கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல்

கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த 2018 மே மாதத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்நிலையில் மலப்புரம் மற்றும் பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழக்கமான பரிசோதனையின்போது 2 பேருக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து இவர்களின் ரத்த மாதிரிகள் உடனடியாக புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நிபா வைரஸ் பரிசோதனைக்காக மாவட்டம் தோறும் 26 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன

7 – ந்தேதி பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்

சுபமுகூர்த்த நாள் என்பதால், ஜூலை 7இல் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு. செய்யப்பட்டு உள்ளது. 1 சார் பதிவாளர் அலுவலகத்துக்கு 150 முன்பதிவு டோக்கன்கள். 2 சார் பதிவாளர் ஒதுக்கப்படுகின்றன. அதிக அளவு பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு, 150 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என பத்திரப் பதிவுத் துறை. தெரிவித்து உள்ளது.

ஜப்பானில் 2 வாரத்தில் 900 நிலநடுக்கம்

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள ஜப்பான் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன் படி அங்குள்ள டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் அங்கு 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன.இதில் மிகப்பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிக ளாக பதிவானது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேசமயம் எப்போது வேண்டுமானாலும் வெளியேற தயாராக இருக்குமாறு பொதுமக்களை அரசாங்கம் அறிவு றுத்தி உள்ளது. இதற்காக இதற்காக டோகாரா […]

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 9 ஆயிரம் பேர் பணி நீக்கம்

கணினி தொழில்நுட்ப நிறுவனமான மைக் ரோசாப்ட், இந்த ஆண்டில் 4-வது முறையாக மீண்டும் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. நேற்று ஏராள மானவர்களுக்கு பணிநீக்க நோட்டீசுகளை அனுப்பத்தொடங்கியது. எவ்வளவு பேர் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்க வில்லை. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஒரு சத வீதஊழியர்களை பணிநீக்கம் செய்தது. கடந்த மே மாதத்தில் மேலும் 6 ஆயிரம்பேரும், கடந்த ஜூன் மாதம் 305 பேரும் பணிநீக்கம் செய்யப் பட்டனர். […]

ஹிமாசல் மாநில மழைக்கு 5 1 பேர் பலி

ஹிமாசலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு, வெள்ளம் காரணமாக இதுவரை 51 பேர் உயிரிழந்தனர் சேத மதிப்பீடு குறித்து மாநில அவசர கால செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி வெள்ளம், நீரில் மூழ்கி பலி, நிலச்சரிவு, மின்னல், சாலை விபத்து உள்ளிட்ட பல காரணங்களால் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 22 பேர் காணாமல் போயுள்ளனர். ரூ.283.39 கோடியாக மதிப்பிலான சொத்துகள் சேதம் என தெரிவிக்கப் பட்டுள்ளது

சுங்கச்சாவடியில் மோட்டார் சைக்கிள் கட்டணமா ?

சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இருந்தாலும் மத்திய அரசு புதிதாக கட்டணம் வசூலிக்க போவதாக நேற்று செய்தி பரவியது. மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை இதனை உடனடியாக மறுத்தது. கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தது

அண்ணா அறிவாலயத்தில் கனிமொழிக்கு முக்கியத்துவம்?

அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொடுக்கப்பட்டது போல் கனிமொழிக்கும் தனியறை வழங்கப்பட்டு உள்ளது. திமுக உயர்மட்ட பொறுப்பில் சில மாற்றம் செய்யப்படுவதாக செய்தி பரவி வரும் நிலையில் அண்ணா அறிவாலயத்தில் புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள அலுவலக அறையில் கனிமொழி கருணாநிதி எம்.பி-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர வைத்துள்ளார்

ரயில் டிக்கெட் கட்டணம் உயர்கிறது.*

ரயில்களில் ஏசி வகுப்பு டிக்கெட் கட்டணத்தை கிலோமீட்டருக்கு 2 பைசாவும், சாதாரண வகுப்புகளுக்கு கி.மீட்டருக்கு 1 பைசாவும் உயர்த்த இந்திய ரயில்வே முடிவு இந்த கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. புறநகர் ரயில்கள், 500 கி.மீ.க்கு குறைவான 2ம் வகுப்பு பயணத்திற்கு கட்டண உயர்வு இல்லை

குடும்ப வருமானம் பற்றி அடுத்த ஆண்டில் கணக்கெடுப்பு:

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் வரும் 2026-ல் குடும்ப வருமானம் குறித்த கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சகத்துக்கு வழிகாட்ட ஐஎம்எப் முன்னாள் செயல் இயக்குநர் சுர்ஜித் பல்லா தலைமையில் ஒரு தொழில்நுட்ப நிபுணர் குழு (டிஇஜி) அமைக்கப்படும். இக்குழு கணக்கெடுப்பு எப்படி நடத்த வேண்டும் என்றும் உலக நாடுகளில் இது தொடர்பாக கடைபிடிக்கப்படும் முறைகளை ஆய்வு செய்து சிறந்தது எது என்றும் பரிந்துரை செய்யும். […]

ரூ 500க்கு பதில் ரூ.1,100 வந்ததால் ஏடிஎம்மில் குவிந்த மக்கள்

உத்தரபிரதேசம், மால்புரா பகுதியில் ஏடிஎம்மில் 500 ரூபாய் எடுக்க முயன்றவருக்கு ரூ. 1,100 பணம் வெளி வந்ததால், பணத்தை எடுக்க ATM முன்பு மக்கள் கூட்டம் குவிந்தது. சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் அந்த ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அதிக அளவிலான பணத்தை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக இந்த தவறு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது