எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்; புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு

ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்கிறோமோ அவ்வளவு ஆரோக்கியமாக இருக்கலாம். போலந்து லோட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் தினசரி நடக்கும் ஸ்டெப்ஸ்களின் எண்ணிக்கை பற்றி ஆய்வு செய்துள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது 3,967 ஸ்டெப்ஸ் நடப்பது உடல் உபாதைகளால் இறக்கும் அபாயத்தையும், ஒரு நாளைக்கு 2,337 ஸ்டெப்ஸ் நடப்பது இருதய நோய்களால் இறக்கும் அபாயத்தைக் குறைக்கிறது என ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பண்புகளை கொண்டுள்ள வெல்லம்

ஆரோக்கியம் தரும் வெல்லம்… முன்னோர்களின் வாழ்க்கை முறையில் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் வெல்லம் கலந்து குடித்துவிட்டுதான் நாளை தொடங்குவார்கள் என்ற பேச்சு உண்டு. காரணம் இப்படி குடிப்பதால், அன்றைய நாள் முழுவதும் செரிமான அமைப்பை சீராக வைத்துக் கொள்ளுமாம்.வெல்லம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பண்புகளை கொண்டுள்ளது. அதாவது இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் மற்றும் பல வைட்டமின்கள் இதில் உள்ளன. எனவே, சாப்பிட்ட பிறகு வெல்லம் சாப்பிடுவது கூடுதல் நல்லது. அப்படி உணவுக்கு […]

புத்துணர்ச்சி தரும் துளசி

துளசிச் செடியின் இலையை தினமும் தின்று வந்தால் குடல் வயிறு வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும் புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்..வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து […]

பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டுமா?

நாம் தினமும் மூன்று வேளைகள் உணவு உட்கொண்டாலும், பசி பற்றிய பல விஷயங்களை அறியாமல்தான் இருக்கிறோம்.பசிதான் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை நாம் உணர வேண்டும். பசிக்கும் நேரத்தில் சாப்பிட வேண்டும். எப்போது உணவு தேவையோ அந்த நேரத்தில் வயிற்றில் சில அமிலங்கள் சுரக்கும். அதன் விளைவாக பசி உணர்வு ஏற்படும்.அந்த நேரத்தில் சாப்பிட்டால்தான், உணவு முழுமையாகச் செரிமானமாகி சத்துகளை உடலால் கிரகிக்க முடியும். பசி உணர்வு இல்லாதபோது சாப்பிட்டால் இந்தச் செயல்பாடு முறையாக நடக்காது. […]

வாரம் ஒருமுறை கொள்ளு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

பருப்புவகைகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரியக்கூடியவை. தினசரி உணவில் பருப்பு வகைகளை சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய பலவிதமான சத்துக்கள் கிடைத்து உடல்ஆரோக்கியமாக இருக்கும். அதில் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு போன்றவற்றைதான் அதிகம் உட்கொள்வோம். ஆனால் இவை அனைத்தை விடவும் கொள்ளு அதிகசத்துக்களை உள்ளடக்கியவை என்பது தெரியுமா? கொள்ளு பருப்பு கிமு 2000 ஆம்ஆண்டில் இருந்தே மக்களால் உண்ணப்பட்டு வருகிறது. இது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவை பூர்வீகமாக கொண்ட பருப்பாகும். ப்ரௌன்நிறத்தில் மிகச்சிறியதாக காணப்படும் […]

வளரும் குழந்தைக்கு அளிக்க வேண்டிய சத்தான உணவுகள்

வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. அனைவருக்குமே குழந்தை என்றால் பெரும் ப்ரியம். தங்களது குழந்தைகளை அன்போடு மட்டுமின்றி அக்கறையோடு பார்த்துக்கொள்வதற்கும் பலர் துடிப்பார்கள்.ஆனால் அவர்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த […]

உணவில் நீரிழிவு நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

உடலில் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.நீரிழிவு நோயைத் தவிர்க்க உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், உங்களுக்கு ஆரோக்கியமான உணவு தேவை. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நீங்கள் சேர்க்க வேண்டும்.வெங்காயத்தையும் சேர்க்கலாம். வெங்காயம் இந்தியாவில் மிக எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் ஒன்றாகும். இது கிட்டத்தட்ட எல்லா உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வெங்காயத்தில் சுமார் 44 கலோரிகள் […]

மருத்துவ குணங்கள் அடங்கிய அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம் ஒரு சுவை மற்றும் மணம் நிறைந்த பழம். அதுமட்டுல்ல அன்னாசிப்பழத்தில் பல மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது.ஓர் அன்னாசிப் பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும் இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும் […]

உங்கள் உடல் பருமன் குறையணுமா?

இதென்னங்க கேள்வி? உடல் பருமனை குறைக்க யார்தான் விரும்ப மாட்டார்கள். அதுவும் பெண்கள்…! இதோ அதிகம் செலவில்லாத எளிய தமிழ் வைத்திய குறிப்புகள். *இஞ்சிச்சாறைக் கொதிக்க வைத்து அதில் அதே அளவு தேன் ஊற்றி ஆறியபின் தினசரி உணவுக்குப் பின் சாப்பிட்டு வர பருத்த உடல் விரைவில் குறையும். *தினமும் முருங்கை இலைச்சாறு 2 ஸ்பூன் காலை, மாலை சாப்பிட உடல் எடை குறையும். *5 பூண்டு பற்களை பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்டு வந்தால் உடல் பருமன், […]

அல்சரைப் போக்கும் சீதாப்பழம்

மூக்கை துளைக்கும் மணம் கொண்ட சீதாப்பழத்தில் விட்டமின் சி, விட்டமின் பி6, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆண்டி ஆக்சிடன்ட் ஆகிய சத்துக்கள் உள்ளன. மேலும் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் செரிமானப் பிரச்சனை வராது. நீண்டகாலமாக அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் இந்தப் பழத்தை சாப்பிட்டு வர, அவர்களுக்கு அந்தப் பாதிப்பு வெகு விரைவில் குணமாகும்.