ஒரே நாளில் 40 ரஷ்ய விமானங்களை வீழ்த்திய உக்ரைன்
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ரஷ்யாவின் பெலயா, ஒலன்யா, டியாகிலெவா, இவாநோயா ஆகிய 4 விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன்கள் மூலம் நேற்று தாக்குதல் நடத்தியது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ரஷ்ய விமான படைத் தளங்கள் மீது குண்டுமழை பொழிந்தன.இதில் 4 விமானப்படை தளங்களிலும் 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் தீயில் எரிந்து அழிந்தன.
2 லட்சம் கோடியை தாண்டிய ஜி எஸ் டி வசூல்
நாட்டில் நடப்பு நிதியாண்டின் மே மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் ரூ. 2 லட்சம் கோடியைக் கடந்தது .. கடந்த ஆண்டு மே மாதம் ரூ. 1.72 லட்சம் கோடி வசூலான நிலையில், இந்த ஆண்டு, 6.4% அதிகரித்து, ரூ. 2.01 லட்சம் கோடி வசூல். ஆகி உள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா உள்ளிட்ட பெரிய மாநிலங்களில் ஜிஎஸ்டி வசூல் 17-25% வரை அதிகரித்து உள்ளது.
விமான கட்டணம் தீடிர் உயர்வு
தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பையொட்டி தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை விமானங்களில் கட்டணம் உயர்ந்துள்ளது. மதுரை – சென்னை வழக்கமான கட்டணம்ரூ.4,542. இன்றைய கட்டணம் ரூ.18,127 தூத்துக்குடி – சென்னை வழக்கமான கட்டணம் ரூ.4,214. இன்றைய கட்டணம் ரூ.17,401
உலக அழகிக்கு 16 வயதில் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை
உலக அழகி பட்டம் வென்ற ஓபல் சுச்சாதா, 16 வயதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓபல் சுச்சாதா கூறும்போது, “உலக அழகி பட்டம் வென்ற முதல் தாய்லாந்து பெண்ணாக தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. 16 வயதில் எனக்கு மார்பக புற்று நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இப்போது நான் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்” என்றார்
டெல்லியில்h தமிழர்கள் குடியிருப்பு அகற்றம்:
உயர் நீதிமன்ற உத்தரவின்படி டெல்லியின் ஜங்புரா பகுதியில் தமிழர்கள் குடியிருப்பு நேற்று அகற்றப்பட்டது. சுமார் 370-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார்
தமிழகத்தில் கொரோனா : – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்.
கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிவதால் கொரோனா பரவலை தடுக்கலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்க, தடுப்பூசிகளை போட தமிழக பொது சுகாதாரத்துறை. அறிவுரை கூறி உள்ளது.
பராமரிப்பு பணி.. கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில்கள் ரத்து
செங்கல்பட்டு அருகே காட்டாங்குளத்தூரில் தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக ஜூன் 1ம் தேதி காலை 11.45மணி முதல் மாலை 3 .15 மணி வரை இந்த பாதையில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு.
இந்தியாவில் மீண்டும் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து உள்ளது என்று ரிசர்வ் வங்கி கவலை வெளியிட்டுள்ளது. கள்ள நோட்டு புழக்கம் 37 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .ஏற்கனவே கள்ள நோட்டை தடுக்க 500 ரூபாய் நோட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது
தாம்பரத்தில் ஆறு மாதமாக நகராத படிக்கட்டு
தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், தேசிய சித்த மருத்துவம் அருகே உள்ள பொதுமக்கள் சாலை கடக்கும் மேம்பாலத்தின் நகரும் படிக்கட்டு உள்ளது. இது சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக வேலை செய்யவில்லை,இது குறித்து புகார் அளித்தால் தற்போது வரை எந்த நடவடிக்கை இல்லை, அதன் அருகே கட்டப்பட்டு வரும் மின் தூக்கி வேலையும் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது, இதனை உடனடியாக சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பல்லாவரம் சமூக ஆர்வலர்செய்யது சம்சுதீன்,கோரிக்கை […]
தமிழ்நாட்டில் கோவில் கோவிலாக செல்லும் கவர்னர் ரவி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆன்மிக பயணத்தை தொடங்கிய ஆளுநர் ரவிஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று யானை ஆண்டாளிடம் ஆசி பெற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி.திருச்சி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் ஸ்ரீரங்கத்தில் இருந்து நேற்று ஆன்மிக சுற்றுப் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து, குணசீலம், ராமேசுவரம், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களில் தரிசனம் மேற்கொள்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர், நேற்று மாலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் […]