தெரு நாய் கடித்ததால் சிறுவன் உயிரிழப்பு..‌

காஞ்சிபுரம் அருகே சின்னிவாக்கம் கிராமத்தில் நண்பர்களுடன் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை நாய் கடித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. சிகிச்சைக்கு பயந்து பெற்றோரிடம் நாய் கடிதத்தை மறுத்தால் ரேபிஸ் நோய் முற்றி உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் சபரிவாசன் (15) என்ற சிறுவன் அதே பகுதியில் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு […]

தமிழகத்தில் சிக்கன் குனியா நோய் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், தேனி, தென்காசியில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது. எலிசா பரிசோதனைகளை மேற்கொள் தேவையான உபகரணங்களை கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.. மருத்துவமனைகளில் டெங்கு, சிக்குன்குனியாவுக்கு என பிரத்யேக வார்டுகளை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நடமாடும் மருத்துவ விரைவு குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் […]

சென்னையின் “கடும் குளிர்”

சென்னையில் நிலவும் “கடும் குளிர்” குறித்து பலரும் கேட்கிறார்கள். காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இன்று பகல் நேர வெப்பநிலை இயல்பை விட மிகக் குறைவாக இருந்தது. இது நாளை மற்றும் நாளை மறுநாளும் நீடிக்கலாம் (இருப்பினும் வெப்பம் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது). பொங்கல் பண்டிகை முதல், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வெப்பநிலை குறையத் தொடங்கும். இதனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இரவு நேரங்களில் குளிர் நிலவும். மதிய நேரங்களில் மீண்டும் வெப்பம் அதிகரித்து, சென்னையின் […]

ஜப்பானின் ஸ்மார்ட் கழிப்பறைகள்

ஜப்பானின் புதிய ஸ்மார்ட் கழிப்பறை, உங்கள் கழிவுகளின் வடிவம், நிறம் மற்றும் வேதியியல் மாற்றங்களை ஆய்வு செய்து, முழுமையான ஆரோக்கிய அறிக்கையை நேரடியாக உங்கள் கையடக்க தொலைபேசிக்கு அனுப்பி வைக்கின்றன! இதில் உள்ள சிறப்பம்சங்கள்:செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன சென்சார்கள் மூலம் இவை செயல்படுகின்றன. சிறுநீரைப் பரிசோதிக்கும் வசதி இதில் உள்ளமைக்கப்பட்டுள்ளது. உங்கள் அன்றாட இயற்கை உபாதைகளை வைத்தே, உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் கண்டறியலாம். எதிர்கால மருத்துவ உலகம் உங்கள் வீட்டுக் கழிப்பறையிலிருந்தே தொடங்குகிறது! […]

டெல்லியில் அடர்ந்த மூடுபனி காரணமாக 148 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன

டெல்லியில் இன்று அடர் பனிமூட்டத்துக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில், 148 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக அடர் பனிமூட்டம் மற்றும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக டெல்லி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இடியாப்பம் விற்பனை செய்ய உரிமம் கட்டாயம்.

மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்வோர், இனி கட்டாயமாக உணவு பாதுகாப்புத்துறையிடம் உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என்ற தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இடியாப்பம் விற்பனைக்கு தேவையான உணவு பாதுகாப்பு உரிமத்தை ஆன்லைன் மூலம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும், அந்த உரிமத்தை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இடியாப்பம் தயாரிக்கும் போது சுத்தமான சூழலில், தரமான பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பாக தயாரிக்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு உணவு […]

அஸ்ஸாமில் ரயில் மோதி ஏழு யானைகள் பலி

அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று அதிகாலை சைராங் – புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானைக் கூட்டம் மீது மோதியதில் 7 யானைகள் உயிரிழந்தன, ஒரு யானை காயமடைந்தது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு

மத்தியபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் எலி கடிக்கு 2 பச்சிளம் பெண் குழந்தைகள் பலியாயின. இது தொடபாக பழங்குடியின அமைப்புகள் காலவரையற்ற போராட்டம்*அறிவித்துள்ளன.

அண்ணாமலைக்கு காய்ச்சல்

சென்னையில் இருந்து தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி ஒலித்து ஆலோசனையும் பயிற்சியும் நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் அனைத்து மூத்த தலைவர்களும் பங்கே இருக்கிறார்கள் பங்கேற்கிறார்கள் ஆனால் அண்ணாமலை இந்த கூட்டத்திற்கு வரவில்லை. தனக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாகவும் மதியத்திற்கு மேல் கலந்து கொள்வதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்