2026 -ல் பா.ஜ.க கூட்டணி ஆட்சி – அமித் ஷா உறுதி
மதுரையில் நடந்த கூட்டத்தில் மத்திய மந்திரி அமித் ஷா கூறியதாவது2024-ல் ஒடிசாவில் பாஜக முழு பலத்தோடு ஆட்சி அமைத்தது. ஹரியானாவைவிலும் பாஜக 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. 2025-ல் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அகற்றப்பட்டு, 27 ஆண்டுக்குப்பின் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. டெல்லியில் பாஜக அமைந்ததுபோல், 2026-ல் தமிழகம், மேற்குவங்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரப்போகிறது. என்றார் அமித் ஷா
அடுத்த ஆண்டு முதல் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா?
2026-ஆம் ஆண்டுக்குள் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறும் யூடியூப் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக வைரலாகி வரும் நிலையில், இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஜூன் 2 ஆம் தேதி ‘கேபிடல் டிவி’ என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 நிமிடம் உள்ள இந்த வீடியோவை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர். […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 50 தொகுயில் பா.ஜ.க. போட்டி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 50 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என மையக்குழு கூட்டத்தில் அமித்ஷா கூறியுள்ளார்.இதனால் ஐந்து தொகுதியில் பாஜக போட்டியிடும் இன்றைய எதிர்பார்க்கப்படுகிறது
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் வெப்பம் குறையும்
வங்கக்கடலில் ஆந்திரா, வடதமிழகம் ஒட்டி காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளதால் வரும் 10 ஆம் தேதி முதல் 3, 4 நாட்கள் தமிழகத்தில் சிறப்பான இடிமழை வாய்ப்பு உருவாகலாம். குறிப்பாக வட உள் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் முதல் பரவலான இடிமழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் ஒரு சில பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உருவாகலாம் . மேலும் மேற்கு மாவட்டங்களின் காற்று மறைவு பகுதிகள் (மேற்கு காற்று வீசும் பகுதிகள் […]
500 நோட்டுகள் செல்லாதா? FACT CHECK-ல் மறுப்பு
நாட்டில் புழக்கத்தில் உள்ள அதிகமதிப்பு கொண்ட ரூபாய் நோட்டாக ≈500 உள்ளது. இந்நிலையில், 2026 மார்ச் முதல் 500 நோட்டுகள் செல்லாது என்று சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியை மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 2500 நோட்டுகள்மதிப்பிழப்பு செய்யப்பட மாட்டாது, சட்டப்படி தொடர்ந்து செல்லும், ஆதலால் பொய் செய்தியை நம்ப வேண்டாம் என்று அது தெரிவித்துள்ளது
1.24 கேரட், 18 கேரட் தங்கம் விலையும் இன்று வீழ்ச்சி
24 கேரட் தங்கம் நேற்று 1 கிராம் 9,960-க்கும், 1 சவரன் 79,680-க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று காலை 1 கிராம் 164 குறைந்தது 9,796-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 1 சவரன் 1,312 வீழ்ச்சியடைந்து 78,368-க்கு விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் விலையும் இன்று 1 கிராம் 2105 குறைந்து, 7,385-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் 1 சவரன் 840 குறைந்து, 59,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் புதுப்பிக்கப்படும் 765 பேருந்து நிறுத்தங்கள்
சென்னை மாநகராட்சி நகரம் முழுவதும் உள்ள 765 பேருந்து நிறுத்தங்களை ≈29 கோடி செலவில் புதுப்பிக்கும் திட்டங்களை மீண்டும் தொடங்கியுள்ளது. முந்தைய டெண்டர் செயல்முறை தோல்வியடைந்ததால், இந்தப் பணிகள் இப்போது மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் மூலம் சென்னையின் பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு, பயணிகளுக்கு சிறந்த வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ஹோட்டல்கள் சங்கம் டெலிவரிக்கு நோ !
சென்னை ஹோட்டல்கள் சங்கம் உணவு விநியோக செயல்களிலிருந்து விலகப் போவதாக அச்சுறுத்தியுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராண்டட் உணவகங்கள் இச்செயல்களிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளது. சங்கத் தலைவர் எம்.ரவி கூறுகையில், “தேவையற்ற கட்டணங்களால் வாடிக்கையாளர்களும், உணவகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன,” என்றார். இது உணவு விநியோக சேவைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
.அதிகாரிகளுக்கு ‘சீட்’ கொடுக்கும் திமுக?
2026-ல் IAS, IPS அதிகாரிகளுக்கு சீட் கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுகவுக்கு நெருக்கமான அதிகாரிகளை அமைச்சரவையில் சேர்க்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளது. தற்போது இருவர் பெயர் டிக் அடிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் திருவாரூரிலும் இன்னொருவர் சென்னையில் ஒரு தொகுதியிலும்களமிறங்குவார் என கூறப்படுகிறது.
தக்லைப் முதல் நாள் வசூல்
கமலஹாசன் நடித்த தக்கலை திரைப்படம் வெளியாகி உள்ளது இது தமிழகத்தில் 800 தியேட்டர்களில் 3000 காட்சிகள் முதல் நாளில் திரையிடப்பட்டு உள்ளதுமுதல் நாள் மட்டும் 17 கோடி வசூலித்து உள்ளது.இந்த படம் கர்நாடகத்தில் வெளியாகவில்லை