திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான ஒரத்தநாடு வைத்திலிங்கம், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

புதிய உச்சத்தில் தங்கம் விலை! சவரனுக்கு ரூ. 2,800 உயர்வு!!

சென்னையில் தங்கத்தின் விலை இன்று ரூ. 2,800 அதிகரித்துள்ளது.தொடர்ந்து இன்று(ஜன. 21, புதன்கிழமை) காலை 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,800 அதிகரித்து ரூ. 1,14,000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 350 உயர்ந்து ரூ. 14,250 -க்கு விற்பனையாகிறது.அதேபோல வெள்ளி விலையும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 340-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 3,40,000 […]

தாம்பரம் அருகே லாரி இருசக்கர வாகன மோதல் – 3 பேர் பலி…

தாம்பரம்:- பல்லாவரத்தில் இருந்து, ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஈச்சங்காடு சந்திப்பில், கீழ்க்கட்டளை நோக்கி செல்ல, இடப்புறமாக திரும்பியது. அப்போது, கீழ்கட்டளையில் இருந்து, கோவிலம்பாக்கம் நோக்கி செல்ல, எதிர் திசையில் வந்த, இருசக்கர வாகனத்தின் மீது, எதிர்பாராத விதமாக லாரி மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த கோகுல்ராஜ், தனாய் மண்டேல் இருவரின் மீதும், லாரியின் சக்கரம் ஏரி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி பலியாகினர். இச்சம்பவம் குறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலானாய்வு பிரிவு […]

எம்ஜிஆர்போல் யாராவது உண்டா?… கே.பி.முனுசாமி கேள்வி

100 பேரை அடிப்பதுபோல் ஷோ காட்டுவோர் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்கள்? இப்போது உள்ள நடிகர்கள் மது குடிப்பது, 4 பெண்களுடன் நடனம் ஆடுவதுபோல் ஷோ காட்டுகின்றனர். மக்களுக்கு நல்ல அறிவுரை வழங்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் எம்ஜிஆர்; சம்பாதித்த பணத்தை மக்களுக்கு கொடுத்த எம்ஜிஆர்போல் நடிகர்கள் யாராவது உள்ளனரா?

சீனாவின் பிறப்பு விகிதம் சரிவு

2025இல் சீனாவின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது. 1,000 பேருக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 5.6 ஆக குறைந்துள்ளது. இது 1949ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக்குறைந்த அளவு. குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் சீனா பல்வேறு மானியங்களை அறிவித்தாலும், அந்நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவாலை இது வெளிப்படுத்துகிறது. சீன இளைஞர்களிடையே குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் குறைவதற்கு, குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விச் செலவுகள் அதிகமாக இருப்பதும் காரணமாக பார்க்கப்படுவதால், புதுமண தம்பதிகளுக்கு பண வவுச்சர்கள் […]

ஜனநாயகன் திரைப்படம் தீர்ப்பு ஒத்திவைப்பு.

’ஜனநாயகன்’ பட சென்சார் சான்றிதழ் தொடர்பான மேல் முறையீடு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

செங்கோட்டையன் கட்சித் தாவலா?

தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்த அதிமுக பிரமுகர் செங்கோட்டையன் கடந்த சில நாட்களாக தனக்கு கட்சியில் மதிப்பு இல்லை, எனவே வேறு கட்சிக்கு செல்ல திட்டமிட்டு வருகிறார். என்று செய்தி வெளியாகியது அதனை செங்கோட்டையன் இன்று மறுத்துள்ளார்.

சட்டசபையில் 4-வது ஆண்டாக கவர்னர் மோதல்

கடந்த 3 ஆண்டுகளைப் போலவே, தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி. அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் கூறவே, தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவது மட்டுமே மரபு என சபாநாயகர் விளக்கம் அதனை ஏற்க மறுத்து அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.

தமிழக சட்டசபை 24-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜனவரி 24-ம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை (ஜனவரி 21) அன்று சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். ஜனவரி 22-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப் பெற்று விவாதம் தொடங்கும். ஜனவரி 23-ம் தேதி 2022 -2023 ஆம் ஆண்டுக்குரிய மிகை செலவுக்கான மானிய கோரிக்கை […]

ஆளுநர் உரை இல்லாத -சட்டசபை சட்டத்தை திருத்த ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் உரையை ஆர். என். ரவியால் படிக்க முடியவில்லை. இதனால் அவர் வந்த சில நிமிடங்களில் வெளியேறினார்.இந்தப் பிரச்சனைகளை தவிர்க்க ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கிடும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகளை இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு நாடாளுமன்றத்தில் திமுக முன்னெடுக்கும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.