கணவர் கண் முன் மனைவி தலை துண்டாகி பலி
பல்லாவரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் இவரது கணவர் சின்னையா இவர் தனியார் நிருவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பல்லாவத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து திருமுடிவாக்கத்தில் உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக கணவர் இருசக்கர வாகனத்தை ஓட்ட ,மனைவி நாகம்மாள் பின்னால் அமர்ந்த கொண்டு திருமுடிவாக்கம் நோக்கி அனகாபுத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மாடு மீது மோதி உள்ளது.பின்னால் அமர்ந்திருந்த மனைவி நாகம்மாள் வலது […]
காமராஜரின் பிறந்தநாள்

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்லாவரம் காவல் நிலையம், ராதாநகரிலும் உள்ள சிலைக்கும் பி.தேவராஜன் (குட்டி), பிரஸ் பி.பழனி, கேசவராஜ் தலைமையில், ராஜாராம் மாலை அணிவித்து கொடியேற்றினார். எஸ்.மீனாட்சி சுந்தரம் இனிப்பு வழங்கினார். விழாவில் என்.நேத்தாஜி, ஆர்.ராமகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி ஜி.கே.சேகர், ஜி.செல்வகுமார் புருஷோத்தமன், பரசுராமன், முனியாண்டி, ராமசுப்பு பம்மல் ராம கிருஷ்ணன், ஜெயராமன், தனசுந்தரம், இப்ராஹிம், ராஜசேகர், சுப்பிரமணி கருணாகரன் சிவா, செல்வமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மறைமலை அடிகளார் பிறந்தநாள் விழா அமைச்சர் மரியாதை

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளாரின் 147வது பிறந்தநாளை யொட்டி பல்லாவரம் சாவடி தெருவில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அன்னாரின் திரு உருவ சிலைக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, ஆகியோர் மாலை அணிவித்து மறியாதை செய்தனர். இந்த நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ், தாம்பரம் […]
பல்லாவரம் அருகே சிறுமியிடம் பாலியல் தொல்லை அளித்த முதியவர் கைது

சென்னை பழைய பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் தனது 13 வயது சிறுமியை அதே குடியிருப்பு கீழ் தளத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்க்கு அழைத்து சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து தான் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிற்க்கு சென்றுவிட்டு வருவதாக தனது மகளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது அதே குடியிருப்பில் உடற்பயிற்சி கூடத்திற்க்கு சென்ற செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் அம்மன் நகர் திரிசூலத்தை சேர்ந்த அறுபத்தி மூன்று (63) வயதான ராமமூர்த்தி என்பவர் […]
பல்லாவரத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது

பல்லாவரம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது, 5 லட்சம் மதிப்புள்ள 30கிலோ கஞ்சா பறிமுதல் செய்த குன்றத்தூர் மதுவிலக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசர், பல்லாவரம் சுற்றுவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குன்றத்தூர் மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவளின் பேரில் ஆய்வாளர் மலதி, உதவி ஆய்வாளர்கள் ராமசந்திரன், சுரேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர […]
தாய் திட்டியதால் தற்கொலை செய்த மாணவன் ஜமீன் பல்லாவரத்தில் பரிதாபம்

ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மாரியம்மாளின் கடைசி மகன் ஜெகதீஷ் என்பவர் தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 08.00 மணி அளவில் ஜெகதீஷின் தாயார் மாரியம்மாள் வீட்டிற்கு தேவையான தண்ணீர் பிடித்து வைக்காததை கண்டித்து அண்ணன் ஜனார்த்தனன் மற்றும் ஜெகதீஷ் ஆகிய இருவரையும் திட்டி கையால் அடித்து விட்டு அவர் வேலைக்கு கிளம்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த […]
சென்னை ஜமீன் பல்லாவரத்தில் வீட்டின் சுவர் ஏறி குதித்து செல்போன்களை திருடிய கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஆகாஷ் என்பவர் வீட்டுக்குள் புகுந்து திருடிய விஜயகுமார் (21), தினேஷ் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பல்லாவரத்தில் 300 நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் | அமைச்சர் வழங்கினார்

. பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் நரிக்குறவர்கள் காலணி உள்ளது, இங்கு 250 க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடியிருவரும் நிலையில், நரிக்குறவர்கள் மிகவும் பிற்படுத்தபட்டவர்கள் பட்டியலில் இருந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுக்கு வைத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இந்த கல்வி ஆண்டிலேயே கல்வி கற்கும் நரிக்குறவர் பயன்பெரும் விதமாக அவர்களுக்கு வருவாய்துறை மூலமாக பழங்குடியினர் சான்று வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தான் இந்த […]