8-ம் வகுப்பு மாணவனை உயிர் பலி வாங்கிய செல்போன் பல்லாவரத்தில் சோகம்

செல்போனில் கேம் விளையாடியதால் படிப்பில் மதிப்பெண் குறைவதாக தாய் கண்டித்ததால் மனமுடைந்த எட்டாம் வகுப்பு மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை சென்னை, பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் பிரபல அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இதில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாசகிருஷ்ண குமார். மென்பொறியாளரான இவருக்கு திருமணமாகி சைனஜா என்ற மனைவியும், வைஷ்ணவி (20) ஸ்ரீராம்(14) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீராம் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். சமீப […]

செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த பெண் பலி

பல்லாவரம் அருகே மின்சார ரயில் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் ரயில் நிலைய தண்டவாளம் அருகே நேற்று இரவு இறந்த நிலையில் பெண் ஒருவர் சடலமாக இருப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு நடத்திய விசாரனையில் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (40) என்பதும் நேற்று […]

பல்லாவரத்தில் மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பல்லாவரத்தில் போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர் அமைப்பு சார்பாக 300 பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியாக சென்றனர். பல்லாவரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முதன்மை போக்குவரத்து காப்பாளர் பூ.கருப்பையா தலைமையில் பல்லாவரம், மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித தெரேசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய செபாஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 300 மாணவ மாணவிகள் பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் விழிப்புணர்வு பிரசார பேரணியை துவங்கி பம்மல் […]

தாம்பரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்..!!

தாம்பரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. குமரன் நகர், சி.டி.ஓ. காலனி, எஃப்.சி.ஐ. நகர், மூவேந்தர் நகரில் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டது.

தாம்பரம் மண்டலம் 2க்கு உட்பட்ட பல்லாவரம் தெற்கு பகுதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழையால் பாதிக்க பட்ட மக்களை இ.எஸ்.பெர்னார்ட் பார்வையிட்டார்

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2க்கு உட்பட்ட பல்லாவரம் தெற்கு பகுதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழையால் பாதிக்க பட்ட மக்களை பாதுகாக்கும் சிறப்பு முகாமிற்கு நேற்று காலை பல்லாவரம் தெற்கு பகுதி செயலாளர் இ.எஸ்.பெர்னார்ட் அவர்கள் மற்றும் 27வது வார்டு மாமன்ற உறுப்பினர் T.K.கார்த்திகேயன் மகேஸ்வரி அவர்களுடன் சென்று அங்குள்ளவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.அப்போது மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலை சிற்றுண்டி அவர்களுக்கு அளித்தனர்

மிக்ஜாம் புயல் மழை பாதிப்பால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு .

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், […]

காஞ்சிபுரம்‌ மாவட்ட வெள்ளமிீட்பு பணிக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்‌ முத்துசாமியை டிரக்டரில்‌ அமரவைத்து வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட வண்டலூர்‌-மிஞ்சூர் வெளிவட்ட சாலையில்‌ காங்கிரஸ்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ செல்வபெருந்தகை ஓட்டி சென்றார்‌.

மின்சார சப்ளை கொடுக்கபோலிஸ் பாதுகாப்புடன் செல்லும் மின்சார ஊழியர்கள்.

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் புயல் வெள்ளம் பாதிப்பு கடுமையாக உள்ளது.குறிப்பாக முடிச்சூர் வரதராஜபுரம் போன்ற பகுதிகளை அடக்கிய மேற்கு தாம்பரம் தொடர்ந்து வெள்ளத்தில் தத்தளிக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்பட்டபோது முடிச்சூர் வரதராஜபுரம் பகுதிகளில் தண்ணீர் உள்ளே செல்ல முடியாமல் தேங்கி இருப்பதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதி ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளத்தில் தான் மூழ்கி தவிக்கிறது. காரணம் இந்த பகுதியில் ஏராளமான வீடுகள் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. […]