பாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய குரங்கு
பெங்களூர் அருகே 85 வயது மூதாட்டி குரங்குகளுக்கு உணவளித்து வந்தார். அவர் சமீபத்தில் காலமானார். இதனை தொடர்ந்து அங்கு வந்த ஒரு குரங்கு அவரது உடலை கட்டி தழுவி இறுதி அஞ்சலி செலுத்தியது. குரங்கு மூதாட்டியை கட்டி தழுவிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி உள்ளன.
அரசு மருத்துவமனையில் லேப்டாப் திருடிய கும்பல் கைது
தாம்பரம் அரசு மருத்துவமனையில் நிர்வாக பகுதிகள் புகுந்து லேப்டாப் திருடி இரண்டு பேர் அங்கேயே படுத்து உறங்கி மறுநாள் காலையில் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சமிபத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் செயல்படுகிறது. அதன் அருகாமையில் நிர்வாக அலுவலக கட்டிடம் செயல்படும் நிலையில் அந்த அலுவலக கதவு உடைத்து உள்ளே சென்ற இரண்டு நபர்கள் 7 லேப்டாப்களை திருடி சென்றனர். இது குறித்து சிசிடிவி காட்சிகளுடம் தலைமை மருத்துவர் […]
வணிக சிலிண்டர்களின் விநியோகத்தை 70%ஆக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவிப்பு.
மத்திய கிழக்குப் போரால் குறைக்கப்பட்ட, மாநிலங்களுக்கு கொடுக்கவேண்டிய வணிக சிலிண்டர்களின் அளவை 70%ஆக உயர்த்தி வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு. போரால் 30%ஆக குறைக்கப்பட்டு பின்னர் 50%ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 70% இயல்பு நிலைக்கு வணிக சிலிண்டர்களின் விநியோகத்தை உறுதி செய்வதாக அறிவிப்பு.
கோடை விடுமுறை: 6 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு…தெற்கு ரயில்வே அறிவிப்பு
தெற்கு ரயில்வே, கோடை விடுமுறைக் கால பயணிகளின் வசதிக்காக ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 6 சிறப்பு ரயில்களின் சேவையை மேலும் நீட்டித்துள்ளது. இந்த அறிவிப்பு, சொந்த ஊர்களுக்குச் செல்லவும், சுற்றுலாத் தலங்களுக்குப் பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ள மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களின் நீட்டிக்கப்பட்ட சேவை காலம், புறப்படும் மற்றும் சேரும் நேரங்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை இங்கே காணலாம். இந்த சிறப்பு ரயில்களின் முக்கியத்துவம்: பயணிகளின் வசதி: கோடை விடுமுறையில் ஏற்படும் அதிகப்படியான […]
தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய் ஆவேசம்.
அரசியல் விமர்சகர், அப்துல் கலாமின் முன்னாள் உதவியாளர் என்று கூறப்படும் பொன்ராஜ் பேசிய பேச்சு ஒன்று சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. “இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார் என தவெக விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். […]
“நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசிக்கவில்லை”: அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்தது.
பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வெள்ளை மாளிகை கூறியதைத் தொடர்ந்து, ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடவில்லை என்றும், தொடர்ந்து போரிடவே விரும்புகிறது என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். “தற்சமயம், எதிர்ப்பைத் தொடர்வதே எங்கள் கொள்கை,” என்று அராக்சி அரசு தொலைக்காட்சியில் கூறினார். மேலும், “நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை – இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை, எங்கள் நிலைப்பாடு முற்றிலும் கொள்கை ரீதியானது என்று நான் நம்புகிறேன்,” என்றும் அவர் கூறினார். “இப்போது […]
ஈரான் போர் மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைத்த ட்ரம்ப்..!
ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் திட்டத்தை மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு. ஹார்மூஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் கட்டமைப்புகள் தகர்க்கப்படும் என அறிவித்ததை, ஏற்கனவே 5 நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்தார் ட்ரம்ப்.
முட்டை விலை கடும் வீழ்ச்சி!
முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.3.85ஆக நிர்ணயம். நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 405 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 20 காசுகள் குறைக்க முடிவு […]
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைப்பு.
ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. லிட்டருக்கு ரூ.13ஆக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.3ஆக குறைக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு 10 ரூபாயாக இருந்த டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இந்தக் கலால் வரி நீக்கத்தால் சில்லறை வர்த்தகத்தில் பெட்ரோல் – டீசல் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதே நேரம் இது விலை உயர்வை தடுக்கும் நடவடிக்கையாகும். […]
ஈரானில் இதுவரை பத்தாயிரம் இடங்களில் தாக்குதல்
ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்குமான போர் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்காவின் ராணுவ மத்திய கமாண்டை சேர்ந்த கடற்படை அட்மிரல் பிராட் கூப்பர் நேற்று கூறியதாவது: ஈரான் போரின்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கி அழித்துள்ளோம். இதில் பல்வேறு வெடிபொருட்கள் ஆலைகளும் அடங்கும். இதுதொடர்பான வீடியோக்களையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம் என்றார்.