கொரானா வுக்கு மீண்டும் முக கவசம்:
மத்திய மந்திரி முக்கிய தகவல். மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் யாதவ் புதுவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது நாட்டில் கரோனா பரவலை மத்திய சுகாதாரத் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஆனால், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை. மத்திய அரசும் அதை அறிவுறுத்தவில்லை. கரோனா பரவல் நிலைக்கு ஏற்ப மாநில அரசுகளே முகக்கவசம் அணிவது குறித்த முடிவுகளைத் தீர்மானிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.500 நோட்டுகளை வாபஸ் பெற கோரிக்கை.
கடப்பாவில் நடந்த தனது கட்சி மாநாட்டில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “உலகில் பல நாடுகள் டிஜிட்டல் கரன்சிக்கு மாறியுள்ளன. தெலுங்கு தேசம் கட்சிக்கான நன்கொடை வசூல் கூட டிஜிட்டல் முறையில் தான் பெறப்படுகிறது. இந்நிலையில், இந்த கூட்டத்தின் மூலம் இன்று நான் ஒன்றை வலியுறுத்துகிறேன். ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
குற்றால அருவிகளில் குளிக்க தடை
கனமழை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது . வெள்ளப்பெருக்கு இல்லாதபோதிலும், மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கலைஞர் உதவித்தொகை-29ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
கலைஞர் மகளிர் உதவித்தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்கள், 29-ந்தேதி முதல் விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் தற்போது 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் தவிர 1 கோடியே 12 லட்சம் பெண்கள் உரிமைத் தொகை பெற முடியவில்லை. எனவே, தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தில் […]
கொரோனா தொற்று பரவல்: மாஸ்க் அணிய அறிவுறுத்தல்
தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அருகில் உள்ள மருத்துவரை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூணாறில் வீட்டு முற்றத்தில் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று வீட்டுக்குள் புகுந்தது .வீட்டின் முற்றத்தில் உறங்கிக் கொண்டிருந்த நாயை பாய்ந்து சென்று கவ்வி அப்படியே இழுத்துக் கொண்டு காட்டுக்குள் ஓடிவிட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ரஷியாவில் கனிமொழி
திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழு இன்று மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு விவகாரங்களுக்கான கூட்டமைப்பு கவுன்சில் குழுவின் முதல் துணைத் தலைவர் உட்பட செனட்டர்கள் பலரையும் சந்தித்தது. கனிமொழி தலைமையிலான குழுவில் சமாஜ்வாதி எம்.பி ராஜீவ் ராய், தேசிய மாநாட்டு கட்சி எம்.பி மியான் அல்தாஃப் அகமது, பாஜக எம்.பி கேப்டன் பிரிஜேஷ் சௌக்தா, ஆர்ஜேடி எம்.பி பிரேம் சந்த் குப்தா, ஆம் ஆத்மி எம்.பி அசோக் குமார் மிட்டல், […]
ரெயிலில் 30 பவுன் நகை திருட்டு விழுப்புரத்திற்கு வழக்கு மாற்றம்
தாம்பரம் வந்த ரெயிலில் தம்பதியிடம் 30 பவுன் திருடப்பட்ட வழக்கு விழுப்புரத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.
பல்லாவரம் கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிர் இழப்பு
பல்லாவரம் அருகே கல்குவாரி குட்டைகள் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்
திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி கார் விபத்தில் உயிரிழப்பு!*
கோவை கல்லார் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தியும், பல் மருத்துவருமான திவ்யபிரியா (28) உயிரிழந்தார்.திருமணமாகி 3 மாதங்களே ஆன திவ்யபிரியா, மதுரையில் இருந்து குடும்பத்துடன் ஊட்டி சென்றுவிட்டு திரும்பும்போது கொண்டை ஊசி வளைவில் கார் பிரேக் பிடிக்காமல் விபத்து ஏற்பட்டுள்ளது.