டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.74 லட்சம் கோடி: 6% அதிகரிப்பு
நாட்டில் கடந்த டிசம்பரில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.74 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. 2024, டிசம்பா் மாதத்தை ஒப்பிடுகையில் (ரூ.1.64 லட்சம் கோடி) இது 6 சதவீத அதிகரிப்பாகும். கடந்த நவம்பரில் ரூ.1.70 லட்சம் கோடி ஜிஎஸ்டி கிடைக்கப் பெற்ற நிலையில், டிசம்பரில் வருவாய் உயா்ந்துள்ளது.
பிரிட்ஜ், ஏர் கூலருக்கு தர குறியீடு கட்டாயம்
பிரிட்ஜ் ,ஏர்கூலர் கேஸ் அடுப்பு, போன்ற வற்றுக்கு தரக்குறியீடு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமுலுக்கு வருகிறது
கூட்டணி முடிவு செய்ய பிரேமலதா ஆலோசனை
சட்டப்பேரவை தேர்தலில் தங்களது கூட்டணி திமுக-வுடனா அதிமுக-வுடனா என இறுதி செய்யும் முயற்சியில் தேமுதிக தீவிரமாக இருக்கிறது. இது தொடர்பாக சென்னையில் வரும் 5-ம் தேதி மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
பழைய ஓய்வூதியத் திட்டம் – முதல்வர் நாளை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 8-ம் நாளாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வைகோ நடை பயணத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திருச்சியில் இருந்து நடை பயணம் தொடங்குகிறார். சமத்துவ நடை பயணம் என்று அறிவித்துள்ளார் இதன் முக்கிய அம்சமாக போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும். இந்த நடை பயணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருச்சியில் தொடங்கி வைத்தார் அப்போது போதை பொருட்களை ஒழிக்க மத்திய மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த மாதத்தில் வடபழனி -போரூர் மெட்ரோ ரெயில்
சென்னை பூந்தமல்லியில் இருந்து போரூர் வரைக்கும் மெட்ரோ ரயில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. இதன் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது . இந்த ரயில் இந்த மாதம் போக்குவரத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போரூரில் இருந்து நேரடியாக வடபழனிக்கும் ரயில் போக்குவரத்தை தொடங்க ஆலோசனை நடந்து வருகிறது .இந்த மாத இறுதியில் இந்த போக்குவரத்து தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. முதலில் போரூர் முதல் வடபழனி வரை நேரடி போக்குவரத்தையும் பின்னர் ஜூன் மாதம் இடையில் […]
ஷார்ட் வீடியோக்களால் மனநல பாதிப்பா?? புதிய ஆய்வு
சுமார் 100,000 பேரை உள்ளடக்கி நடத்தப்பட்ட ஒரு புதிய பெரிய ஆய்வில், infinite-scroll தளங்களில் அடிக்கடி குறுகிய கால வீடியோக்களை பார்ப்பது, பலவீனமான சிந்தனைத் திறன் மற்றும் மோசமான மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை அதிகம் பயன்படுத்துபவர்களிடம் குறைந்த கவனக்குவிப்பு, குறைவான சுயக்கட்டுப்பாடு மற்றும் பலவீனமான அடிப்படைத் தர்க்க அறிவு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களிடம் அதிகப்படியான பதற்றம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு காணப்படுகிறது. வேகமான மற்றும் அதிகத் தூண்டுதலைத் தரும் உள்ளடக்கங்களைத் […]
பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு தரிசனம்
குரோம்பேட்டை பத்மநாப நகர் ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாதாரணை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கருமாரி அம்மனை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் புத்தாண்டை முன்னிட்டு கேசரி வழங்கப்பட்டது.
டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்
ல்லி அருகே ஃபரிதாபாத்தில் லிப்ட் தருவதாகக் கூறி, 28 வயது பெண்ணை வேனில் ஏற்றி பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசிய கொடூரம். பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரில் விசாரணை நடத்தி சிசிடிவி மூலம் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குர்ஆன் சாட்சியாக பதவியேற்ற நியூயார்க் மேயர்
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமியர் ஒருவர் நியூயார்க் நகர மேயரானார் என்ற வரலாறு படைத்த ஜோரான் மம்தானி, இன்று குர்ஆன் சாட்சியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டு சரித்திரத்தில் இன்னொரு புதிய பக்கத்தை சேர்த்துள்ளார்.