எம்ஜிஆர்போல் யாராவது உண்டா?… கே.பி.முனுசாமி கேள்வி

100 பேரை அடிப்பதுபோல் ஷோ காட்டுவோர் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்கள்? இப்போது உள்ள நடிகர்கள் மது குடிப்பது, 4 பெண்களுடன் நடனம் ஆடுவதுபோல் ஷோ காட்டுகின்றனர். மக்களுக்கு நல்ல அறிவுரை வழங்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் எம்ஜிஆர்; சம்பாதித்த பணத்தை மக்களுக்கு கொடுத்த எம்ஜிஆர்போல் நடிகர்கள் யாராவது உள்ளனரா?

ஜனநாயகன் திரைப்படம் தீர்ப்பு ஒத்திவைப்பு.

’ஜனநாயகன்’ பட சென்சார் சான்றிதழ் தொடர்பான மேல் முறையீடு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

செங்கோட்டையன் கட்சித் தாவலா?

தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்த அதிமுக பிரமுகர் செங்கோட்டையன் கடந்த சில நாட்களாக தனக்கு கட்சியில் மதிப்பு இல்லை, எனவே வேறு கட்சிக்கு செல்ல திட்டமிட்டு வருகிறார். என்று செய்தி வெளியாகியது அதனை செங்கோட்டையன் இன்று மறுத்துள்ளார்.

சட்டசபையில் 4-வது ஆண்டாக கவர்னர் மோதல்

கடந்த 3 ஆண்டுகளைப் போலவே, தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி. அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் கூறவே, தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவது மட்டுமே மரபு என சபாநாயகர் விளக்கம் அதனை ஏற்க மறுத்து அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.

தமிழக சட்டசபை 24-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜனவரி 24-ம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை (ஜனவரி 21) அன்று சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். ஜனவரி 22-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப் பெற்று விவாதம் தொடங்கும். ஜனவரி 23-ம் தேதி 2022 -2023 ஆம் ஆண்டுக்குரிய மிகை செலவுக்கான மானிய கோரிக்கை […]

ஆளுநர் உரை இல்லாத -சட்டசபை சட்டத்தை திருத்த ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் உரையை ஆர். என். ரவியால் படிக்க முடியவில்லை. இதனால் அவர் வந்த சில நிமிடங்களில் வெளியேறினார்.இந்தப் பிரச்சனைகளை தவிர்க்க ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கிடும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகளை இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு நாடாளுமன்றத்தில் திமுக முன்னெடுக்கும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சபரிமலை தங்கம் திருட்டு தமிழகத்தில் அமலாக்க பிரிவு சோதனை

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருடப்பட்டதன் மூலம் கிடைத்த சட்டவிரோத வருமானத்தை பணமோசடி செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 21 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1.11 லட்சத்தை கடந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,11,200க்கு விற்பனை. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.2,320 அதிகரித்தது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது

மோடி கூட்டத்தில் தினகரன் பங்கேற்பு

23ஆம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் NDA பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்று அதிகாரப்பூர்வமாக இணைகிறார். அந்த கூட்டத்திற்கு அமமுக தொண்டர்களை அழைத்து வருமாறு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.

வருகிற பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறினர். பெயர் சேர்ப்பதற்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. பெயர் சேர்க்க வரும் 30ம் தேதி வரை அவகாசம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.