சென்னை வந்தே பாரத் ரெயிலில் 15 நிமிடத்திற்கு முன்பு முன்பதிவு.

தெற்கு ரயில்வே 8 வந்தய பாரத் ரயில்களில் கடைசி 15 நிமிடத்திற்கு முன்பு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு முன்பதிவு செய்யலாம் என்று அறிவித்துள்ளது இதில் சென்னை நாகர்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அடங்கும்

குழந்தைகளுக்கு ஆதார்

5 வயதுக்குள் ஆதார் பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்த பிறகு கைரேகை மற்றும் கருவிழிப் பதிவை புதுப்பிக்க வேண்டும் பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கவில்லை எனில் ஆதார் செயல் இழக்கும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

நெல்லை சாந்தி அல்வாவில் தேள்

நெல்லையில் உள்ள பிரபல சாந்தி அல்வா கடையின் அல்வாவில் தேள் இருந்ததாக வாடிக்கையாளர் புகார் தெரிவித்தார். இதன் காரணமாக கடை, குடோனில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் தேள் இருந்தது குறித்து விளக்கம் கேட்டுகடை உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

வண்டலூர் பூங்காவில் 10 குட்டி போட்ட அனகோண்டா பாம்பு

சென்னை முதலை பண்ணையில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனகோண்டா பாம்புகள் ரெண்டு வழங்கப்பட்டன இவற்றை தனியாக பராமரித்து வந்தனர் .தற்போது அனகோண்டா பாம்பு ஒன்று பத்து குட்டிகளை போட்டு உள்ளது. இந்த குட்டிகளை தனியாக எடுத்து பராமரித்து வருகிறார்கள். ஒவ்வொரு குட்டியும் 7 அடி நீளம் வரை வளரக்கூடியது இவற்றுக்கு கோழி குஞ்சு இரையாக வழங்கப்படும்

ஆன்லைன் மோசடிகளால் ரூ. 7,000 கோடியை இழந்த இந்தியர்கள் :

ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ.1,192 கோடியை இந்தியர்களிடம் மோசடி செய்து பறித்துள்ளனர். பிப்ரவரியில் ரூ.951 கோடி, மார்ச்சில் ரூ.1,000 கோடி மற்றும் ஏப்ரல் மாதத்தில் ரூ.999 கோடி மோசடி நடந்துள்ளது. 2025 இன் முதல் ஐந்து மாதங்களில், இந்தியர்கள் ஆன்லைன் மோசடியால் ரூ.7,000 கோடியை இழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் திடீர் மூடல்

தமிழகத்தில்எவ்வித முன்னறிவிப்புமின்றி 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு விபத்துகளை தடுப்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு நடத்தி விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதற்காக அமைக்கப்பட்ட குழு நேற்று ஆய்வுப்பணியை துவக்கியதும் பல ஆலைகள் அச்சத்தில் மூடின.

வீடு ரேஷன் பொருட்கள்-ஜூலை 1ல் துவக்கம்

சென்னை : வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம், சென்னை உட்பட 10 மா வட்டங்களில், ஜூலை 1ம் தேதி முதல் சோதனை ரீதியாக துவங்குகிறது மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி கார்டுதாரர்களின் வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் திட்டத்தை துவக்க, அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் சோதனை ரீதியாக, வரும் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகை, நீலகிரி, கடலுார் ஆகிய […]

ஆபத்தான உணவு பட்டியலில் சமோசா, ஜிலேபி

இந்தியாவில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான உணவு வகைகள் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் குழந்தைகளுக்கும் உடல் பருமன் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமோசா, ஜிலேபி போன்ற உணவு வகைகளை சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்புள்ளது

மாரடைப்பால் பஸ் டிரைவர் திடீர் மரணம் -பஸ் தாறுமாறாக ஓடி மோதியதில் ஒருவர் பலி

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்​பட்டு உயி​ரிழந்​தார். அந்த பேருந்து மோதிய விபத்​தில் சாலை​யில் நடந்து சென்று கொண்​டிருந்த முதி​ய​வர் உயி​ரிழந்​தார். 4 கார்​களும் சேதம் அடைந்​தன. அரும்​பாக்​கம் 100 அடி சாலை, தவசு குட்டி பிரி​யாணி கடை வழி​யாக நேற்று காலை 6.10 மணி​யள​வில் அரசுப் பேருந்து ஒன்று கிளாம்​பாக்​கத்​திலிருந்து கோயம்​பேடு நோக்கி சென்று கொண்​டிருந்​தது. பேருந்தை தரு​மபுரி மாவட்​டம், அரூரைச் சேர்ந்த வேலுமணி (58) என்​பவர் ஓட்​டி​னார். அப்​போது அவருக்கு திடீரென மாரடைப்பு […]

மீண்டும் உடல் எடையை குறைக்க சிம்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தாணு தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் தனது கதாபாத்திரத்துக்காக உடல் எடையை சிம்பு குறைத்திருக்கிறார். சுமார் 10 கிலோ வரை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காகவே வெளியே எங்கும் வராமல் இருப்பதாகவும் கூறுகிறார்கள்