தங்கம் விலை குறைந்தது.

22 காரட் ஆபரணத் தங்கம்ஒரு கிராம் நேற்று ரூ.10,005 ஆக இருந்த விலை, இன்று ரூ.35 குறைந்து ரூ.9,970 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் (8 கிராம்) நேற்று ரூ.80,040 ஆக இருந்த விலை, இன்று ரூ.280 குறைந்து ரூ.79,760 ஆக விற்பனையாகிறது.

உக்ரைன் தலைநகர் மீது 800 டிரோன் ஏவி ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா 800 ட்ரோன்களை ஏவியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது. இத்தாக்குதலில் உக்ரைன் அரசு தலைமை அலுவலக கட்டிடத்தின் மேல்தள பகுதியில் தீப்பிடித்து, புகை எழுந்தது. இதை சர்வதேச ஊடகவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். 800 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதல் நேற்று நடந்துள்ளது

பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் நரேந்திர மோடி

பாஜக எம்​பி.க்​களின் இரண்டு நாள் பயிற்சி பட்​டறை நேற்று தொடங்​கியது. இந்த கூட்​டத்​தில் பிரதமர் மோடி கடைசி வரிசை​யில் அமர்ந்​திருந்து நிகழ்ச்​சிகளை கவனித்​தார். இதுதொடர்​பான புகைப்​படம் தற்​போது சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாகி உள்​ளது. இந்த கூட்​டத்​தில் குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் எவ்​வாறு வாக்​களிப்​பது என்​ப​தற்​கான பயிற்​சிகளும் வழங்​கப்பட உள்​ளது.

நாளை சந்திரகிரகணம் :திருப்பதி கோவில் மூடல்

நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.50 மணியில் இருந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரம் முன்பே திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட அனைத்துக் கோவில்களும் மூடுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது.அதன்படி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.15 மணியளவில் மூடப்படும். நாளைமறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணியளவில் கோவிலின் நடை திறந்து தூய்மைப்பணி, புண்யவசனம் நடத்தப்படுகிறது. காலை 8 மணியளவில் […]

மோடி சிறந்த பிரதமர் – டிரம்ப் பாராட்டு

அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது : மோடி சிறந்த பிரதமர். ஆனால் அவர் இப்போது செய்வது தான் பிடிக்கவில்லை . அதற்காத இந்தியா – பாசிஸ்தான் உறவில் மாற்றம் வராது. என்றார்.

தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் – முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கான பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் ஜெர்மனியில் மேற்கொண்ட பயணத்தில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், இங்கிலாந்தில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஜெர்மனியில் ரூ.7,020 கோடியும், இங்கிலாந்தில் ரூ.8,496 கோடியும் என மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.

அமெரிக்க வரி பாதிப்பை ஜி.எஸ். டி. சலுகை சரி செய்யுமா?

பொருளா​தார ஆலோ​சகர் அனந்த நாகேஸ்​வரன் செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: இந்தியா மீது அமெரிக்க விதித்துள்ள 50 சதவீத வரி நீண்ட காலம் நீடிக்​காது என நினைக்​கிறேன். இந்​தியா மீது அதிக வரி விதிப்​பது எதிர்​பார்த்த பலனை தராது என்​பதை அமெரிக்கா உணரத் தொடங்​கி​யுள்​ளது. உள்​நாட்​டில் ஜிஎஸ்டி வரியை மத்​திய அரசு குறைத்​துள்​ளது. இதுநாட்​டில் நுகர்வை அதி​கரிக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அமெரிக்​கா​வின் அதிக வரி விதிப்​பால் ஏற்​படும் ஏற்​றுமதி இழப்​பை, உள்​நாட்டு நுகர்வு அதி​கரிப்பு ஈடு​செய்​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பெரும்​பாலான […]

செங்கோட்டையன் பற்றி பேச மறுக்கும் எடப்பாடி

செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். அப்போதுதான் வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். இதற்காக பழனிசாமிக்கு கால அவகாசமும் அளிப்பதாக தெரிவித்திருந்தார். இது குறித்து தேனியில் தங்கியிருந்த பழனிசாமியிடம் கேள்வி கேட்க செய்தியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், அதனைத் தவிர்த்துவிட்டு காரில் அவசரமாக கம்பம் பிரச்சாரத்துக்கு கிளம்பிச் சென்றார். கம்பம் பிரச்சாரத்திலும் செங்கோட்டையன் குறித்த பேச்சு இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அங்கும் செங்கோட்டையனைப் பற்றி அவர் எதுவும் […]

எடப்பாடி வேளை மறித்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்

கம்பம் பிரச்சாரத்துக்காக தேனியில் இருந்து பழனிசாமி சென்று கொண்டிருந்தார். அப்போது அனுமந்தன்பட்டி அருகே அமமுகவினர் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது வாகனத்தை திடீரென மறித்தனர். அதிமுகவில் இருந்து விலகியவர்கள் அனைவரும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். போலீஸார் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து வாகனங்கள் கிளம்பிச் சென்றன.

சமோசா வாங்கி தராத கணவன் மீது மனைவி குடும்பத்தினர் தாக்குதல்.

உத்தர பிரதேசம் பிலிபித் பகு​தி​யில் உள்ள அனந்​த்பூரைச் சேர்ந்​தவர் சிவம் குமார். இவரது மனைவி சங்​கீ​தா. கடந்த மாதம் 30-ம் தேதி அன்று சிவம் குமாரிடம் சமோசா வாங்கி வரும்​படி சங்​கீதா கூறி​யுள்​ளார். ஆனால், சிவம் குமார் வெறும் கையுடன் வீடு திரும்​பி​யுள்​ளார். சமோசா எங்கே என மனைவி கேட்​ட​போது, வாங்க மறந்து விட்​டேன் என சிவம் குமார் கூறி​யுள்​ளார். இதனால் இரு​வர் இடையே வாய்த் தகராறு ஏற்​பட்​டது. மறு​நாள் தனது குடும்​பத்​தினரை வரவழைத்த சங்​கீ​தா, சமோசா […]