ரூ 500க்கு பதில் ரூ.1,100 வந்ததால் ஏடிஎம்மில் குவிந்த மக்கள்

உத்தரபிரதேசம், மால்புரா பகுதியில் ஏடிஎம்மில் 500 ரூபாய் எடுக்க முயன்றவருக்கு ரூ. 1,100 பணம் வெளி வந்ததால், பணத்தை எடுக்க ATM முன்பு மக்கள் கூட்டம் குவிந்தது. சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் அந்த ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அதிக அளவிலான பணத்தை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக இந்த தவறு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது

அமெரிக்காவுக்கு விமான சேவை நிறுத்தம்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் 4 நகரங்கள், கனடாவின் டொராண்டோவுக்கான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

மின்கம்பம் சாய்ந்து விழுந்த விவகாரம் மாநகராட்சி இன்ஜினியர் மீது வழக்கு

வேலூர் மாவட்டம், நாதவனூர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா(வயது 23). இவர், சென்னை மேற்கு தாம்பரம், புலி கொரடு, கன்னடப்பாளையத்தில் நண்பர் சுபாஷ் சந்திர போஸ் என்பவருடன் தங்கி, பிரபல உணவு வினியோக நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாம்பரம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தபோது, தாம்பரம் மேம்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பம் ஒன்று, காற்றின் வேகத்தில் உடைந்து, மேம்பாலத்தின் கீழே மழைக்காக ஒதுங்கி நின்ற சூர்யா தலையில் விழுந்தது. இதில் […]

50 அடி உயர பேனர் ஏரிக்குள் உடைந்து விழுந்தது

பல்லாவரம் வேல்ஸ் சிக்னல் அருகே புத்தேரியை ஒட்டி, பொருத்தப்பட்டிருந்த 50 அடி உயரம் கொண்ட ராட்சத பேனர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் மழை பெய்தபோது பாதியாக உடைந்து ஏரிக்குள் விழுந்துள்ளது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அதேநேரத்தில் வெளியிலும் தெரியவில்லை. ஆனால் உடைந்து விழுந்த பேனர் காற்றில் பறந்து வாகன போக்குவரத்து நிறைந்த ரேடி யல் சாலையில் விழுந்து இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

கத்தார் மீது தாக்குதல் – சென்னையில் விமானங்கள் ரத்து

ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக, மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனதோகா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனதாய்லாந்து நாட்டிலிருந்து தோகா சென்று கொண்டிருந்த, 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், தோகா செல்ல முடியாமல், சென்னையில் வந்து தரை இறங்கின

அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொல்லை – காவலாளி கைது

சென்னை அருகே அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த காவலாளி பழனி போக்சோ சட்டத்தில் கைது சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவலாளியை கைது செய்து போலீசார் விசாரணை

தட்கல் டிக்கெட் – ஆதார் இணைக்கும் பணி தொடக்கம்

தட்கல் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியது IRCTC ஜுலை 1 முதல் ஆதார் OTP அடிப்படையில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே அறிவித்து உள்ளது

ஈரானில் குண்டு வீச இந்திய வான்வெளி பயன்படுத்தப் பட்டதா?

ஈரானில் அமெரிக்கா 3 அணு சக்தி நிலையங்கள் மீது குண்டு வீசியதாக அறிவித்துள்ளது இதற்காக இந்திய வான் வெளியை அமெரிக்கா பயன்படுத்தியதாக செய்தி வெளியாகி உள்ளது இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது

அமெரிக்கா தொடங்கிய ஆபத்தான போர் – ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதல் மூலம் ஆபத்தான போரை தொடங்கியுள்ளது. இது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் தெரிவித்துள்ளார் அவர் உடனடியாக ரசிய அதிபர் புதினை சந்திக்கவும் புறப்பட்டு செல்கிறார்.அமெரிக்க தாக்குதல் மூலம் இதுவரை இஸ்ரேலுக்கு பின்னணியில் இருந்தது அமெரிக்கா தான் என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்

சென்னை மூத்த குடிமக்களுக்கு இலவ பஸ் பயண – டோக்கன்

மாநகர பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணிக்க இன்று முதல் டோக்கன் வழங்கப்படும். இன்று முதல் ஜூலை 31 வரை காலை 8.00 – இரவு 7.30 வரை 40 மையங்களில் டோக்கன்கள் தரப்படுகிறது. ஜூலை முதல் டிசம்பர் வரை மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கானது வழங்கப்படும். 40 மையங்களில் அடையாள அட்டைகள் புதுப்பித்தல் மற்றும் புதியபயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும். இருப்பிடச்சான்று, வயது சான்று, 2 புகைப்படங்களுடன் வர வேண்டும் […]