சைபர் கிரைம் மோசடியில் பெண் மருத்துவர் உயிரிழப்பு
ஹைதராபாத்தை சேர்ந்த 76 வயதுள்ள ஒரு பெண் மருத்துவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி, பெங்களூரு போலீஸ் சின்னத்துடன் ஒரு வாட்ஸ்ஆப் கால் வந்துள்ளது. அதில் பேசியவர்கள், சிலரை வெளிநாட்டுக்கு விற்ற வழக்கு தொடர்பாக உச்சநீதி மன்றம், ரிசர்வ் வங்கி, கர்நாடக போலீஸ் மற்றும் அமலாக்கத் துறையினரின் போலி கைது வாரண்ட்களை வீடியோ கால் மூலம் காண்பித்து உங்களை ‘டிஜிட்டல் கைது’ செய்துள்ளோம் என மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன அவர், அவர்கள் கூறியபடி […]
பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் – அரசாணை வெளியீடு
பனை மரங்களை பாதுகாப்பது என்பது சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பொருளாதாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் முக்கியமானது. பனைமரங்கள் வறட்சியை தாங்கி வலுவாக நிற்பதுடன், பனை வெள்ளம், பாய் உள்ளிட்ட பல பொருட்களை தந்து, விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளித்து வருகிறது. புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது நிலச்சரிவை தடுப்பதில் பனை மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தநிலையில், பனை மரத்தை வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு […]
திருப்பு முனை தரும் திருச்சி -விஜய் பேச்சு
திருச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது: அந்தக் காலத்தில் குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டுதான் போருக்கு செல்வார்கள். அதுபோலதான் அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலுக்கு திருச்சியில், இங்கே இப்போது பணியை தொடங்குகிறேன். எம்ஜிஆர் முதல் மாநில மாநாடு நடத்திய இடம் திருச்சி, அறிஞர் அண்ணர் அரசியலில் களமாட விரும்பிய இடம் திருச்சி, பெரியாரும், அண்ணாவும், எம்ஜிஆரும் நேசித்த இடம் திருச்சி. மதச்சார்பின்மைக்கு பெயர்பெற்றது திருச்சி மண்.திருச்சி திருப்புமுனை தரும் என்று கூறினார்.
விஜய் பிரச்சாரத்தில் மைக் கோளாறு.
திருச்சியில் விஜய் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மைக் வேலை செய்யவில்லை. ஸ்பீக்கர்களும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் அவர் பேச்சு தொலைக்காட்சி நேரலைகளில் சரிவர கேட்கவில்லை. மேலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை சுருக்கமாக 20 நிமிடத்தில் முடித்துக் கொண்டார்.
விஜய் வருகையால் திருச்சியில் போக்குவரத்து நெரிசல்
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் என்று திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கினார் அவர் தனி விமானத்தில் திருச்சிக்கு வந்தால் விமான நிலையத்திலிருந்து பிரச்சாரம் பேசும் இடத்திற்கு பஸ்ஸில் செல்வதற்கு நாலு மணி நேரம் ஆகிவிட்டது வழியதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்
பயணிகளை தரக்குறைவாக நடத்தும் தனியார் பேருந்து ஊழியர் வீடியோ வைரல்
திருச்செந்தூர் – தூத்துக்குடி வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில் பயணிகளை தரக்குறைவாக நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, தனியார் பேருந்து நடத்துனர் ஏறவிடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் பேசியது இணையத்தில் பரவி வருகிறது.
குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதாக வழக்கு
ஐகோர்ட்டில், சமூக ஆர்வலர் டேவிட் மனோகர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “குரோம்பேட்டை, பல்லாவ ரம், ஜி.எஸ்.டி. சாலை பகுதிகளில் மழைக்காலங்களில் கடுமை யான வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதற்கு சாலையோர கால் வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததும், குப்பைகளை கொட்டுவதை தடுக்காததும்தான் முக்கிய காரணம். பெரும்பா லான இடங்களில் மழைநீர் வடிகால் வசதியும் இல்லை. பல்லாவரம் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் குரோம்பேட்டை வெற்றி தியேட்டருக்கு எதிரே செல்லும் ஏ கால்வாய், தாம்பரம் அரசு […]
ஓணம் பண்டிகை வாழை இலை கட்டு ரூ.5,000
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள காய்கறி சந்தையில் வாழை இலை கடுமையாக விலை உயர்வு. பெரிய வாழை இலை கட்டு ஒன்று ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி.
ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆடைகள் விலை குறைகிறது.
மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கையால், தொழில் வளர்ச்சி அடைவதுடன் ஏழை, நடுத்தர மக்களின் முக்கிய அடிப்படை தேவையான ஆடையை குறைந்த விலையில் பெறுவதற்கு வழி வகை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது” என்று ஜவுளித் தொழில் துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் மசாஜ்.தலைமை ஆசிரியை இடமாற்றம்
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பள்ளி வகுப்பறையில் தலைமை ஆசிரியரின் கை, கால்களை மாணவர்கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டு உள்ளார்.