மருத்துவ குணங்கள் நிறைந்த தேனின் நன்மைகள்…!!

ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும்.இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். அத்துண்டுகளை ஒரு சட்டியில் இட்டு அடுப்பில் வைத்து சிவக்க வறுக்க வேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீ ஸ்பூன் தேனையும் கலந்து […]

இளமை நீடிக்க

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் உடம்பு செல்கள் புதுப்பிக்கப்படும். இளமையை நீடிக்க உதவும்.

மருத்துவ குறிப்பு

அரச மரத்திலுள்ள பாலை பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவி வந்தால் குணமாகும்.

பசியை தூண்டும் முள்ளங்கி

அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் பல நல்ல சத்துகளை கொண்டவற்றில் முள்ளங்கியும் ஒன்று. முள்ளங்கியில் விட்டமின் பி, சி,கே, பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.இதயத்தை பலப்படுத்துவதற்கு தேவையான அந்தோசியனின் முள்ளங்கியில் நிறைந்துள்ளது.முள்ளங்கி சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் சீராகி கட்டுப்படுத்தப்படுகிறது.முள்ளங்கி இன்சுலின் செயல்பாட்டை அதிகரித்து இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் விட்டமின் சி முள்ளங்கியில் உள்ளது. இதை சாப்பிடுவதால் பசி அதிகரிக்கும்.முள்ளங்கி சாப்பிடுவதால் செரிமான மண்டலம் வலுவடைந்து உணவு நன்றாக ஜீரணமாகும். […]

முடி உதிர்வதை தடுக்கும் நெய்

இன்றைய காலக்கட்டத்தில் உள்ளவர்களுக்கும் முடி உதிர்வு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உணவு மாற்றம், ஆரோக்கியமற்ற உணவு, நேரத்திற்கு சாப்பிடாதது போன்றவற்றின் காரணமாக முடி உதிர்வு பிரச்சினை ஏற்படுகின்றது.நாம் சாப்பிடும் உணவுகளில் நெய் எடுத்துக்கொள்வோம். ஆனால் அதில் எந்தவிதமான சத்துக்கள் உள்ளன என்பதை பற்றி யாரும் யோசிப்பதில்லை. நெய்யில் வைட்டமின் ஏ மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வைட்டமின் டி ஆகியவை உள்ளது. இவை நம் உணவில் உட்கொள்ளும் போது முடி உதிர்தலை எதிர்த்துப் போராடுகிறது.நெய்யில் இருக்கும் […]

மாடித் தோட்டத்தில் செடிகளை பாதுகாக்க

மாடித் தோட்ட செடிகளை பயிரிட நோய் எதிர்ப்புத் திறன் உள்ள விதைகளை வாங்கி பயிர் செய்வது நல்லது. செடிகளில் புழுக்கள் தென்பட்டால், வேப்பங்கொட்டை சாறு, வேப்ப எண்ணெய், பிண்ணாக்கு சாறு உபயோகிக்கலாம். ரசாயன உரங்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால், மருந்து தெளித்து 10 நாட்கள் வரை காய்களை பறிக்கக்கூடாது. பூஞ்சை நோய்கள் தென்பட்டால், தகுந்த பூஞ்சை கொல்லி மருந்தை தெளிப்பது அவசியம்.

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க டிப்ஸ்

குழந்தைகளின் நினைவாற்றலை கூர்மைப்படுத்தி படிப்பில் சிறந்தவர்களாக எளிதில் மாற்றலாம். புத்தகத்தில் உள்ள விஷயங்களை, வேடிக்கையான முறையில் கற்றுக்கொடுங்கள். அறிவியல் அருங்காட்சியகம், கலைக்கூடம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று விளக்கிக் காட்டுங்கள். ஒரு விஷயத்தை காட்சிப்படுத்துவதன் மூலம், வேகமாக நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் அதிகரிக்கும்.

தினமும் பாதாம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

தினசரி பாதாம் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது என்றும் இரவில் ஊற வைத்த பாதாமை காலையில் சாப்பிட்டால் பல நன்மைகள் இருக்கிறது.பாதாமை ஊற வைத்து காலையில் அதன் தோலை நீக்கி சாப்பிட்டால் புரதச்சத்து நார்ச்சத்து வைட்டமின் ஆகியவை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.இதய நோய் சர்க்கரை நோய் சரும நோய் ஆகியவை வராமல் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.6 முதல் 7 மணி நேரம் ஊற வைத்த பாதாம் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் இருக்காது என்றும் ரத்தத்தில் கலந்து கொள்ள […]

உடலில் ஹீமோகுளோமின் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

உடலில் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்தால் தான் உடல் நலமாக இருக்கும். இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால் உடலில் ஹீமோகுளோபின் அளவுகள் குறையும். எனவே ஹீமோகுளோபின் அளவை சரியாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்.ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரும்பு சத்து அதிகம் உள்ள அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும். ரத்த பற்றாக்குறையை இந்த பழம் பூர்த்தி செய்யமுடியும் கால்சியம் மற்றும் நார்ச்சத்து இதில் அதிகம் உள்ளது.மேலும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் பேரிச்சம்பழங்களை சாப்பிடலாம். இரும்பு சத்து வைட்டமின்கள் […]

இளம் வயதினர் இதயநோய்களை தவிர்க்க வேண்டுமா?

இதய நோய்களிலிருந்து காத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்..!சமீப காலமாக இந்தியாவில் அதிகமான மாரடைப்பு மரணங்கள் பதிவாகின்றன. 25 வயது இளைஞர்கள் கூட இதய நோய்களால் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதய நோய்களிலிருந்து காத்துக் கொள்ள உணவு பழக்க வழக்கங்களை சரியாக கடைபிடிப்பது அவசியமானதாக உள்ளது.பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளுதலை அதிகரிக்க வேண்டும்.பழுப்பு அரிசி, பார்லி, கோதுமை, ஓட்ஸ் உள்ளிட்ட தானியங்களை சாப்பிடுவது நல்லதுவெண்ணெய், பனீர், பாலாடைக்கட்டி, நெய், சிவப்பு இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களை தவிர்க்க […]