HIB விசாவை குறைத்த ஐ.டி. நிறுவனங்கள்

இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள், அமெரிக்காவில் பணியாளர்களை அனுப்ப பயன்படுத்தும் H-1B விசாவிற்கான தங்கள் சார்ந்திருப்பைக் குறைத்துக் கொண்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் ஆறு முன்னணி ஐ.டி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா மற்றும் எல்.டி.ஐ. மைண்ட் ட்ரீ ஆகியவை, H-1B விசா விண்ணப்பங்களை சராசரியாக 46% குறைத்துள்ளன. இது, உலகளாவிய தொழில்நுட்ப உலகில் ஒரு பெரிய மாற்றத்தை உணர்த்துகிறது. இந்த […]

ஆப்கானிஸ்தானில் இணைய சேவைக்கு தாலிபான் தடை

ஆப்​கானிஸ்​தானில் மேலும் 5 மாகாணங்​களில் ஃபைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. வடக்கு ஆப்​கானிஸ்​தான் பால்க் மாகாணத்​தில் கடந்த செவ்​வாய்க்​கிழமை ஃபைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டது. ஒழுக்கக்கேட்டை தடுக்​கும் நடவடிக்​கை​யாக இத்​தடை விதிக்​கப்​பட்​டுள்​ள​தாக மாகாண அரசு தெரி​வித்​தது.

சிம்பு திருமணம் பற்றி டி.ராஜேந்தர் உருக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு என்ற சிலம்பரசனுக்கு தற்போது 42 வயதாகிறது. ஆனாலும் முரட்டு சிங்கிளாகவே வலம் வருகிறார். சிம்புவுக்கு பெண் பார்க்கும் படலமும் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற டி.ராஜேந்தரிடம், சின்னத்திரை நடிகை சாந்தினி என்பவர், ‘நான் திருமணம் செய்தால் சிம்புவை தான் திருமணம் செய்வேன்’ என்று கூறி னார். இதைக்கேட்டதும் டி.ராஜேந்தர் ‘எமோஷனல்’ ஆகிப்போனார். ”நானும் மனுஷன் தானேம்மா. எனக்கும் இதயம் இருக்கு. மனைவியை விரும்புவது மட்டுமல்ல, […]

நடிகர் விஜய் வீட்டுக்குள் நுழைந்த வாலிபர்

சென்னையை அடுத்த நீலாங்கரையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் வீடு உள்ளது. நேற்று மாலை இந்த வீட்டுக்குள் நுழைந்த வாலிபர், மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டிருந்தார். இதை பார்த்த பாது காப்பு பணியில் இருந்த வீட்டு காவலாளிகள், அந்த வாலி பரை பிடித்து நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (வயது 24) என்பதும், கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் உள்ள சித்தி வீட்டில் வசிப்பதும் […]

திருப்பு முனை தரும் திருச்சி -விஜய் பேச்சு

திருச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது: அந்தக் காலத்தில் குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டுதான் போருக்கு செல்வார்கள். அதுபோலதான் அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலுக்கு திருச்சியில், இங்கே இப்போது பணியை தொடங்குகிறேன். எம்ஜிஆர் முதல் மாநில மாநாடு நடத்திய இடம் திருச்சி, அறிஞர் அண்ணர் அரசியலில் களமாட விரும்பிய இடம் திருச்சி, பெரியாரும், அண்ணாவும், எம்ஜிஆரும் நேசித்த இடம் திருச்சி. மதச்சார்பின்மைக்கு பெயர்பெற்றது திருச்சி மண்.திருச்சி திருப்புமுனை தரும் என்று கூறினார்.

விஜய் பிரச்சாரத்தில் மைக் கோளாறு.

திருச்சியில் விஜய் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மைக் வேலை செய்யவில்லை. ஸ்பீக்கர்களும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் அவர் பேச்சு தொலைக்காட்சி நேரலைகளில் சரிவர கேட்கவில்லை. மேலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை சுருக்கமாக 20 நிமிடத்தில் முடித்துக் கொண்டார்.

விஜய் வருகையால் திருச்சியில் போக்குவரத்து நெரிசல்

தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் என்று திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கினார் அவர் தனி விமானத்தில் திருச்சிக்கு வந்தால் விமான நிலையத்திலிருந்து பிரச்சாரம் பேசும் இடத்திற்கு பஸ்ஸில் செல்வதற்கு நாலு மணி நேரம் ஆகிவிட்டது வழியதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்

புலி பிடிக்கும் கூண்டில் வனத்துறை ஊழியர்களை சிறை வைத்த கிராமம்

கர்நாடக மாநிலம் பொம்மனகுண்டு என்ற இடத்தில் காட்டுக்குள் புலி வந்ததாக கிராமவாசிகள் கண்டுபிடித்தனர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள் ஆனால் அவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது இதனால் வனத்துறை ஊழியர்களை அவர்கள் கொண்டு வந்த புலி பிடிக்கும் கூண்டுக்குள் அடைத்து வைத்தார்கள். பல மணி நேரம் பேச்சு நடத்திய பிறகு அவர்களை வெளியே விட்டனர்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் தற்போது சந்தையில் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் போன்கள் அறிமுகமாகி உள்ளன. இந்த முறை புது வரவாக ஐபோன் 17 ஏர் வெளிவந்துள்ளது. இதோடு ஆப்பிள் ஏர்பாட்ஸ் புரோ 3, ஆப்பிள் வாட்ச் எஸ்இ, ஆப்பிள் வாட்ச் 11 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் 3 அல்ட்ரா உள்ளிட்ட கேட்ஜெட்களும் அறிமுகமாகி உள்ளன. வரும் 19-ம் தேதி சந்தையில் இவை விற்பனைக்கும் கிடைக்கும் என […]

டிரம்புடன் பேச தயார் -மோடி அறிவிப்பு

பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பேச தயாராக இருப்பதாக தெரிவித்தார்.அமெரிக்காவும் இந்தியாவும் இயற்கையான கூட்டாளிகள் என்று அவர் கூறினார் .மோடியுடன் பேச தயாராக இருப்பதாக ட்ரம்பும் அறிவித்தார்