சீனாவின் உதவியுடன் நிலவில் தரையிறங்க தயாராகும் பாகிஸ்தான்!

சென்னை: பயங்கரவாத அச்சுறுத்தல், கடன் சுமையால் மூழ்கும் பொருளாதாரம், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில் நிலவில் தரையிறங்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் விண்வெளி முகமையான ‘SUPARCO’, இதுவரை தன்னிச்சையாக வடிவமைத்த செயற்கைகோள் அல்லது விண்வெளி திட்டம் என எதையும் மேற்கொண்டது இல்லை. அனைத்தும் சீனாவின் ஆதரவுடன்தான் மேற்கொண்டு வருகிறது. காலநிலை மாற்றம் சார்ந்த அச்சுறுத்தலை சமாளிப்பது தொடர்பாக கடந்த மாதம் பாகிஸ்தான் விண்ணில் நிலைநிறுத்திய ரிமோட் சென்ஸிங் செயற்கைக்கோள் சீனாவில் இருந்து […]

நீலகிரிக்கு ரெட் அலர்ட் – வெறிச்சோடிய சுற்றுலா தளங்கள்*

நீலகிரி, கோவைக்கு நாளை, நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் மேலும், கிருஷ்ணகிரி, தேனி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட்வானிலை மையம் தகவல்

பறக்கும் ரயில் நவம்பரில் தொடக்கம்

சென்னை வேளச்சேரி – பரங்கிமலை இடையேபறக்கும் ரயில் சேவை வரும் நவம்பர் மாதம் தொடக்கம் சென்னை கடற்கரை – பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் 2028ம் ஆண்டு இறுதியில்மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு

ஆண்டுக்கு ரூ.95 கோடி சம்பளம் வாங்கும் ஹெச்சிஎல் அதிகாரி

அ​திக சம்​பளம் வாங்​கும் இந்​திய ஐடி துறை சிஇஓ-க்​களின் பட்​டியலில் ஹெச்​சிஎல் டெக் நிறு​வனத்​தின் சி.​விஜயகுமார் முதலிடம் பிடித்​துள்​ளார். கடந்த 2024-25 நிதி​யாண்​டில் விஜயகு​மாருக்கு ரூ.94.6 கோடி சம்​பளம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இதில், அடிப்​படை சம்​பளம் ரூ.15.8 கோடி, செயல்​திறன் சார்ந்த போனஸ் ரூ.13.9 கோடி உள்​ளிட்​ட​வை​யும் அடக்​கம். இவரையடுத்து இன்​போசிஸ் சிஇஓ சலில் பரேக்​கின் சம்​பளம் 22 சதவீதம் அதி​கரித்து ரூ.80.6 கோடி​யாக​வும், விப்​ரோ சிஇஓ நி​வாச பலியா ரூ.53.6 கோடி​யும் சம்​பள​மாக பெற்​றுள்​ளனர்

குரோம்பேட்டையில்பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

சென்னையை அடுத்தஜமீன் பல்லாவரம், எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் கலைவாணி(வயது 50). தாம்பரம் அடுத்த முடிச்சூரில் உள்ள தனியார் கால் சென்டர் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 30-ந்தேதி இரவு பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவர் அணிந்து இருந்த இருந்த ரெண்டரை பவுன் தங்கை தங்க சங்கிலியை யாரோ பறித்து சென்று விட்டனர் இதுபற்றி பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து திருவண்ணா மலை மாவட்டம், பெருமாள் கோவில் தெருவைச் […]

மும்பை – அகமதாபாத்துக்கு விரைவில் புல்லட் ரயில்

மும்பை – அகமதாபாத் இடையே 508 கி.மீ. தூரத்துக்கு புல்லட் ரெயிலுக்காக அதிநவீன தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 12 ரயில் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இத்திட்டத்துக்காக ஜப்பானில் 2 சின்கான்சென் ரக புல்லட் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் இதன் சோதனை ஓட்டம்நடந்து வருகிறது. இந்த புல்லட் ரயில்கள் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை. புதிய புல்லட் ரயிலில் மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு 2 மணி நேரம் 7 நிமிடங்களில் செல்ல முடியும்.

உலக அளவில் 3 பில்லியன் ஐபோன்கள் விற்பனை:

நியூயார்க்: உலக அளவில் 3 பில்லியன் ஐபோன்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டியுள்ளது ஆப்பிள் நிறுவனம். இதை அந்த நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் உறுதி செய்துள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது ஆப்பிள் நிறுவனம். ஐபோன், ஐபேட், ஏர்பாட், ஹெட்போன், வாட்ச் போன்றவற்றை இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. உலக அளவில் இந்நிறுவன தயாரிப்புகளுக்கு என தனி வரவேற்பு இருப்பது வழக்கம். அந்த அளவுக்கு இதன் தரமும், செயல்பாடும் இருப்பதுதான் அதற்கு காரணம் .

தாம்பரத்தில் பூட்டியிருந்த வீடுகளில் 20 பவுன் நகை திருட்டு.

தாம்பரத்தில் முடிச்சூர் பகுதி சக்தி நகரில் குடியிருப்பவர் கிருஷ்ணகுமார் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் வெளியூர் சென்று திரும்பி வந்த போது அவரது வீட்டின் பூட்டு உடைத்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை மட்டும் 50 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது.அவரது பக்கத்து வீட்டிலும் இதேபோல பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதன் உரிமையாளர்கள் இன்னும் வரவில்லை .இந்த சம்பவங்கள் குறித்து பீர்க்கங்கரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்

சென்னையில் தாறுமாறாக ஓடிய குடிநீர் லாரி மோதி இரண்டு பேர் பலி

திருவேற்காடு அடுத்த சுந்தரசோழபுரத்தைச் சேர்ந்த தேவி( 40) மற்றும் கிருஷ்ணன் (52) ஆகிய இருவர் காயமடைந்தனர். தொடர்ந்து, அந்த லாரி, மற்ற இரு சக்கர வாகனங்கள், கார்களை இடித்து தள்ளிவிட்டு சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. இதனால், மின் கம்பம் மற்றும் மின்சார கம்பிகள் கீழே சாய்ந்தன. இச்சம்பவத்தில், சாலையில் நடந்து சென்ற, சேலத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளியான தனபால் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.