தாம்பரத்தில் ஆறு மாதமாக நகராத படிக்கட்டு
தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், தேசிய சித்த மருத்துவம் அருகே உள்ள பொதுமக்கள் சாலை கடக்கும் மேம்பாலத்தின் நகரும் படிக்கட்டு உள்ளது. இது சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக வேலை செய்யவில்லை,இது குறித்து புகார் அளித்தால் தற்போது வரை எந்த நடவடிக்கை இல்லை, அதன் அருகே கட்டப்பட்டு வரும் மின் தூக்கி வேலையும் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது, இதனை உடனடியாக சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பல்லாவரம் சமூக ஆர்வலர்செய்யது சம்சுதீன்,கோரிக்கை […]
தமிழ்நாட்டில் கோவில் கோவிலாக செல்லும் கவர்னர் ரவி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆன்மிக பயணத்தை தொடங்கிய ஆளுநர் ரவிஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று யானை ஆண்டாளிடம் ஆசி பெற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி.திருச்சி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் ஸ்ரீரங்கத்தில் இருந்து நேற்று ஆன்மிக சுற்றுப் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து, குணசீலம், ராமேசுவரம், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களில் தரிசனம் மேற்கொள்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர், நேற்று மாலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் […]
திமுக மேயரின் கணவர் நீக்கம்
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “மதுரை மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்த், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று அறிவித்துள்ளார்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 112 அடியை எட்டியது
காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். நடப்பாண்டில் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் குறித்த நாளான ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது.காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை விரைவாக நிரம்பி உள்ளது
அதிமுகவிடம் எம்பி சீட்டு கேட்கும் பிரேமலதா
தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தர வேண்டியது அதிமுகவின் கடமை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். ராஜ்யசபா சீட் தொடர்பாக பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம்; அதன்படி கமலுக்கு சீட் தரப்பட்டுள்ளது, அதை வரவேற்கிறோம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தையை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
திருச்சிக்கு 4 எம்பிக்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சியை சேர்ந்த கவிஞர் சல்மா, திமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ளார். இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள எம்.பி.,க்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இதனால் திருச்சி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஓங்கி ஒலிக்கும் என்பதால் திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மாநகர ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருச்சி சிவா ,அருண் நேரு துரை வைகோ என 3 பேர் ஏற்கனவே எம்பி ஆக உள்ளனர்
அதிமுக எம்பி உத்தேச பட்டியல்
அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் போட்டியில் கீழ்க்கண்டவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன செம்மலைஜெயக்குமார்அன்வர் ராஜாசதன்பிரபாகர்ராஜ்சத்தியன்விந்தியாபோன்றவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன
செத்து விடுவதாக அன்புமணி மிரட்டினார் – ராமதாஸ் கடும் தாக்கு
பாமக தலைவர் ராமதாஸுக்கும் அவரது அன்பு மகன் அன்புமணிக்கும் இடையே இருந்த மோதல் இன்று பகிரங்கமாக வெடித்தது பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் நீங்கள் தான் எனக்கு கொள்ளி வைக்க வேண்டும் என்று என்னை அன்புமணியும் அவரை மனைவியும் மிரட்டினார்கள் என்று ராமதாஸ் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார் நான் அவரை 35 வயதில் மத்திய அமைச்சர் ஆக்கி தவறு செய்து விட்டேன் அன்புமணியின் செயல் வளர்த்த இட மார்பில் பாய்ந்தது போல் இருந்தது என்று ராமதாஸ் பரபரப்பு […]
அமெரிக்க அரசில் இருந்து எலான் மஸ்க் விலகல்
வாஷிங்டன்: அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனை எக்ஸ் தள பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார். “சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடையும் நிலையில், தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கான பணியை மேற்கொள்ளும் வாய்ப்பை அளித்த அதிபர் டொனல்டுக்கு ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையின் நோக்கம் காலப்போக்கில் வலுப்பெறும்” என மஸ்க் தெரிவித்துள்ளார். இதை வெள்ளை மாளிகை அதிகாரி […]
திமிர் பிடித்த திமுக ஆட்சி
விஜய் தாக்கு வியாசர்பாடியில் த.வெ.கவினர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி, அப்பாவிகள் மீது மிருகப் பலத்தைக் காட்டி, மக்களிடம் வெறுப்புகளைக் குவித்து வருகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விளம்பர மாடல் அரசு, பெண்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை வீதியில் போராட வைத்திருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், தவெக சார்பில் மக்களைத் திரட்டி மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடத்தப்படும்,” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் […]