சில நிமிடங்களில் முடிந்த தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு.
அக்டோபர் 17ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தென் மாவட்ட ரயில்களில் டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்தன கன்னியாகுமரி, நெல்லை, திருச்செந்தூர் விரைவு ரயில் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது அக்டோபர் 18ஆம் தேதிக்கு நாளையும், அக்டோபர் 19ஆம் தேதிக்கு நாளை மறுநாளும் முன்பதிவு செய்யலாம்🕷️
வங்கியில் உடனடியாக ‘செக்’ பாஸ் ஆகும்* – புதிய நடைமுறை
வங்கியில் காசோலை டிபாசிட் செய்த சில மணி நேரத்தில், உரியவரின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதற்கான புதிய நடைமுறை, வரும் அக்., 4ம் தேதி அமலுக்கு வருகிறது என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
ரூ.3,000 பாஸ்ட் டிராக் இன்று முதல் அமல்.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய விரைவுச்சாலை சோதனைச்சாவடிகளில் ரூ.3 ஆயிரம் சலுகைக் கட்டணத்தில் ஓராண்டு பாஸ் முறை அமுலுக்கு வந்தது. தனியார் கார், ஜீப், வேன்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் ரூ.3,000 ஓராண்டு சலுகைக் கட்டண பாஸ் முறை இன்று முதல் அமலுக்கு வந்தது ஓர் ஆண்டு அல்லது 200 முறை டோல்கேட்டை கடந்து செல்வது என இதில் ஏதாவது ஒரு சேவை பயன்படுத்தலாம். தற்போதுள்ள ஃபாஸ்டேக்கையே, ரூ.3000 செலுத்தி ஓராண்டு சலுகைக் கட்டண பாஸாக மாற்றிக்கொள்ளலாம் ராஜ்மார்க்யாத்ரா […]
குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
தென்மேற்குப் பருவமழையையொட்டி தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவிகளில் இன்று தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11.30 மணி நிலவரப்படி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளான இன்று அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். […]
ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் வருகிறது
தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதன்மூலமாக தற்போதைய ஐந்து விகித முறையிலிருந்து, இரண்டு விகித ஜிஎஸ்டி முறை அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குரோம்பேட்டையில் தெரு நாய்களுக்கு ராபீஸ் தடுப்பு ஊசி
குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியில் தெரு நாய்களுக்கும் வீட்டு நாய்களுக்கும் ராபீஸ் தடுப்பூசி போடப்பட்டது.தெரு நாய்கள் கடிப்பதால் மனிதர்களுக்கு ராபீஸ் தொற்றுநோய் பரவி வருகிறது. இதை தடுக்கும் விதமாக தமிழக கால்நடை மருத்துவத்துறை சார்பாக தெரு நாய்களுக்கு ராபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பத்மநாப நகரில் தெரு நாய்களுக்கும் வீட்டு நாய்களுக்கும் ராபீஸ் தடுப்பூசி போடப்பட்டது.
ரூ.100 கோடி மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய நீடா அம்பானி
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரும், ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரும், பிரபல தொழிலதிபருமாக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீடா அம்பானி. இந்நிலையில், ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவரான நீடா அம்பானி இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த காரை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. நீடா அம்பானியின் Audi A9 Chameleon காரின் விலை ரூ.100 கோடி ஆகும். அவரது கணவரான அம்பானியின் காரின் விலையை விட இது அதிகம். இந்த கார் நிறத்தை மாற்றும் திறன்களைக் கொண்டுள்ளது. இதன் […]
செப்டம்பர் 7-ந்தேதி முழு சந்திர கிரகணம்: சென்னையில் முழுமையாக தெரியும்
வருகிற செப்டம்பர் 7-ந்தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதை சென்னையில் உள்ளவர்கள் வெறும் கண்களால் பார்க்கலாம். சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது ஏற்படுகிறது. பூமி, சூரிய ஒளியை சந்திரன் மேல் விழாமல் தடுப்பதால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதை ரத்த நிலவு என்றும் சொல்வார்கள். செப்டம்பர் 7-ந்தேதி இரவு 8.58 மணிக்கு தொடங்கும் கிரகணம் 8-ந் தேதி அதிகாலை 2.25 மணி […]
சென்னையில் தக்காளி விலை உயர்வு
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தொடர் மழை எதிரொலியாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது
*பதிவுத் தபால் முறை ரத்து
50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் பதிவுத் தபால் முறையை செப்டம்பர் 1ம் தேதியுடன் நிறுத்த முடிவு செய்து உள்ளனர் மக்களிடையே ஆர்வம் குறைந்ததால் பதிவுத் தபால் சேவையை ஸ்பீடு போஸ்டுடன் இணைக்கத் திட்டமிட்டு உள்ளனர்