அதிபர் டிரம்புடன் எலான் மஸ்க் கடும் மோதல்

அமெரிக்காவில் புதிய வரிக்குறைப்பு மசோதா விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் – தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. எம்.பி.க்கள் மசோதாவை படித்துவிடக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக நிறைவேற்றப்பட்டதாக எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். ”நான் இல்லாமல் டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார்” என்றும் அவர் கூறினார். ஆனால் மசோதாவைப் பற்றி எலான் மஸ்க் முழுமையாக அறிந்திருந்தார் என ட்ரம்ப் பதில். அளித்து உள்ளார் எலானின் விமர்சனத்தால் தான் ஏமாற்றம் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு!

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் 0.5% குறைக்கப்பட்டதை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 6%ல் இருந்து 5.5%ஆக குறைந்தது. ஏற்கெனவே 2 முறை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் குறைந்தது. ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைக்கப்பட்டதால் வீடு, வாகனங்களுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் குறையும்

ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200 நோட்டு கட்டாயம்

அனைத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். ஆபரேட்டர்கள் தங்களது ஏ.டி.எம்.கள் வழியாக ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வைத்து இருக்க வேண்டும்.அதாவது வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.களிலும் 75 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை கட்டாயம் வினியோகிக்க வேண்டும்.அடுத்தாண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.களில் 90 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வினியோகிக்க வேண்டும். […]

கொரோனா பரவலால் பதற்றப்படத் தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா பரவலால் பதற்றப்படத் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதியவர்கள், கர்ப்பிணிகள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். ஒன்றிய அரசு கூறிய அறுவுறுத்தல்களையே நாங்களும் கூறி வருகிறோம்

மீண்டும் ஜெட் வேகத்தில் தங்கம் விலை

இன்று (ஜூன் 04) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.9,090க்கு விற்பனை ஆகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நிபந்தனை அற்ற மன்னிப்பு |கமலுக்கு கர்நாடக கோர்ட் உத்தரவு |

தமிழில் இருந்து தோன்றியது தான் கன்னடம் என்று நடிகர் கமலஹாசன் சொன்னதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது அவரது படத்தை வெளியிட தடை வைத்துள்ளனர் இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்து உள்ளார் தொடர்பாக விசாரணை நடந்தபோது நீதிபதி கூறியதாவது:-வரலாற்று ஆய்வாளரா நீங்கள்? மொழியியல் வல்லுநரா நீங்கள்? எதன் அடிப்படையில் தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்று பேசினீர்கள்? மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. மொழி குறித்த தன் பேச்சுக்கு கமல் நிபந்தனையற்ற […]

அண்ணா பல்கலை வழக்கு

அண்ணாமலை வெளியிட்ட புதிய ஆதாரங்கள்அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளி ஞானசேகருக்கு 30 வருட ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இருந்தாலும் அதில் மேலும் பலர் உள்ளதாக அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன இதற்காக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமை நடந்த, டிச.,23 இரவு 8.55 மணிக்கு ஞானசேகரன் ஒரு போலீஸ் அதிகாரிக்கு போன் செய்கிறார். அந்த அதிகாரி 6 நிமிடம் கழித்து […]

தீர்ப்பு வந்த பிறகும் மறக்கப்படாத சார்.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய சார் ஒருவர் மறைக்கப்படுகிறார் என்றும், அவரையும் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதே போல் ஒரத்தநாட்டு வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஆனால் இந்த வழக்கில் வேறு யாரும் கிடையாது ஞானசேகரன் சார் என்று யாரையும் குறிப்பிட்டு சொன்னது தன்னை காப்பாற்றிக் கொள்ளவே என்று […]

ஓடும் ரயிலில் படியில் நின்று ஆட்டம் போட்ட பெண் கைது

நாகர்கோவில் அடுத்த தளவாய்புரத்தை சேர்ந்த ஷகிலா பானு. ஓடும் ரயிலில் படியில் நின்று ஆட்டம் போட்ட ரீல்ஸ் வைரலாக,இப்பெண் மீது ரயில்வே துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் எழுந்தது தற்போது தான் செய்தது தவறு எனவும் இதனால் மன உளச்சலுக்கு ஆளாகிவிட்டேன் என மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.இதற்கிடையே இன்று அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்

அண்ணா பல்கலை. வழக்குஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான ஞானசேகரன் குற்றவாளி என மகளிர் போற்றி ஏற்கனவே அறிவித்தது. இன்று அந்த தீர்ப்பில் தண்டனையும் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஞானசேகருக்கு 30 ஆண்டுக்கும் குறையாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது