ஷார்ட் வீடியோக்களால் மனநல பாதிப்பா?? புதிய ஆய்வு
சுமார் 100,000 பேரை உள்ளடக்கி நடத்தப்பட்ட ஒரு புதிய பெரிய ஆய்வில், infinite-scroll தளங்களில் அடிக்கடி குறுகிய கால வீடியோக்களை பார்ப்பது, பலவீனமான சிந்தனைத் திறன் மற்றும் மோசமான மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை அதிகம் பயன்படுத்துபவர்களிடம் குறைந்த கவனக்குவிப்பு, குறைவான சுயக்கட்டுப்பாடு மற்றும் பலவீனமான அடிப்படைத் தர்க்க அறிவு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களிடம் அதிகப்படியான பதற்றம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு காணப்படுகிறது. வேகமான மற்றும் அதிகத் தூண்டுதலைத் தரும் உள்ளடக்கங்களைத் […]
ஜப்பானின் ஸ்மார்ட் கழிப்பறைகள்
ஜப்பானின் புதிய ஸ்மார்ட் கழிப்பறை, உங்கள் கழிவுகளின் வடிவம், நிறம் மற்றும் வேதியியல் மாற்றங்களை ஆய்வு செய்து, முழுமையான ஆரோக்கிய அறிக்கையை நேரடியாக உங்கள் கையடக்க தொலைபேசிக்கு அனுப்பி வைக்கின்றன! இதில் உள்ள சிறப்பம்சங்கள்:செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன சென்சார்கள் மூலம் இவை செயல்படுகின்றன. சிறுநீரைப் பரிசோதிக்கும் வசதி இதில் உள்ளமைக்கப்பட்டுள்ளது. உங்கள் அன்றாட இயற்கை உபாதைகளை வைத்தே, உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் கண்டறியலாம். எதிர்கால மருத்துவ உலகம் உங்கள் வீட்டுக் கழிப்பறையிலிருந்தே தொடங்குகிறது! […]
டெல்லியில் அடர்ந்த மூடுபனி காரணமாக 148 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன
டெல்லியில் இன்று அடர் பனிமூட்டத்துக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில், 148 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக அடர் பனிமூட்டம் மற்றும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக டெல்லி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இடியாப்பம் விற்பனை செய்ய உரிமம் கட்டாயம்.
மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்வோர், இனி கட்டாயமாக உணவு பாதுகாப்புத்துறையிடம் உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என்ற தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இடியாப்பம் விற்பனைக்கு தேவையான உணவு பாதுகாப்பு உரிமத்தை ஆன்லைன் மூலம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும், அந்த உரிமத்தை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இடியாப்பம் தயாரிக்கும் போது சுத்தமான சூழலில், தரமான பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பாக தயாரிக்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு உணவு […]
வீட்டில் வளரும் அருமருந்து கற்றாழை

வீட்டில் வளரும் கற்றாழையைக் கொண்டு கைவைத்தியம் செய்து, சிறு சிறு நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகளை பட்டிய லிட்டுள்ளோம்.காயங்கள்கற்றாழையில் ஆன்டி-செப்டிக் குணங்கள் அதிகமாக உள்ளது. அதனால் காயங்கள், புண்கள் மற்றும் பூச்சிக் கடிகள் போன்றவற்றிற்கு இதனைப் பயன்படுத்தலாம். அதற்கு இந்த செடியின் உட்புறத்தில் உள்ள ஜெல் போன்ற பகுதியை காயம் பட்ட இடத்தில் தடவ வேண்டும். இது எரிச்சலை குறைத்து புண்களை செரிசெய்யும்.மலச்சிக்கல்கற்றாழையில் உள்ள நார்ச்சத்துக்கள், மலச்சிக்கலை நீக்கி செரிமானத்திற்கு உதவும். அதிலுள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலுக்கு தீர்வாக […]
ஸ்லிம் உடலை பெற 10 வழிகள்

உடல் எடையை குறைக்க இயற்கை தரும் மருந்துகள் இதோ:
ஆரோக்கியமான கூந்தலுக்கு உதவும் மீன் எண்ணெய் மாத்திரை.!

கூந்தல் உதிர்வுக்கு வெளியில் இருந்து எண்ணெய் போன்ற பொருட்களை பயன்படுத்தினாலும், உள்ளிருந்து ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.மீன் எண்ணெய் என்பது மத்தி, சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களின் திசுக்களில் இருந்து பெறப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகும்.இதில் DHA, EBA போன்றவை அதிகம் காணப்படுகிறது.இது சருமம், முடி பராமரிப்பிற்கு உகந்ததாக இருக்கிறது.மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தினமும் 1 கேப்சூல் எடுத்துக் கொள்ளலாம்.
டெங்குவில் இருந்து நம்மை காக்கும் பிற மூலிகைகள்.!

டெங்கு காய்ச்சலுக்கு தமிழக அரசு நிலவேம்பு குடிநீரை பரிந்துரைக்கிறது.அதுமட்டுமல்லாமல் விஷ்ணுகரந்தை, சீந்தில், மலைவேம்பு, கருந்துளசி, பற்பாடகம், கண்டங்கத்திரி, தூதுவளை, வில்வம், வன்னி போன்ற இலைகள் பலன் தரும்.தினமும் ஒரு மூலிகையை எடுத்து சீரகம், மிளகு சேர்த்து கஷாயமாக்கி அதை குடித்து வரலாம்.இது மட்டுமல்லாமல் சுதர்சன சூரணம், தாளிசாதி சூரணம் வசந்த குசுமாவரம் போன்ற சித்தமருத்துகளை சித்த மருத்துவரின் மேற்பார்வையில் சாப்பிடலாம்.சுயமாக எடுத்தல் கூடாது.
நுரையீரல் புற்றுநோய்

உலகில் பரவலாக காணப்படும் புற்றுநோய் வகைகளில் முக்கியமான ஒன்றாக நுரையீரல் புற்றுநோய் உள்ளது. சுவாசத்தை பாதிக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காற்றுமாசு முக்கிய காரணியாக உள்ளது. குறிப்பாக, இளம் வயதினருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காற்றுமாசு முக்கிய காரணமான அமைகிறது.நவம்பர் மாதம் முழுவதும் நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. 90 சதவிகித நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் புகை பிடிப்பதால் ஏற்படுகிறது. மேலும் காற்றுமாசு, சிகரெட் புகை, ரேடான் வாயு, மரபியல் ஆகியவை நுரையீரல் புற்றுநோய் ஏற்பட […]
உங்கள் இதயம் எப்படி இருக்கு? தெரிந்துகொள்ள சில வழிகள்!

மனித உடலில் இன்றியமையாத உறுப்பு இதயம் ஆகும். உடல் முழுவதும் குருதியை விநியோகம் செய்யும் பிரதான உறுப்பான இதயத்திற்கு வரும் ஆபத்துகளில் பெரும் பாலானவற்றை நாம் கட்டுப்படுத்த முடியும். உண்ணும் உணவும், வாழ்க்கை முறையுமே இருதய நோய்களை கட்டுப்படுத்தும் கருவிகளாகும். எல்லா வகையான இருதய நோய்களுக்கும் அறிகுறிகள் தெளிவாக புலப்படுவதில்லை. அப்படியிருக்க, நம் இதயம் ஆரோக்கியமாக துடிக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது? குறிப்பிட்ட இடைவெளிகளில் உடற் பரிசோதனை செய்வதன் மூலம் இருதய நோய் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும். […]