தமிழக சட்டசபை ஜனவரி 20 இல் கூடுகிறது
சென்னை, ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026-ம் ஆண்டு புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு இன்று தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- “2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் […]
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி அறிவிப்பு
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மூத்த நிர்வாகியுமான ஜி.கே.மணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கட்சி விரோத செயல்பாடுகளில் ஜி.கே.மணி தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கட்சியின் அமைப்பு விதி 30(இ) பிரிவின்படி, கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி ஜி.கே.மணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒரு வார காலக்கெடுவுக்குள் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், அவரிடம் […]
எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் சந்திப்பு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அவரது இல்லத்திற்கு தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், துணைப் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் வந்ததால் பரபரப்பு. விஜயகாந்த் குருபூஜைக்கு அழைப்பு விடுக்க விடுக்க தான் வந்தோம் என்று தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.
கரூர் சம்பவம் டெல்லி விசாரணைக்கு வர புஸ்சி ஆனந்துக்கு உத்தரவு
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பரப்புரையில் 41 பேர் கரூரில் பலியான சம்பவ தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது .தற்போது கட்சியின் முக்கிய தலைவரான புஸ்சி ஆனந்த் உள்பட 4 பேரை 29ஆம் தேதி விசாரணைக்காக டெல்லிக்கு வருமாறு சிபிஐ உத்தரவிட்டுள்ளது
திருமாவளவன் கட்சியை கலைத்தால் நான் 10 ஆயிரம் பேருக்கு சோறு போடுகிறேன்’’நடிகை கஸ்தூரி
`தீபம் ஏற்றிவிட்டால் எய்ம்ஸ் வருமா, சோறு கிடைக்குமா என கேட்கிறாரே திருமாவளவன், சந்தனக்கூடு நடப்பதால் சோறு கிடைக்குமா என கேட்பாரா? அவர் கட்சியை கலைத்தால் நான் 10 ஆயிரம் பேருக்கு சோறு போடுகிறேன்’’திருப்பரங்குன்றத்தில் நடிகை கஸ்தூரி
கூட்டணி வதந்தியை மறுத்த ஓபிஎஸ், டிடிவி
மத்திய மந்திரி பியூஸ் கோயில் நேற்று எடப்பாடி சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசினார் அப்போது ஓபிஎஸ் டிடிவி தினகரன் கட்சிகளுக்கு அணிகளுக்கு எத்தனை இடங்கள் என்ற செய்திகள் வெளியாகின தற்போது அவர்கள் இரண்டு பேருமே இதனை மறுத்துள்ளனர் எடப்பாடி உடன் அணி சேர மாட்டேன் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார் டிடிவி தினகரன் கல்யாணமே ஆகவில்லை அதற்குள் பிள்ளைக்கு பெயர் வைக்கலாமா என்று கேட்டுள்ளார்
விஜய்க்கு எதிராக பேசக்கூடாது!
திமுகவுக்கான சிறுபான்மை வாக்குகளை சரிசமமாக பிரிப்பதில் விஜய் முக்கிய பங்கு வகிப்பார். விஜய் பாஜக கூட்டணிக்கு வர வேண்டிய தேவை இல்லை என்றாலும், கட்சி பொதுக்கூட்டங்களிலோ, சமூக வலைதளங்களிலோ அவருக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிப்பதை பாஜகவினர் தவிர்க்க வேண்டும்” – தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்!
திருமாவளவன் கட்சியை கலைத்தால் நான் 10 ஆயிரம் பேருக்கு சோறு போடுகிறேன்’’நடிகை கஸ்தூரி
தீபம் ஏற்றிவிட்டால் எய்ம்ஸ் வருமா, சோறு கிடைக்குமா என கேட்கிறாரே திருமாவளவன், சந்தனக்கூடு நடப்பதால் சோறு கிடைக்குமா என கேட்பாரா? அவர் கட்சியை கலைத்தால் நான் 10 ஆயிரம் பேருக்கு சோறு போடுகிறேன்’’திருப்பரங்குன்றத்தில் நடிகை கஸ்தூரி
திமுக கூட்டணியை தோற்கடிப்போம்-பியூஷ் கோயல்
நண்பரும் சகோதரருமான பழனிசாமியுடன் பேசியது மகிழ்ச்சி-தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் வளர்ச்சி, வேலைவாய்ப்பே பாஜக கூட்டணியின் பிரதான இலக்கு. 2026 தேர்தலை மோடியின் வழிகாட்டுதலுடன்தன்னமிக்கையுடன் எதிர்கொள்வோம். 2026- தேர்தலில் ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்-தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்
NDAகூட்டணிக்குள் ஓபிஎஸ், டிடிவி?
NDA கூட்டணியில் பாஜகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்க அதிமுக சம்மதம் தெரிவித்ததாக தகவல்; 170 – அதிமுகவும்,பாஜக-23,பாமக-23,தேமுதிக-6,அமமுக -6தமாக -3ஓபிஎஸ் -3 என புதிய பட்டியலை மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் இபிஎஸ் வழங்கியதாக தகவல்