3 லட்சம் பேர் பயன் பெரும் குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே சுரப்பாதை 15 ஆண்டுகளாகியும் தாமதமாவதால் பணியை விரைந்து முடித்திட கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி நலச்சங்க நிர்வாகிகள் ரெயில்வே கேட்டை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு*

குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே துறையும்- மாநில நெடுஞ்சாலை துறையும் 15 ஆண்டுகளுக்கு முன்பாக பணிகளை துவக்கியது அப்போது முதல் இந்த ரெயில்வே கேட்டை கடந்து செல்லும் பேரூந்துகள் நிறுத்தபட்டது, இதனால் குரோம்பேட்டை, ராதாநகர், நெமிலிச்சேரி உள்ளிட்ட குடியிருப்பு பகுதியை சேர்ந்த 3 லட்சம் பேர் மாற்று பாதையில் செல்லவேண்டியுள்ளது, இந்த நிலையில் ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் நிறைவடையும் நிலையில் மேலும் 10 அடி அகலம் 100 அடி நிளம் இடம் தேவைப்படுவதாக நெடுஞ்சாலைத் […]

பாஸ்டேக்’ ஸ்டிக்கரைஒட்டாவிட்டால் நடவடிக்கை

வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கரை ஒட்டாமல் கைவசம் வைத்திருந்தால் கருப்பு பட்டியல் அல்லது ஹாட்லிஸ்டில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பாஸ்டேக் ஒட்டாத வாகனங்கள் குறித்து சுங்கச்சாவடி நிர்வாகம் உடனுக்குடன் புகார் அளிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு. பிறப்பித்து உள்ளது.

நிபா வைரஸ் – தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு”

நிபா வைரஸ் பரவலை அடுத்து கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்களை தீவிரமாக சோதனை செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. கேரளாவிலிருந்து தமிழகம் வரும் 20 வழிகளிலும் சுகாதார அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துவார்கள் என

ஸ்மார்ட் போன் பயன்பாட்டை குறைக்க புதிய திட்டம்

சாம்சங் நிறுவனம்புதிய AI-இயங்கும் அணியக்கூடிய சாதனங்களை உருவாக்குவதை ஆராய்ந்து வருகிறது, இதில் சாத்தியமான காதணிகள் மற்றும் நெக்லஸ்கள் அடங்கும். இந்த ஆய்வு ஸ்மார்ட்போன்களுக்கான தேவையைக் குறைக்கும் AI நுகர்வோர் மின்னணு சாதனங்களை உருவாக்கும் பரந்த தொழில்துறை போக்குடன் ஒத்துப்போகிறது. எடுத்துச் செல்லப்படுவதற்குப் பதிலாக அணியப்படும் சாதனங்கள் மூலம் பயனர்கள் தொடர்பு கொள்ளவும் பணிகளை மிகவும் திறமையாகச் செய்யவும் உதவுவதே இதன் குறிக்கோள்.

டெல்லியில் நிலநடுக்கம்.

தலைநகர் டெல்லியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.04 மணியளவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாக பதிவாகி உள்ளது. டெல்லியை சுற்றியுள்ள காசியாபாத், குருகிராம், நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. ஹரியானாவின் குராவாரா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததது.

கோவை வெடிகுண்டு வழக்கு – 27 வருடத்திற்கு பிறகு முக்கிய நபர் கைது

கோவையில் 1998ல் நடந்த தொடர் வெடிகுண்டு வழக்கில் முக்கிய நபர் 27 வருடத்திற்கு பிறகு கைதானார். சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைமறைவாக இருந்தவரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது. டெய்லர் ராஜா என அழைக்கப்படும் சாதிக் ராஜா கைதானதை தொடர்ந்து காவலர்கள் உஷார் நிலையில் இருக்க கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்கள் பணியில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 17 பவுன் நகை திருட்டு

சென்னையைசேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் மதுரையில் நடந்த நிகழ்ச்சிக்காக முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார். அவர் வீடு திரும்பியபோது பையில் இருந்த 17 பவுன் நகை திருட்டுப் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார் . இது தொடர்பாக திருமங்கலம் போலீசில் அவர் புகார் செய்துள்ளார்..

ஜிமெயிலில் புதிய வசதி

ஜிமெயில் சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பல்வேறு தளங்கள் ஜிமெயில் சேவை வழங்கினாலும் கூகுளின் ஜிமெயில் தான் இதில் முதலிடம் வகிக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 180 கோடி ஜிமெயில் கணக்குகள் உள்ளன. பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது அப்டேட்களை கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஜிமெயிலில் புதிய டூல் ஒன்றை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. மெயில் இன்பாக்ஸ்களில் குவியும் நியூஸ் லெட்டர் உள்ளிட்ட அவசியமற்ற மெயில்களை மேனேஜ் சப்ஸ்கிரிப்ஷன் எனும் புதிய […]

தனியார் பால் நிறுவன அதிகாரி போலீசாரால் அடித்துக் கொலையா?

திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்த நவீன் என்பவர், அந்த நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்னை கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்து வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் நவீன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அஜித்குமார் கொலை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்

அமெரிக்காவில் மழை வெள்ளத்துக்கு 79 பேர் பலி

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாநிலத்தில் திடீரென மழை கொட்டியது இதில் தண்ணீர் வெள்ளப்பெருக்கு எடுத்து ஊரை மூழ்கடித்தது திடீர் வெள்ளம் காரணமாக 28 குழந்தைகள் உட்பட 79 பேர் பலியாகி உள்ளனர் இன்னமும் பலரை காணவில்லை காலநிலை மாற்றம் காரணமாக இது போன்ற திடீர் மழை வெள்ளம் ஏற்படுவதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்