மயக்கத்தில் விமானி… நடுவானில் கேட்பாரின்றி பறந்த விமானம்
ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து ஸ்பெயினின் செவில்லே நகர் நோக்கி லுப்தான்ஸா ஏர்பஸ் ஏ321 விமானம் ஒன்று பறந்து சென்றுள்ளது.விமானி அவசரத்திற்காக ரெஸ்ட் ரூம் சென்றுள்ளார். இதனால், விமானம் முழுவதும் துணை விமானியின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. அப்போது, துணை விமானிக்கு லேசாக மயக்கம் வந்துள்ளது. அவர், அப்படியே மயக்கத்தில் சரிந்து விட்டார்.வெளியே சென்ற விமானி மீண்டும் விமானி அறைக்குள் வர முயன்றபோது, அதன் கதவு பூட்டிக்கொண்டது.விமானத்தின் கேப்டன், கதவை திறக்க பலமுறை முயன்றுள்ளார். முடியவில்லை. அப்போது, விமான […]
ராக்கெட் தோல்வியை ஆராய குழு அமைப்பு
சென்னை, விமான நிலையத்தில், இஸ்ரோ தலைவர் நாராயணன் அளித்த பேட்டி: நேற்று காலை திட்டமிட்டபடி, 5:59 மணிக்கு, பி.எஸ்.எல்.வி., – – சி 61 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.இதில், நான்கு நிலைகள் உள்ளன. நான்கும் வேலை செய்தால் தான், அதை விண்ணில் வெற்றிகரமாக ஏவி நிலை நிறுத்த முடியும். முதல் இரண்டு நிலைகள் சிறப்பாக செயல்பட்டன. மூன்றாவது நிலையில் கோளாறு ஏற்பட்டதால், ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்த முடியவில்லை. நான்காம் நிலை சிறப்பாக செயல்பட்டது.எதனால் இப்பிரச்னை ஏற்பட்டது என்பதை […]
மக்கள் விழிப்புணர்வு சங்கம் உலக செவிலியர் தினத்தை
ஒட்டி குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் டிபி மருத்துவமனை மேலும் பார்வதி மருத்துவமனை சென்று அங்குள்ள செவிலியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடியது. மருத்துவமனையின் முதன்மை மருத்துவர்களை கௌரவிக்கப்பட்டனர். மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி. சந்தானம் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது இதில் போலீஸ் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு பங்கேற்றார்கள்
குரோம்பேட்டை தியேட்டர் அருகே பிரியாணி கடை ஆக்கிரமிப்பு
குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் வெற்றி திரையரங்கத்தின் அருகில் ஹோட்டல் பிலால் உள்ளது இங்கு மாட்டு இறைச்சி பிரியாணி மட்டும் சிக்கன் பிரியாணிகளை மிகப் பெரிய பாத்திரங்களில் வைத்து நடைபாதையில் பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாதபடி செய்து வருகிறார்கள் என சமூக ஆர்வலர் அசோகன் கூறியுள்ளார் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து மீண்டும் நடை பாதையை பாதசாரிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்
இந்தியாவுக்கு பணம் அனுப்பினால் 5% வரி ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர், தங்களது சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று புதிய மசோதாவில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக கிரீன் கார்டு மற்றும் எச்1பி, எச்2ஏ, எச்2பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் :உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் ஆணை தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பாக நேற்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தரப்பில், “தமிழகத்தில் 2,500-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பணியிடம் காலியாக உள்ளது. எனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் குமணன், “தமிழகத்தில் குறைந்த அளவில் தான் ஆகம விதிக்குட்பட்ட கோயில்கள் […]
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 7000 பேர் நீக்கம்
பிரபல கோடீஸ்வரர் பில்கேட்ஸ் தொடங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 7000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தற்போது பல நிறுவனங்களில் எஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதால் ஆள் குறைப்பு அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது
ரேஷன் கடைகளில் 2 கிலோ 5 கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனை
தமிழ் நாட்டிலுள்ள நியாய விலை கடைகளில் 2 கிலோ, 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு ரூபாய் 63 லட்சம் கிடைத்துள்ளது. இந்த சிலிண்டர் வாங்குவதற்கு முகவரி சான்றிதழ் தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விற்பனையை தமிழ்நாட்டில் அனைத்து கடைகளுக்கும் பரவலாக்க வேண்டும் என்ற கோரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது
பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் நீடிப்பாரா?
பாரதிய ஜனதா கூட்டணியில் நீடித்து வந்த ஓ பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி தலைமையிலான அண்ணா திமுக அந்த அணிக்கு வந்த பிறகு தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கருதுகிறார்கள். இது தொடர்பாக இன்று இறுதியான முடிவை ஓ. பன்னீர்செல்வம் எடுக்க இருக்கிறார். அவர் தனது ஆதரவாளருடன் ஆலோசனை நடத்துகிறார் . பாரதிய ஜனதா கட்சி எங்களை தவிர்க்க முடியாது என்று ஓபிஎஸ் அணியின் வைத்திலிங்கம் நேற்று தெரிவித்தார்
ஜனாதிபதி சபரிமலை பயண உறுதி.
ஜனாதிபதி திரௌபதி முர்முசபரிமலைக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் பாகிஸ்தான் உடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது தற்போது நிலைமை மாறிவிட்டதால் மீண்டும் திட்டமிட்டபடி அவர் வருகிற 18-ஆம் தேதி சபரிமலைக்கு செல்கிறார் என்னைத் தொடர்ந்து 18 மற்றும் 19ஆம் தேதி களில் சபரிமலைக்கு பக்தர்களுக்கான தரிசன முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி மே 18ஆம் தேதி குமரகம் சென்று ஓய்வெடுக்கிறார் பின்னல் 19ஆம் தேதி சாலை வழியாக பம்பா விற்கும் நடை பயணமாக […]