திமுக எம்எல்ஏவுக்கு ஜோதிமணி எம்பி எச்சரிக்கை

மதுரை திமுக எம்எல்ஏ கோ.தளபதி காங்கிரஸ் கட்சியையும், கரூர் எம்.பி. ஜோதிமணியையும் விமர்சித்துப் பேசியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து எம்.பி. ஜோதிமணி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பது: திமுக எம்எல்ஏ கோ.தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக் கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள். நான் கரூரில் இருக்கிறேன்.எங்களைத் தொடர்ந்து தாக்கிப் பேசுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று கூறினார்.

சென்னையில் எடப்பாடி பிரச்சாரம் செய்ய அதிமுகவினர் தயக்கம்

அதிமுக பாஜக கூட்டணியில் சென்னை நகரில் உள்ள பெரும்பாலான தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த தொகுதியில் எடப்பாடி பிரச்சாரம் செய்ய நாம் ஏன் செலவு செய்ய வேண்டும் என்ற தயக்கத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் சிக்கலில் ’ஜனநாயகன்’ – தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்டு

‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. ஐகோர்ட்டு நீதிபதி பி.டி.ஆஷா, “இவ்வாறு மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரைத்தது செல்லாது. ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்” என்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை பெற்றது. பின்னர், இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் […]

திமுக ஆட்சிக்கு வராது…

“தமிழகத்தில் இனி எப்போதும் திமுக ஆட்சிக்கு வராது; இந்த தேர்தல்தான் திமுகவிற்கு இறுதித்தேர்தல்” “2021 தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட திமுக நிறைவேற்றவில்லை” – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.

பனையூர் பண்ணையார் தான் பெரும் ஊழல்வாதி – விஜய்க்கு அதிமுக பதிலடி!

“பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். சட்டத்திற்கு விரோதமாக தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி” – அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சித்த விஜய்க்கு அதிமுக பதிலடி

விசிகவில் 20 பேர் தான் இருக்கீங்க: ஆதவ் அர்ஜூனா.

“திருமாவளவன் எவ்வளவு வேண்டுமானாலும் என்னை திட்டிக் கொள்ளட்டும்; ஆனால் உங்க கட்சி இங்க மாறி எவ்ளோ நாள் ஆச்சு; கட்சியில் நீங்களும் ஒரு 20 பேரும் மட்டும்தான் இருக்கீங்க” “எம்.ஜி.ஆர் கூட்டணி கட்சிகளை நம்பி கட்சியை உருவாக்கவில்லை; தாய்க்குலத்தை நம்பிதான் கட்சியை ஆரம்பித்தார். 1977இல் இருந்த சூழ்நிலை இப்பொழுது இருக்கிறது; மக்கள் இரண்டு கட்சிகளையும் நம்பி 60, 70 ஆண்டுகள் ஏமாந்துவிட்டார்கள்.”

தேசியக்கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர்.

77வது குடியரசு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார். கொடியேற்றியதும் 21 பீரங்கி குண்டுகள் முழங்க, விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டது.

ஆளுநர் ஆர். என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார்

77ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். குடியரசு தின விழாவுக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். குடியரசு தினவிழாவில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள், விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நிலைமை மோசமாகும் முன் உடனடியாக கைவிட பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாகும் நடவடிக்கையை துணை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய ஆணையம் (NCAHP) எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவசரமான மற்றும் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என சாடியுள்ளார். நீட் தேர்வு எனும் தவறான நடைமுறையை துணை மருத்துவப் படிப்புகளுக்கும் விரிவுபடுத்துவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். எம்பிபிஎஸ் படிப்பிற்கு நீட் தேர்வை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வரும் […]

நாங்கள்தான் மீண்டும் வருவோம்! மீண்டும் வெல்வோம்!! மீண்டும் 2.0 ஆட்சி!!! – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திராவிட மாடல் ஆட்சியின் 5 ஆண்டுகால உழைப்பையும் வளர்ச்சியையும் பார்த்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர வேண்டுமென்று தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். நாங்கள் இடியாப்ப சிக்கல் போன்ற சூழலில் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. எனக்கு, என்னைவிட தமிழ்நாட்டு மக்கள் மேல் கூடுதலான நம்பிக்கை இருக்கிறது. உறுதியாகச் சொல்கிறேன். நாங்கள்தான் மீண்டும் வருவோம்! மீண்டும் மீண்டும் வருவோம்! மீண்டும் வெல்வோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! எங்களின் சாதனைகளை மிஞ்சும் அளவுக்கு திமுக […]