மும்பை மின்சார ரயிலில் இருந்து விழுந்த 5 பயணி பலி
மும்பை சத்ரபதி மகராஜ் ரயில் நிலையத்திலிருந்து சென்ற மின்சார ரயிலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது .அப்போது 13பேர் வாசலில் வெளியே தொங்கிக்கொண்டு பயணம் செய்தனர். இவர்கள் நெரிசலால் பிளாட்பாரத்தில் விழுந்தனர் .அதில் ஐந்து பயணிகள் பலியாகிவிட்டனர்
சென்னைக்கு மழை எச்சரிக்கை
🚩 ஆந்திரா மாநிலம் (திருப்பதி) கர்நாடகா மாநிலம் ( பெங்களூரு) ஆகிய இடங்களில் ஒரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்
திமுக ஆட்சியில பாலியல் சார்கள் – எடப்பாட தாக்கு
திர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில்சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.பொம்மை முதல்வர் ஸ்டாலின் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.அரசு சேவை இல்லத்தில் உள்ள சிறுமிகளைக் காக்க வேண்டிய காவலாளியே இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது, குற்றம் செய்பவர்களுக்கு இந்த ஆட்சி எடுக்கும் நடவடிக்கைகள் மீது […]
சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பக காவலாளி கைது
சிட்லபாக்கத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த காப்பகத்தின் காவலாளி மேட்ச் என்பவர் கைது செய்யப்பட்டார் . .தூங்கிக் கொண்டிருந்த சிறுமி பாலியல் தொல்லையின் போது தப்பிச் செல்ல முயன்ற போது அடித்ததில் கால் உடைந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
விஜய் வீட்டில் ரெய்டு நடத்திய அதிகாரிக்கு கட்சி பதவி
தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரியாக பனியாற்றிய போது, நடிகர் விஜய் மீது 2020-ல் நடந்த வருமான வரித்துறை சோதனையின் தலைமை அதிகாரியாக செயல்பட்டார். பின்னர் வழக்கம் போல் அந்த வழக்கு நீர்த்து போனது அப்போது முதல் தான் இவருக்கும் விஜய்க்கும் நெருக்கம் ஏற்பட்டது. தனது செல்வாக்கு, பாஜக தொடர்புகளை பயன்படுத்தி தவெகவிற்கு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இவர் உதவியதால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு உள்ளாகி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.தற்போது தவெகாவில் இணைந்தார். கொ.ப.செ.ஆனார்
நாயை துரத்தும் போது பள்ளத்தில் விழுந்து சிக்கிய புலி
கேரளா – இடுக்கி : மைலாடும்பாறை அருகே ஒரு தனியார் ஏலக்காய்த் தோட்டத்தில்,நாயைத் துரத்திச் சென்றதில் நாயும் புலியும் குழியில் விழுந்தது. சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி புலியைப் பிடித்தனர்.
பொறியியல் படிப்பு. சான்றிதழ்களை பதிவேற்ற இன்றே கடைசி நாள்.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள் ஆகும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் மாணவர்களுக்கு ஜூன் 11இல் ரேண்டம் எண் ஒதுக்கப்படவுள்ளது.
முகூர்த்த நாள் : சென்னை திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல்
சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் பக்ரீத் விடுமுறை, முகூர்த்த நாள் காரணமாக சொந்த ஊர் திரும்பிய மக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்புவதாலும், லேசான மழை பெய்து வருவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. போக்குவரத்தை சரி செய்யும் பணியில் காவல்துறையின் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்
திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான குணசேகரன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..
பஸ் முன்பு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது
ஹெல்மெட் அணியாமல் புல்லட் பைக்கில் சாலையில் வலம் வந்து வாலிபர் சாகசத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஹெல்மேட் இல்லாமல் புல்லட் பைக்கை இயக்குகிறார். சாலையில் வளைந்து நெளிந்து ஓட் டுகிறார். அப்போது சாலை நடுவே மாநகர பஸ் ஒன்று பயணிகளுடன் செல்கிறது. அந்த பஸ் முன்பாகவும் தனது வாகனத்தை வளைத்து நெளித்து இயக்கினார். மேலும் அதன் டிரைவரை கிண்டலடித்து வசைப்பாடுகிறார். இந்த […]