எடப்பாடி டெல்லி பயணம்

பாமக உடன் தொகுதி பங்கீட்டை முடிவு செய்த எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை டெல்லி செல்கிறார். நாளை அவர் பாஜக தலைவர்கள் சந்தித்து பேசுகிறார் அப்போது தொகுதி பங்கீடு முடிவாகும் என்று தெரிகிறது.

தங்கம் சவரனுக்கு ரூ.320, வெள்ளி ரூ.12,000 உயர்வு

தங்கம்ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்த நிலையில், ரூ.2,83,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகரும்.

அதிமுக – பாமக கூட்டணி உறுதி! எடப்பாடி பழனிசாமி

செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலுக்காக ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. தற்பொழுது பாமகவும் கூட்டணியில் இணைந்து உள்ளது. இது இயற்கையாக அமைந்துள்ள கூட்டணி. மேலும் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்து விட்டோம். இதற்கான அறிவிப்பை பின்னர் அறிவிக்கிறோம் என்று கூறினார். மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைய உள்ளது. எங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்பத்தின்படி இந்த கூட்டணியை அமைத்து உள்ளோம். வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் […]

அதிமுக ஆட்சியமைக்கும்: அன்புமணி.

வரும் பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இன்று இணைந்துள்ளது. மகிழ்ச்சியான ஒரு தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த விரும்பிய (அதிமுக – பாஜக) கூட்டணியில் நாங்கள் சேர்ந்திருக்கிறோம். வலுவான கூட்டணி. எங்கள் நோக்கம் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திலே அதிமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம். மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்க்கவிருக்கிறோம். காரணம் சமீபத்தில் கூட நடைப்பயணம் மேற்கொண்டபோது திமுக மீது மக்கள் மிகுந்த கோபத்தில் […]

ஆட்சியில் பங்கு கேட்க உறுதியாக இருக்கிறோம். – கே.எஸ் அழகிரி

திரு​வாரூரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரி செய்​தி​யாளர்​களிடம் கூறியது: ஒவ்​வொரு அரசி​யல் கட்​சி​யும் வளர வேண்​டும், அதி​காரத்​தில் பங்கு வேண்​டும் என சொல்​வது நியாய​மானது. இதை காங்​கிரஸ் கட்சி மட்​டும் சொல்​ல​வில்​லை. வைகோ, திரு​மாவளவன் மற்​றும் கம்​யூனிஸ்ட்​களும் அதிக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும் எனக் கூறி​யுள்​ளனர்.

அ.தி.மு.க. : அன்பு மணி பா.ம.க. கூட்டணி ஒப்பந்தம்

சென்னை:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். இதன்பின், எடப்பாடி பழனிசாமி- அன்புமணி இடையே நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், அதிமுக – பாமக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி தந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “அனைத்திந்திய அண்ணா திராவிட திராவிட முன்னேற்றக் கழகம் – பாரதிய ஜனதா வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ள […]

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் 14-ம் தேதி மகர​விளக்கு பூஜை நடை​பெற உள்​ளது. இதற்​காக கடந்த 30-ம் தேதி மாலை கோயில் நடை திறக்​கப்​பட்​டது. இது​வரை சுமார் 6.5 லட்​சம் பக்​தர்​கள் தரிசனம் செய்​துள்​ளனர். உற்சவ நிகழ்ச்​சிக்கு இன்​னும் ஒரு வாரமே உள்​ள​தால் பக்தர்​கள் கூட்​டம் கடந்த 2 நாட்​களாகவே அதி​கரித்து வரு​கிறது. சபரிமலை வழித்​தடங்​களில் இது​வரை இல்​லாத கூட்​டம் நேற்று இருந்​தது.எரி​மேலி​யில் இருந்து பெரு​வழிப்​பாதை, பம்​பை, கணபதி கோயில், மரக்​கூட்​டம், அப்​பாச்​சிமேடு, பெரிய நடைப்​பந்​தல் உள்​ளிட்ட பகு​தி​களி​லும் […]

அமெரிக்காவுக்கு 50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை வழங்கியது வெனிசுவேலா

வெனிசுவேலாவின் இடைக்கால அதிகாரிகள், அமெரிக்காவுக்கு உயர்தரத்திலான 30 மில்லியன் முதல் 50 மில்லியன் பேரல்கள் வரையிலான கச்சா எண்ணெயை வழங்கியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சந்தை விலையிலேயே இவை பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், வெனிசுவேலாவின் இடைக்கால அதிகாரிகள் அமெரிக்காவுக்கு உயர்தரத்திலான 30 மில்லியன் முதல் 50 மில்லியன் வரையிலான கச்சா எண்ணெயை வழங்கியுள்ளதாக டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் ஐஏஎஸ் பயிற்சி மாணவியிடம் செயின் பறிப்பு

சென்னை தாம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிவில் சர்வீஸ் பயிற்சி நிறுவனத்தில் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருவர் பயிற்சி பெற்று வருகிறார். இவர் நேற்று மதியம் வகுப்பு முடிந்து பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றுள்ளார். இந்து மிஷன் மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, லுங்கி மற்றும் சட்டை அணிந்துகொண்டு சாதாரணமாக வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென பாய்ந்து வந்து, மாணவி அணிந்திருந்த 7 பவுன் தாலி […]