டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்

ல்லி அருகே ஃபரிதாபாத்தில் லிப்ட் தருவதாகக் கூறி, 28 வயது பெண்ணை வேனில் ஏற்றி பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசிய கொடூரம். பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரில் விசாரணை நடத்தி சிசிடிவி மூலம் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முதலில் புத்தாண்டை கொண்டாடிய நாடு

‘கிறிஸ்துமஸ் தீவு” எனப்படும் பசிபிக் தீவு நாடான “கிரிபதி”தான் 2026 புத்தாண்டை முதலில் வரவேற்கும் நாடாக இருக்கிறது. சர்வதேச தேதிக் கோட்டிற்கு அருகில் இத்தீவு அமைந்துள்ளதால் கிட்டத்தட்ட ஒருநாள் முன்னதாகவே புத்தாண்டு பிறக்கிறது.இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் சுமார் 3.30 மணிக்கு அங்கு நள்ளிரவை எட்டியதால் உலகிலேயே முதல் நாடாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு. சி, டி பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்ச வரம்புக்குட்பட்டு மிகை ஊதியம். ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ரூ.1,000 பொங்கல் போனஸ். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கும் ரூ.1,000 போனஸ்.

தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.99,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.12,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1000 குறைந்து, ரூ.2.56 லட்சத்திற்கு விற்பனை.

பொங்கலுக்கு பிறகு கூட்டணி உறுதியாகும் – நயினார் நாகேந்திரன்

பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கூறியதாவது:- தேசிய ஜனநாயக கூட்டணி பொங்கலுக்கு பிறகு உறுதியாகும் எங்கள் அணியில் ஓபிஎஸ் மற்றும் தினகரன் இணைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றார்.

சிகரெட் விலை உயர்கிறது

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என நிதி அமைச்சகம் தெரிவிப்பு! இதன்படி ஒரு சிகரெட்டின் விலை ரூ.72க்கு விற்கப்படலாம் என்றொரு செய்தி பரவுகிறது

ரஜினி புத்தாண்டு வாழ்த்து

“நான் எப்பவுமே போற ரூட்டை பத்தி கவலை பட்டதே கிடையாது. ஆண்டவன் மேல பாரத்தை போட்டுட்டு வண்டி எந்த ரூட்ல போகுதோ.. அந்த ரூட்ல, ‘சிவா’-ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்..!” ‘முத்து’ திரைப்படக் காட்சியை பதிவிட்டு 2026 புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

குரோம்பேட்டை புருஷோத்தம நகர் ஸ்ரீ சாஸ்தா சேவா சங்கம் சார்பில் விளக்கு பூஜை

குரோம்பேட்டை புருஷோத்தமநகர் ஸ்ரீ சாஸ்தா சேவா சங்கம் சார்பில் 47 ஆம் ஆண்டு லட்சார்ச்சனை வைபவம், புவனேஸ்வரி நகர் ஸ்ரீ அபிராமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து புதன்கிழமை காலை 5:30 மணியளவில் மகா கணபதி ஹோமம் நடந்தது 9 மணி அளவில் திருவிளக்கு பூஜை ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜை வழிபாடு செய்தனர். மாலை 4 மணி அளவில் ஸ்ரீ ஐயப்பனுக்கு […]

சிறுவனுக்கு பாலியல் தொல்லை – சலூன் கடை ஊழியர் கைது

ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அஸ்தினாபுரம் பகுதியில் சலூன் கடை ஊழியர் போக் சோவில் கைது செய்யப்பட்டார்.

திருத்தணியில் சிறுவர்களால் தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் முழுமையாக சிகிச்சை பெறாமல் சென்றதில் மர்மம்!

கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வடமாநில இளைஞர் சுராஜ், முழுமையாக சிகிச்சை பெறாமல் சென்றதில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் ஆம்புலன்ஸில் அவருடன் செல்லாமல் போலீஸார் அலட்சியமாக செயல்பட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட வீடியோ வைரலாகி இந்தியா முழுவதும் பரப்பப்பட்டு வருகிறது. இதனை போலீசார் கண்டித்து உள்ளனர். வட மாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று அரசும் உறுதி செய்துள்ளது.