டிரம்ப் எதிர்ப்பாளர் நியுயார்க் மேயர் ஆனார்
நியூ யார்க் நகர மேயராக சோக்ரான் மம்தானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, நியூ யார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர். தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் மேயர். ஆப்பிரிக்காவில் பிறந்த முதல் மேயர். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நியூ யார்க் நகரத்தின் மிக இளைய மேயர் (34 வயதில்). இவர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ (Andrew Cuomo) மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவா […]
அனில் அம்பானியின் சொத்து முடக்கம்.
பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.3,084 கோடி சொத்துகள் முடக்க பட்டன வங்கிகளிடம் பெற்ற கடன்களை தவறாக பயன்படுத்தியதற்காக நிலங்கள், பங்குகள், வங்கிக்கணக்கு உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை. எடுத்து உள்ளது.
“தொழிலாளர்களை மோசமாக நடத்தும் காங்., தி.மு.க.”பிரதமர் மோடி விமர்சனம்
வெளிமாநிலங்களில் உள்ள பீகார் மாநில புலம்பெயர் தொழிலாளர்களை காங்கிரஸ் உள்பட இண்டியா கூட்டணி கட்சிகள் அவமதித்து வருவதாக பிரதமர் மோடி விமர்சனம். தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மாநிலத்தவர்களை தி.மு.க.வினர் மோசமாக நடத்தியதாகவும் குற்றச்சாட்டு.
ஆன்ட்ரூ-வின் ‘இளவரசர்’ பட்டத்தை இங்கிலாந்து மன்னர் சார்லஸ் பறித்தார்.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சகோதரர் ஆன்ட்ரூவின் ‘இளவரசர்’ பட்டத்தை இங்கிலாந்து மன்னர் சார்லஸ் பறித்தார். இளவரசர் பட்டத்தை பறித்தது மட்டும் அல்லாமல் ஆன்ட்ரூவை மாளிகையை விட்டும் வெளியேற்றினார். அரச குடும்பத்தில் முன்னெப்போதும் நடந்திராத நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை.
பிரதமர் மோடி மரியாதை செலுத்தியபோது ஒற்றுமை சிலைக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளையொட்டி, அவரது உருவம் பொறித்த நாணயத்தையும், தபால் தலையையும் வெளியிட்டார் பிரதமர் மோடி.
கேரளாவிலும் பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000
தமிழ்நாட்டைப் போல கேரளாவிலும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அமலுக்கு வருகிறது என அந்த மாநில முதல்வர் பிரணாய் விஜயன் அறிவித்துள்ளார் 31 லட்சம் பெண்களுக்கு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு 10 கட்சிகள் எதிர்ப்பு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தினார். திருத்தப் பணிகளுக்கு அதிமுக, பாஜக ஆதரவு தெரிவித்த நிலையில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 10 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்புக்கு முழுக்கு ?
நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாகத் தகவல் வெளியானது. இதை கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் உறுதிப்படுத்தி இருந்தனர். ஆனால் இதற்கான கதை கிடைக்கவில்லை என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதை நெல்சன் இயக்குவார் என்றும் 2027-ல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறதுஇந்த படத்தில் நடித்த பிறகு அவர் நடிப்புக்கு முழுக்கு போடுவார் என்று கூறப்படுகிறது.
குடும்ப பென்சனுக்கு உச்சவரம்பை உயர்த்த முடிவு
குடும்ப நலநிதியில் சேர தற்போது மாத வருமானத்தின் உச்சவரம்பு ரூபாய் 15 ஆயிரம் ஆக உள்ளது .இதனை ரூபாய் 25 ஆயிரம் ஆக்க குடும்ப நல நிதி அமைப்பு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது விரைவில் அது பற்றி முடிவு எடுக்கப்பட உள்ளது.
குரூப் 4 தேர்வு சான்றிதழ் பதிவேற்ற அவகாசம்
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நவம்பர் 7ம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்ற அவகாசம். வழங்கப்பட்டு உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைன் மூலம் வரும் நவ.7ம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் மேலும் தகவலுக்கு 1800 419 0958 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம். 4,662 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவு கடந்த 12ம் தேதி வெளியானது.