வலுவடையும் புயல் சின்னம்
அரபி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. தெற்கு கொங்கன் கடற்பகுதிக்கு அப்பால் நிலை கொண்டுள்ள இது, வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் 28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை மற்றும் நீலகிரி […]
தமிழகத்தில் 38தரமற்ற மருந்து விற்பனை
தமிழ்நாட்டில் விற்பனையாகும் 38 மருந்துகள் உள்பட நாடு முழுவதும் 136 மருந்துகள் தரமற்றவை என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுநாடு முழுவதும் மத்திய அரசு அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது
அப்துல் கலாம் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்
விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘KALAM: The Missile Man of India’ என பெயரிடப்பட்டுள்ளது. ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘ஆதிபுருஷ்’ படத்தை இயக்கிய ஓம் ராவத் இப்படத்தை இயக்க உள்ளார். பான் இந்தியா படமாக உருவாக உள்ள இந்த படத்தின் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
மின்னல் தாக்கியதில் நடுவானில் ஆட்டம்போட்ட விமானம்.. மரண பீதியில் பயணிகள்*
டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் நடுவானில் குலுங்கியுள்ளது. இதனால், விமான பயணிகள் பீதியின் உச்சத்தில் இருந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக விமானம் சேதமடைந்த நிலையில் விமானியின் சாதுர்யத்தால், 227 பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். இந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) டெரெக் ஓ‘பிரையன், சாகரிகா கோஸ், நதிமுல் ஹக், மம்தா தாக்கூர் மற்றும் மனாஸ் பூயான் ஆகியோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது
யாருடன் தேமுதிக கூட்டணி?.. பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அடுத்தாண்டு ஜனவரி 9ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் மாபெரும் மாநாடு நடத்தவுள்ளோம். அப்போது தேமுதிக யாருடன் கூட்டணி அமைத்திருக்கிறது?, எத்தனை தொகுதிகள்?, வேட்பாளர்கள் யார்? உள்ளிட்டவை குறித்து அறிவிப்போம் என தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள் இன்று திறப்பு
தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று (மே 22) தொடங்கி வைக்கிறார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் திறந்து வைக்கிறார். சென்னை பரங்கி மலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி நிலையங்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் திறக்கப்படுகின்றன.
10 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை (மே 23) முதல் 10 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், சில இடங்களில் 24 மணி நேரத்தில் சில நாட்களில் 200 மிமீ (அதிக மழை) பெய்யக்கூடும். நீலகிரி, வால்பாறை, சிக்மகளூர் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சுற்றுலா செல்லும் மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளார்.
மின்கட்டண உயர்வு எப்போது?
மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 2023 ஜூலையில் 2.18%, 2024 ஜூலையில் 4.8% கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், வரும் ஜூலை மாதம் மீண்டும் 3% உயர்த்தப்பட இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள், கட்டணம் உயர்த்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்தபின், முடிவு எடுக்கப்படும் என்று விளக்கமளித்துள்ளனர்
இரவு நேர வெப்பம் நீடிப்பதால் ஆபத்து
நாட்டின் 76 சதவீத மக்கள், அதிகம் முதல், மிக அதிக வெப்ப அபாயத்தில் உள்ளதாக, டில்லியை சேர்ந்த சி.இ.இ.டபிள்யூ., எனப்படும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் சிந்தனைக்குழாமின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. அதீத வெப்பமுள்ள இரவுகள் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.
குற்றால சீசன்தொடங்கியது
குற்றாலத்தில் இதமான காற்றுடன் ,கருமேகங்கள் சூழ்ந்து பனிபடர்ந்து காணப்படுகிறது. வானுயர்ந்த மரங்களை மூடுபனி தழுவி படர்ந்திருப்பதால் இலைகள் வெண்மையாக காட்சியளிக்கின்றன. ஐந்தருவி மற்றும் மெயின் அருவிகளில் மட்டும் தண்ணீர் விழத் தொடங்கி இருக்கிறது. இதுவரை இல்லாத அளவில் முன்கூட்டியே சீசன் தொடங்கிவிட்டதால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் 10 நாட்களுக்கும் மேல் உள்ள நிலையில் இன்று முதல் கூட்டம் அலைமோதத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.