பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பல நோய்கள் வராமல் தடுக்கலாம்

பூண்டை தினசரி பயன்படுத்தி வந்தால், சளி ஏற்படும் எண்ணிக்கைகள் குறைந்துவிடும். அதிலுள்ள பக்டீரியா எதிர்ப்பு குணங்கள் தொண்டை எரிச்சல்களை குணப்படுத்த உதவும். மேற்பகுதி சுவாச பாதை தொற்றுக்களின் தீவிரத்தை குறைக்க பூண்டு உதவிடும். ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் கோளாறுகளுக்கும் இது பயனளிக்கும்.
மருத்துவ குறிப்பு

வெண்டைக்காயை நன்றாக கழுவி நீரில் ஊற வைத்து மறுநாள் சாப்பிட்டால் கால் வலி குணமாகும்.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில எளிய வழிமுறைகள் உங்களுக்காக!!!

காரட் ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள விட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்துவதோடு, காரட் ஜூஸில் உள்ள அதிகபடியான பீட்டா-கரோட்டீன் முதுமையைத் தடுக்கும்.சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் உள்ளவர்கள் சுரைக்காய் கொண்டு ஜூஸ் தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப்படுத்தப்படுவதோடு சிறுநீர்ப் பெருக்கியாகவும் செயல்படும்.பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் இரத்த நாளங்களை விரியச் செய்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் […]
மல்லிகைப்பூ வாசனைக்கு மட்டுமல்ல… மருத்துவக் குணங்களும் கொண்டது

மல்லிகைப் பூக்களில் பல மருத்துவ குணங்களும் உள்ளன. மல்லிகைப் பூக்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி சளியினால் ஏற்படும் மூச்சடைப்பு, இருமல் போன்ற தொந்தரவுகள் நீங்கும்.மல்லிகை மொட்டுக்களை புண்கள் காயம்பட்ட இடங்கள் கொப்புளங்கள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து மேல் பூச்சாக பூசினால் உடனே குணமடையும். மல்லிகையின் வேரை காயவைத்து பொடிசெய்து அதனுடன் வசம்புத் தூளை சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு தேய்த்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும்.மல்லிகைப் பூவிலிருந்து […]
பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கும் வேப்ப இலை

ஆயுர்வேதத்தில் வேம்பு, ஒரு அதிசய மரமாக கருதப்படுகிறது. வேப்ப மரத்தின் வேர், பழம், இலை, பட்டை என ஒவ்வொரு பகுதியும் மருந்துக்கு பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. வேப்ப இலை சாற்றை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.வேப்ப இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு ரத்தத்தை சுத்திகரிக்க உதவும். கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவும். பொடுகு, முடி உதிர்தல் பிரச்சினையை போக்குவதற்கு வேப்ப இலை சாறை தலையில் தடவலாம். பருகவும் செய்யலாம்.வேப்ப இலை சாறு […]
‘ஸ்வீட் கார்ன்’… இனிப்பான செய்திகள்

நொறுக்குத் தீனி பிரியர்கள் பலருக்கு, இப்பழக்கம் நம் ஆரோக்கியத்தை நொறுக்கி விடுமோ என்ற பயம் இருக்கும்.அப்படி பயம் ஏதும் இல்லாமல் சாப்பிடக்கூடிய ‘ஸ்நாக்ஸ்’, ‘ஸ்வீட் கார்ன்’ எனப்படும் இனிப்புச் சோளம்.இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் கண் பார்வை, சருமத்துக்கு நலம் பயக்கக்கூடியவை.இவை தவிர மேலும் பல ஆரோக்கிய அனுகூலங்களை ஸ்வீட் கார்ன் வழங்குகிறது. அவை பற்றிப் பார்ப்போம்…ஸ்வீட் கார்னில் உள்ள வைட்டமின் பி1 ஞாபகசக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதேபோல, கார்ன் ஆயிலில் இருக்கும் அதிகப்படியான ஒமேகா 6 […]
குடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது வில்வ பழம்

குடலை பாதுகாக்கும் உணவுகளில் தலை சிறந்த உணவு வில்வ பழம் ஆகும். இது நாம் உண்ணும் உணவினை நன்றாக ஜீரணிக்க உதவி, குடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது.சிலருக்கு எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படும். அதற்கு, வில்வ பழத்தின் ஓட்டை நீக்கிவிட்டு சதைப்பகுதியை மட்டும் விதை இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பால், சர்க்கரை போன்றவற்றை சேர்த்து வில்வ பழத்தை நன்றாக மிக்ஸியில் அரைத்து சர்பத் தயார் செய்து கொள்ளவேண்டும்.இந்த சர்ப்பத்தினை […]
முகம் பொலிவாக வாழைப்பழ பேஸ் மாஸ்க்

காலநிலை மாற்றங்கள் முக சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக சரும வறட்சி, சரும உதிர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு முக அழகு குறையும். இந்நிலையில் வாழைப்பழத்தையும், பாலையும் மட்டும் பயன்படுத்தி முக அழகை தக்க வைத்து கொள்ளலாம்.இந்த இரண்டு பொருள்களும் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி புதிய முகப்பொலிவை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. வாழைப்பழம் மற்றும் பால் கலந்து பேஷியல் கிரீம் தயாரிப்பது எப்படி? என்று பார்ப்போம். தேவையானவை: வாழைப் பழம்-4, பால்- 2 டம்ளர்.செய்முறை: […]
இதயத்தை வலுப்படுத்தும் உடற்பயிற்சி

உங்கள் தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சியை சேர்க்க சில காரணங்கள் உள்ளன. வழக்கமான உடற்பயிற்சி இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கியமானது, இதயம் மற்றும் சுற்றோட்ட அமைப்பை சாதகமாக பாதிக்கிறது. விறுவிறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஓட்டம் அல்லது நீச்சல் போன்ற ஏரோபிக் செயல்களில் ஈடுபடுவது இதய தசையை பலப்படுத்துகிறது. உங்கள் இதயம் மிகவும் திறமையாக மாறும் போது, அது இரத்தத்தை மிகவும் திறம்பட பம்ப் செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.வழக்கமான உடல் செயல்பாடு பல்வேறு இருதய […]
குளிர்காலத்தில், சருமத்திற்கு பிரத்யேக கவனம் செலுத்தி பராமரிப்பது அவசியம்

குளிர்காலத்தில் கதகதப்பான உடைகள் அணிந்துக் கொள்ளுதல், நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர் காய்தல், தலை முதல் கால் வரை மூடிய நிலையில் உடைகள் அணிதல் ஆகியவை மட்டும் போதாது. குளிர்காலத்தில், சருமத்திற்கு பிரத்யேக கவனம் செலுத்தி பராமரிப்பது அவசியம். அதற்காக சில டிப்ஸ்கள் உங்களுக்காக.கூந்தல் பராமரிப்பு: குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழை சாறு தடவி, சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம். இதனால், கூந்தல் மென்மையாக இருக்கும். மேலும், வாரத்திற்கு ஒன்று அல்லது […]