி ஏற்பட்டது