யோகா நிகழ்ச்சியில் 51 தண்டால் எடுத்த கவர்னர்

ஆர் என் ரவி இன்று மதுரை வந்தார். சர்வதேச யோகா தினத்தை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் அப்போது அவர் மாணவர்களுக்கு யோகாசனம் செய்து காண்பித்தார். இந்த நிகழ்ச்சியின் போது 73 வயதான அவர் 51 தண்டால் எடுத்து அசத்தினார்

போலீஸ் அனுப்புவது போல் குறுந்தகவல் அனுப்பி வங்கி கணக்கில் பணம் பறிப்பு

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில் இவரது இருசக்கர வாகனத்தை இரு தினங்களுக்கு முன்பு அவரது மனைவியும் அவருடைய தம்பியும் எடுத்துக் கொண்டு வெளியில் சென்று வந்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறை அனுப்பும் குறுந்தகவல் போன்று ஒரு மெசேஜ் செந்தில் செல்போன் எண்ணிற்கு வந்துள்ளது. அந்த மெசேஜில் இருந்த லிங்கை கிளிக் செய்து என்ன அபராதம் என பார்க்க முயன்ற போது செல்போன் ஹாங் ஆகி விட்டது, அதன் பின் செந்தில் […]

இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க உத்தரவு.

வரும் ஜனவரி முதல் புதிய இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ABS எனப்படும் Anti-lock Braking System பொருத்த வேண்டும் தற்போது 40% வாகனங்களில் ABS பொருத்தப்படவில்லை – என ஒன்றிய சாலை போக்குவரத்து.. துறை கூறி உள்ளது

குரோம்பேட்டையில் கைவிடப்பட்ட ரயில்வே பாலம்

குரோம்பேட்டையில் 19 ஆண்டுகளாக ராதா நகர் சுரங்கப்பாதை பணி நடந்து வருகிறது இதற்கிடையே வைஷ்ணவி காலேஜ் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை விடப்பட்டது ஆனால் இது பற்றி தகவல் அறியும் சட்டத்தில் கேட்டபோது சுரங்கப்பாதை அமைக்க போதிய நிலம் இல்லாததால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவித்துள்ளனர்

ஏடிஜிபி ஜெயராம் எதற்காக சஸ்பெண்ட்? ரத்து ஆகுமா ?

சிறுவன் கடத்தல் வழக்கில் ADGP ஜெயராம் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். ஜெயராமை கைது செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவில் சுப்ரீம் கோர்ட் கருத்து. கூறி உள்ளது. சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து தமிழ்நாடு அரசின் ஆலோசனையை பெற்று நாளை பதிலளிக்க உத்தரவு. பிறப்பித்தது.

தாம்பரம் செங்கோட்டை ரயிலில் கூடுதல் பெட்டிகள்

தாம்பரம் – செங்கோட்டை சிலம்பு அதிவிரைவு ரெயில் 2.தாம்பரம் – நாகர்கோவில் அதிவிரைவு ஆகிய ரயில்களில் கூடுதலாக 3 ஸ்லீப்பர் பெட்டிகள், 1 2nd AC ,1 3rd AC, 1 Unreserved பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது இந்த கூடுதல் பெட்டிகள் சேவைஜூன் 20 முதல் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திரையுலகில் களமிறங்கும் நடிகை ஊர்வசி மகள்!

சுந்தரியவள் ஸ்டெல்லா’ என்கிற மலையாளதிரைப்படத்தின் வாயிலாக நடிகை ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.ஏற்கனவே நடிகை வனிதா என் மகள் சினிமா நடிக்கிறார் இப்போது அடுத்த வாரிசு வந்துள்ளது

என் படம் பயத்தை கொடுக்கும் -மிஸ்கின்

இயக்குநர் மிங்கின் கூறியதாவது: என்னுடைய படங்களை, சும்மா பாப்கான் சாப்பிட்டு, அப்பப்போ போர் அடிச்சா போனை பார்க்கலாம் என்பது போல் இருக்காது. அதைப் பார்ப்பவர்களுக்கு நாக்கெல்லாம் வெளிய வந்து தொங்கி, ஐயோ என்று ஒரு பெரிய பயத்தை கொடுக்கும். என்றார்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முக நாதனின் மகன் கைது .

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜாஇவர் சென்னையில் இருந்து மலேசியாவுக்கு தப்பி ஓட முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். கல்குவாரியில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக்கூறி சொந்த சகோதரியிடம் நகைகளை வாங்கி விற்று மோசடி செய்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ராஜா தூத்துக்குடி மாநகராட்சியின் 59 வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார்.

பயணியை அறைந்த ரேபிடோ பைக் ஓட்டுநர்.

பெங்களூருவில் ரேபிடோ பைக் ஓட்டுநர் ஒருவர் கவனக்குறைவாக பைக்கை ஓட்டி வந்தார். இதை பின்னால் இருந்த பயணி சுட்டிக்காட்டி, னார். அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்தால் பைக் ஓட்டுநர் அவரை அறைந்து கீழே தள்ளினான் .இந்த காட்சி வலைதளத்தில் வைரலானது