கிருஷ்ணகிரி அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை

உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ் குமார் கூறி உள்ளார் கே.ஆர்.பி. அணைக்கு தற்போது 1,513 கனஅடி நீர்வரத்து, 2,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளதா?

சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கட்டுக்குள் உள்ளது தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 257 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் கொரோனா நிலைமையை சுகாதார அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, அச்சப்பட தேவையில்லை” – என மத்திய அரசு கூறி உள்ளது இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.

இந்தியருக்கு இனி வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கடினம்.

இந்திய மாணவர்களுக்கு முன்புபோல் இனி வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது. தேனிலவு முடிந்துவிட்டது என்று குர்கானைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி தெரிவித்துள்ளார். இவர், ஜிஎஸ்எஸ் ஆக்ஸலரேட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஆவார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் சர்வதேச மாணவர்களின் கனவான அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு என்பது இல்லை. அதுவும் முன்பைப் போல இந்தியா மாணவர்கள் அதுபோன்ற நாடுகளில் மிகவும் எளிதில் வேலைவாய்ப்பை பெற்றுவிட முடியாது. தேனிலவு முடிந்துவிட்டது. […]

வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு புதிய இணையதளம்

வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு புதிய இணையதளத்தை மத்திய மந்திரி அமைச்சர் தொடங்கி வைத்தார் . இதில் கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் புதிய தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன

சுவர்களுக்கு இடையே சிக்கிய பெண் மீட்பு

சென்னை மணலி காமராஜர் நகரை சேர்ந்தவர் பொம்மி (வயது 60 ) உறவினர்கள் திருப்பதி சென்றபோது இவர் வீட்டில் சுவர்களுக்கு இடையே கிடந்த வீடு துடைக்கும் மாப் எடுக்க சென்றார். அப்போது சுவர்களுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் கூச்சல் போட்டார் .இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் 3 மணி நேரம் போராடி அவரை மீட்டனர். அவருக்கு லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சுவர்களுக்கு இடையே சிக்கிய பெண் மீட்பு

சென்னை மணலி காமராஜர் நகரை சேர்ந்தவர் பொம்மி (வயது 60 ) உறவினர்கள் திருப்பதி சென்றபோது இவர் வீட்டில் சுவர்களுக்கு இடையே கிடந்த வீடு துடைக்கும் மாப் எடுக்க சென்றார். அப்போது சுவர்களுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் கூச்சல் போட்டார் .இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் 3 மணி நேரம் போராடி அவரை மீட்டனர். அவருக்கு லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பெங்களூருவில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த 100 மி.மீ கனமழை:

பெங்களூருவில் நேற்று (ஞாயிறு) இரவு முதல் இன்று (திங்கள்) காலைக்குள் ஆறு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது .வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் பெங்களூரு நகரில் 105.5 மிமீ மழை பெய்துள்ளது. ஹெச்ஏஎல் விமான நிலையத்தில் 78.3 மிமீ மழையும், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 105.5 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையில் தொடர் மழை

சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததில் குறுவை பயிரிட்ட 250 ஏக்கர் அளவிலான விளைநிலங்கள் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

சிரஞ்சீவி படத்தில் நயன்தாரா நடிப்பது உறுதி

நடிகர் சிரஞ்சீவி படத்தில் நடிக்க நயன்தாரா ரூபாய் 18 கோடி கேட்டதாக கூறப்பட்டது சம்பள பிரச்சனை காரணமாக நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது இந்த நிலையில் சிரஞ்சீவி படத்தின் படக்குழு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது அதில் நயன்தாரா இடம் பெற்றுள்ளார் இதனால் சம்பள பிரச்சனை தீர்ந்ததாக தெரியவந்துள்ளது

மின்கட்டணம் உயர்கிறது.

தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் 3.16 சதவீதம் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டது. இந்த திட்டத்தின் படி ஆண்டுதோறும் மின் கட்டணத்தை 6 சதவீதம் மாநில அரசு உயர்த்த வேண்டும் என்பதாகும். அதன்படி இந்த கட்டண உயர்வு வருவதாக கூறப்படுகிறது ஆனாலும் தமிழக அரசு இதுவரை தனது முடிவை அறிவிக்கவில்லை