பல்லாவரம் கோட்டத்தில் நாளை மின்தடை
நாளை காலை 9 மணி முதல் மதியம் 2. 2 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்களாக பல்லாவரம் கோட்டத்தில் நியூ தெரு, அம்பேத்கர் நகர், மந்திரி பிளாட்ஸ், சோழவரம் ம் நகர், பாரதி நகர் மெயின் சாலை, பாரதி நகர் 1 முதல் 5 தெரு, துலுக்கா ணத்தம்மன் கோவில் தெரு, பச்சையம்மன் நகர், குவாரி மேட்டு தெரு, கபிலர் தெரு, வைத்தியர் சாலை, டெம்பிள் டவுன் தெரு, பாஷ்யம் நவரத்ன பிளாட்ஸ், ஜெயின் பிளாட்ஸ், […]
சென்னை பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு
குரூப் 1 முதன்மை தேர்வானது நாளை மறுநாள் ஜூன் 15ம் நாள் நடைபெற இருப்பதால், அதே நாளில் நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் தேதிகள் www.ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல்-ஈரான் மோதலால் டெல்லி, மும்பையில் விமான போக்குவரத்து பாதிப்பு
ஈரான் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான் நாடு தனது வான்வெளியை மூடியது. இது சர்வதேச விமான போக்குவரத்தை பாதித்தது. குறிப்பாக இந்தியாவில் இருந்து பல வெளிநாடுகளுக்கு சென்ற, அங்கிருந்து வந்த விமானங்கள் பாதிக்கப்பட்டன. இந்த விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை நேற்று மதியம் வரை 16 விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இந்த பாதிப்புகள் குறித்து டெல்லி விமான நிலையம் பயணிகளுக்கு முன் […]
25 ஊழியர்களுக்கு புத்தம் புது கார் வழங்கி இன்ப அதிர்ச்சி அந்த நிறுவனம்
சென்னை ஓ.எம்.ஆர் சாலை பெருங்குடியில் செயல்படும் அஜிலிசியம் எனும் உயிரியல் அறிவியல் நிறுவனம் துவங்கி 10வது ஆண்டு விழாவையொட்டி அவர்களிடம் பணியாற்றும் ஆரம்பகால பெண் ஊழியர் உள்ளிட்ட 25 ஊழியர்களுக்க் 5கோடி மதிப்புள்ள 25 ஹூண்டாய் கிரெட்டா எஸ்.யூ.வி கார்களை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தது பெரும் ஊழியர்கள் அனைவரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, இன்று நிறுவனத்தில் பாராட்டு விழா என ஊழியர்கள் அழைக்கப்பட்ட நிலையில் தீடீரென அந்த நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி ராஜ்பாபு அறிவித்து அவர்களுக்கு […]
ஜுலையில் அறுபடை வீடு தரிசனத்திற்குக் கட்டணமில்லா பயணம்
அறுபடை வீடு கட்டண மில்லா பயணத்திற்கு 2 ஆயிரம் பேர் 5 கட்டமாக அழைத்து செல்லப்பட இருக்கிறார்கள். முதல் கட்ட பயணம் ஜூலை யில் தொடங்க இருக் கிறது.இந்த ஆண்டிற்கான முதற் கட்ட அறுபடை தரிசன பய ணம் அடுத்த மாதம் (ஜூலை) தொடங்குகிறது.அறுபடை தரிசனத்தை தொடர்ந்து, ஆடி மாதத்தில் அம்மன் கோவில் ஆன்மிக தரிசன பயணமும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில் கள் தரிசன பயணமும் தொடங்க இருக்கிறது.
தமிழகத்தில் ஜூலை முதல் வாக்குச்சாவடி சீரமைப்பு பணி:
தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் சீரமைப்பு பணிகள் ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார்
இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடி – ஐ.நா. தகவல்
இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியை தாண்டியதாகவும், மக்கள்தொகையில் உலகிலேயே முதலிடத்தில் நீடிப்பதாகவும் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஐ.நா. சார்பில் உலக மக்கள்தொகை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 146 கோடியே 39 லட்சமாக உள்ளது. மக்கள்தொகையில் உலகிலேயே முதலிடத்தை இந்தியா தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. இன்னும் 40 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக உயரும். அதன்பிறகு மக்கள்தொகை குறையத் தொடங்கும். 14 வயதுக்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை 24 சதவீதமாகவும், 10 […]
முதல் பாடலை வெளியிட்ட இளையராஜாவின்பேரன்
இளையராஜாவின் பேரனும் கார்த்திக் ராஜாவின் மகனுமான யத்தீஸ்வர், தான் இசையமைத்துப் பாடிய ‘ஓம் நமசிவாய என்னும் பாடலை திருவண்ணாமலையில் உள்ள ரமணர் ஆசிரமத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், சினிமாவில் இசையமைக்க விரும்புவதாகவும், நல்ல வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் யத்தீஸ்வர் பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில், தரையிறங்க வரும் விமானங்களின் மீது, சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளியை அடிக்கும் சம்பவங்கள், தொடர்கின்றன.
சென்னை விமான நிலையத்தில், தரையிறங்க வரும் விமானங்களின் மீது, சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளியை அடிக்கும் சம்பவங்கள், தொடர்கின்றன. இன்று அதிகாலை புனேயில் இருந்து, 178 பயணிகளுடன் தரையிறங்க வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீது, லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டதால், தரை இறங்க வந்த விமானம், சிறிது நேரம் வானில் தத்தளித்துவிட்டு, அதன் பின்பு பத்திரமாக தரையிறங்கியது
எவரெஸ்ட் சிகரத்தை சுற்றி ராஜ நாகங்கள்
இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் உலகிலேயே உயரமான சிகரத்தில் ஒன்றாகும்.தற்போது எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 160 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் கடந்த ஒரு வாரத்தில் 10 ராஜ நாகங்கள் பிடிபட்டுள்ளன.வழக்கமாக காட்டு பகுதியில் இருக்கும் இவை இவ்வாறு தொடர்ந்து பிடிபடுவது காலநிலை மாற்றத்தை குறிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்