அதிரடியாக குறைந்த தங்கம் விலை

சென்னையில் 2-வது நாளாக இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, பவுனுக்கு ரூ.600 குறைந்து ஒரு பவுன் ரூ.73 ஆயிரத்து 240 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.9,155 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 120 க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடர் உயர்வு

சென்னை நகரில் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹10,141 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹9,296 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,651 ஆகவும் உள்ளது. இஸ்ரேல் -ஈரான் போர் காரணமாக தங்கத்தின் விலை மேலும் உயரும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்

நகை கடன் கட்டுப்பாடு தளர்கிறது

நகைக் கடன் சார்ந்த கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்மையில் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், நிதி அமைச்சகம் நகைக்கடன் பெறுவது தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது

TODAY GOLD RATE

சென்னையில் இன்று (மே 01) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிந்து ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.205 சரிந்து, ஒரு கிராம் ரூ.8,775க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,640 சரிந்து, நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது.

அட்சய திருதியை – ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை

அட்சய திருதியைக்கு ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனைஅட்சய திருதய நாளில் இந்தியாவில் 16000 கோடிக்கு தங்க விற்பனையாக உள்ளது கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை இறங்கத் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் தங்கத்தை வாங்கி குவித்துள்ளனர்