தமிழகத்தில் 45 மாதத்தில் 6700 கொலை. – எச்.ராஜா
பா.ஜ.க தலைவர் எச்.ராஜா கூறியதாவது :தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கடந்த 45 மாதங்களில் 6,700 கொலைகள் நடந்துள்ளன. பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள்பயன்பாடு அதிகரித்துள்ளது. மீண்டும் திமுக அரசு அமைந்தால் அடுத்த தலைமுறை அழிந்து போகும். எனவே, அடுத்த தலைமுறையை காப்பாற்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு அரசியலில் இருந்து விடை கொடுத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நேபாளத்தில் முன்னாள் பிரதமர் மனைவி உயிரோடு எரிப்பு
நேபாளத்தில் முன்னாள் பிரதமர் மனைவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார் நேபாள தலைநகரில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன பாராளுமன்றம் தொலைக்காட்சி உறுப்பினர் பாரக கட்டிடங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மோடி வாழ்த்து
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சிபி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் மேலும் முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் சி பி ராதாகிருஷ்ணன் கூறுகையில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள் எல்லாவற்றிலும் அரசியல் செய்யக்கூடாது என்று கூறினார்
டெல்லியில் செங்கோட்டையன் அமித்ஷா சந்திப்பு
டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துப் பேசியது அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .இதற்கிடையே செங்கோட்டையன் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகின்றார்.
தாம்பரம் பகுதியில் கேபிள் கழுத்தில் சிக்கி முதியவர் படுகாயம்
தாம்பரம் மா நகராட்சி மண்டலம் 3,வார்டு 22/39 , திருமலை நகர் வடக்கு விரிவாக்கம் இரண்டாம் குறுக்கு தெருவில்,சட்ட விரோதமாக கேபிள்கள் மின் கம்பத்தில் கட்டப்பட்டு உள்ளன. இதை பற்றி ஏற்கனவே பல முறை புகார் அளித்தும் ஒரு பயனும் இல்லை. முதியவர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வரும் போது, சட்ட விரோத கேபிள் கழுத்தில் மாட்டி கீழே விழுந்தார். நல் வாய்ப்பாக ,உயிர் சேதம் ஏதும் இல்லை. அந்த கேபிளில் மின்சாரம் பாய்ந்து இருந்தால் […]
எடப்பாடி முதல்வர் வேட்பாளராக நான் கூற வில்லை .
நயினார் நாகேந்திரன் பதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நான் அறிவிக்கவில்லை. கூட்டணியில் இருந்து அமமுக விலக நான்தான் காரணம் என்று எந்த அடிப்படையில் டிடிவி தினகரன் கூறுகிறார் என தெரியவில்லை. அதிமுக இணைய வேண்டும் என ஆரம்ப காலத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன்” என்று நயினார் நாகேந்திரன் பேசினார்
அஜித் படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை
அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தில்இளையராஜா பாடலை பயன்படுத்த இடைக்கால தடை, விதிக்கப்பட்டுள்ளது இளையராஜா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது இளையராஜா மனுவுக்கு பதிலளிக்ககுட் பேட் அக்லி தயாரிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இன்ஸ்டாகிராமில் காதலன் தடை:4வது மாடியில் இருந்து குதித்த காதலி
சென்னை, சேப்பாக்கத்தில் இன்ஸ்டாகிராமில்காதலன் பிளாக் செய்ததால், ஹோட்டல் மாடியில் இருந்து கல்லூரிமாணவி குதித்தார். 4வது மாடியில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்த இளம்பெண் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இது பற்றி
தலைமைச் செயலகம் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
*சென்னை தலைமை செயலகத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. *காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர் சென்னை ஆளுநர் மாளிகைக்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்தது.இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: ஸ்டாலின் அறிவிப்பு
தூத்துக்குடியைப் போல ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்து இன்று சென்னை திரும்பிய ஸ்டாலின் இதனை தெரிவித்தார்