பொடி இட்லி’ முதல் ‘பிரியாணி’ வரை.. Air India அசத்தல்!*

Air India நிறுவனத்தின் சர்வதேச விமானங்களில் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் உணவுகளில், பல்வேறு தென் மாநில உணவு வகைகளும் புதிதாக சேர்ப்பு. குறிப்பாக தமிழ்நாட்டின் மிளகாய் பொடி இட்லி, முந்திரி உப்புமா, சாம்பார், மசால் தோசை, கிச்சடி, பரோட்டா, தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி உள்ளிட்டவையும், பிரியாணி, மலபார் கோழிக் கறி, சிக்கன் பிம்பாப் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.*

சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்காலில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். பாம்பன், ராமேஸ்வரம் ஆகிய 2 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து வடதமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரும்

இ.ஸ்கூட்டர் வாங்க மானியம்

சொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுஅறிவித்துள்ளது தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் இணையதளமான tnuwwb.tn.gov.in-ல் விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் மெட்ரோ , பேருந்து, மின்சார ரயிலில் முதல் முறை செல்ல ரூ.1 கட்டணம்

மெட்ரோ ரயில், மின்சார ரயில், பேருந்து ஆகியவற்றில் பயணிக்க சென்னை ஒன் செயலியை அரசு தொடங்கியது ரூ.1க்கு பயணிக்கும் சலுகை இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. BHIM, Navi செயலிகளை பயன்படுத்தி யுபிஐ மூலம் பணம் செலுத்துவோர் ரூ.1க்கு முதல்முறை மட்டும் செல்லலாம்.

சென்னையில் 9 இடங்களில் மின்சார கார் சார்ஜிங் நிலையம்

சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்த தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் திட்டமிட்டு உள்ளது பெசன்ட் நகர் கடற்கரை, அம்பத்தூர் மங்கள் ஏரி பூங்கா, தி.நகர் விளையாட்டு திடல், சோமசுந்தரம் பூங்கா வாகன நிறுத்துடம், செம்மொழி பூங்கா, மெரினா, அண்ணா நகர் போகன் வில்லா பூங்கா, நாகேஸ்வராவ் பூங்கா, அஷ்டலட்சுமி கோயில் வாகன நிறுத்தம் ஆகிய இடங்களில் அமைய உள்ளன.

35 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை

வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய 3 விசைப் படகுகளும், ஒரு நாட்டுப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி தமிழகத்தைச் சேர்ந்த 74 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த பல ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட 242 மீன்பிடிப் படகுகளும் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

ராஜஸ்தான் மாநிலத்தில் பஸ் விபத்தில் 15 பக்தர்கள் பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் லாரி மீது பேருந்து மோதியதில் 15 பக்தர்கள் உயிரிழந்தனர்.கோலாய்ட் ஆலயத்திற்கு சென்று திரும்பியபோது பலோடி மாவட்டத்தில் நின்றிருந்த லாரி மீது பேருந்து மோதி இந்த விபத்து நடந்துள்ளது

ஸ்மார்ட்போனுக்கு பதில் டைல்ஸ் அனுப்பிய அமேசான்

பெங்களூரு சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் அமேசானில் ரூ. 1.87 லட்சம் மதிப்புள்ள Samsung Galaxy Fold 7 போனை ஆர்டர் செய்கிறார் ஆர்டர் வந்ததும், அதைபிரிக்கும் போது போனுக்கு பதிலாக ஒரு டைல்ஸ் துண்டு இருப்பை கண்டு அதிர்ச்சியடைந்தார். சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டலிலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார் வீடியோ ரிக்கார்ட் மூலம் அன்பாக்ஸ் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

தீபாவளி பரிசு கொடுக்க மத்திய அரசு அலுவலகங்களில் தடை

மத்திய நிதித்துறை இலாக அனைத்து துறைகளுக்கும் தீபாவளி பண்டிகை குறித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது அதில் தீபாவளியையொட்டி பரிசுக்காக எந்த அரசு துறையும் செலவழிக்க கூடாது தீபாவளி மட்டுமல்லாமல் மற்ற பண்டிகைகளுக்கும் எந்த செலவு செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது