ரஷ்யா ஜப்பான் சுனாமி அலைகள் தாக்கின
ரஷ்யாவில் நிலநடுக்கம்.8 .7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஜப்பானில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க அதிகாரிகள் அலாஸ்கா மற்றும் ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தனர் தற்போது ரஷ்யா ஜப்பானின் சில பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கி உள்ளன 1.6 மீட்டர் உயரம் உள்ள அலைகள் கரையை தாக்கியதாக தெரியவந்துள்ளது இதனால் ஜப்பானில் ஒரு தீவிலிருந்து மக்கள் தாரைதாரையாக வெளியேறி வருகிறார்கள்
திருப்பதியில் சாலையில் சென்ற வாகனத்தின் மீது பாய்ந்த சிறுத்தை
திருப்பதி அலிபிரியிலிருந்து செர்லோபள்ளி செல்லும் சாலையில் நேற்று இரவு பைக்கில் சென்ற ஒருவர் மீது திடீரென சிறுத்தை ஒன்று ஓடி வந்து பைக்கில் சென்றவரை தாக்க முயன்றது. இதில் பைக்கில் சென்றவர் நொடிப் பொழுதில் தப்பினார். பைக்கை பின் தொடர்ந்து சென்ற காரில் உள்ள கேமிராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளன
நிலத்தை தானே உழும் டிராக்டர்..!
விவசாய நிலத்தை ஓட்டுநர் உதவியின்றி தானே உழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள டிராக்டர் ஒன்றின் சோதனை பஞ்சாப் மாநிலத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள இந்த டிராக்டர் செயற்கைகோள் உதவியுடன் சென்சார் மூலம் தகவல்களைப் பெற்று நிலத்தின் நீள அகலத்தை துல்லியமாக கணக்கிட்டு வெற்றிகரமாக உழுது முடித்து ஆராய்ச்சியாளர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது
குரோம்பேட்டை நியூகாலணி பகுதியில் தீடீரென தீபற்றி எரிந்த மின்மாற்றி,
குரோம்பேட்டை நியூகாலணி பகுதியில் தீடீரென தீபற்றி எரிந்த மின்மாற்றி, தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் வந்த வீரர்கள் மின்சாரத்தை நிறுத்திய பின்னர் முழுமையாக தீயை அனைத்தனர், இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது, மேலும் மின்மாற்றி எரிய காரணம் குறித்து விசாரணை நடைபெருகிறது
சிட்லபாக்கத்தில் சுற்றி திரிந்த கொள்ளையர்கள் கைது
சிட்லபாக்கத்தில் இரவு நேரத்தில் குல்லா அணிந்து ஒருவர் திருட்டு வேலைகள் ஈடுபடுவதாக தெரிய வந்தது ஐடி ஊழியர் பிரபாகரன் என்பவர் வீட்டில் இது போல் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்ததில் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் ,முரளி கைது . செய்ய பட்டனர். இவர்கள் பகல் நேரத்தில் வாடகைக்கு கார் எடுத்து தெருத்தெருவாக போய் பூட்டி கிடக்கும் வீடுகளை உடைத்து திருடுவது தொழிலாக வைத்திருந்தனர் என தெரிய […]
புரிய மின் இணைப்பு கட்டணம் உயர்வு
புதிய மின் இணைப்பு, மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் வீடுகளுக்கு ஒருமுனை மற்றும் மும்முனைப் பிரிவில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இரு பிரிவிலும் புதிய மின் இணைப்பு வழங்க, மீட்டர் வைப்புத்தொகை, மின் பயன்பாடு வைப்புத்தொகை, வளர்ச்சிக் கட்டணம், மின் இணைப்புக் கட்டணம், பதிவுக் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வகை கட்டணத்தை, மின் வாரியம் வசூலிக்கிறது
தாம்பரத்தில் மின்சார ரயில் மீது குதித்து தற்கொலை முயற்சி
தாம்பரம் நடை மேம்பாலத்தில்இருந்து,மூன்றாவதுபிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்தமின்சார ரெயிலின் மேல்பகுதியில்குதித்தஆந்திர மாநில இளைஞர்மீது உயர்அழுத்தமின்சாரம்பாய்ந்து,தீபிடித்ததுஉயிருக்குபோராடியவரை உடனடியாக ரெயில்வே போலீசார்மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவம-னைக்கு அனுப்பி வைத்தனர்.இச் சமபவம்பயணிகள்மத்தியில் பெரும் பரபரப்பையும்அதிர்ச்சியையும்ஏற்படுத்தியது.அந்த வாலிபர் பெயர் சேகர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மனைவி பிரிந்து சென்று விட்டார் இந்த சோகத்தில் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது
யுபிஐ பணப்பரிவர்த்தனையில் இந்தியா முன்னணி!
சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. இத்தளம் ஏராளமான வங்கி கணக்குகளை ஒரு செல்போன் செயலி மூலம் இணைக்க அனுமதிக்கிறது. இந்தியாவில் நடைபெறும் அனைத்து டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகளில் 85 சதவீதம் யுபிஐ கணக்குகள் மூலம் நடைபெறுகிறது. இதில் 49 கோடியே 10 லட்சம் பேரும், 6 கோடியே 50 லட்சம் வணிகர்களும், 675 […]
நரம்பு நோயால் அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதிப்பு :
79 வயதான டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் இரண்டாவது முறையாக அதிபர் பொறுப்பேற்றார். கடந்த ஜூலை 13 ஆம் தேதி நியூ ஜெர்சியில் நடைபெற்ற . கால்பந்து போட்டியில் கலந்து கொண்ட டிரம்ப்பின் கால்களில் வீக்கம் இருப்பதை போன்ற புகைப்படம் வைரலானது. இந்த வார தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் பஹ்ரைன் பிரதமருடன் டிரம்ப் கை குலுக்கிய புகைப்படத்தில், அவரது கைகளில் காயம் காயம் காணப்பட்டது இதையடுத்து, டிரம்ப்பின் உடல்நிலை குறித்து வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது. […]
சென்னை வந்தே பாரத் ரெயிலில் 15 நிமிடத்திற்கு முன்பு முன்பதிவு.
தெற்கு ரயில்வே 8 வந்தய பாரத் ரயில்களில் கடைசி 15 நிமிடத்திற்கு முன்பு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு முன்பதிவு செய்யலாம் என்று அறிவித்துள்ளது இதில் சென்னை நாகர்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அடங்கும்